search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Sathyaraj"

  • ”கேங்க்ஸ் குருதி புனல்” என்ற வெப் சீரிஸின் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளது
  • நடிகர் அசோக் செல்வன், சத்யராஜ், நிமிஷா சஜயன், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

  ஓடிடி தளத்தில் முதன்மை தளமான அமேசான் ப்ரைம் வீடியோ மார்ச் 20 ஆம் தேதி மும்பையில் "ப்ரைம் வீடியோ பிரசண்ட்ஸ்" என்ற விழாவை நடித்தினர். இவ்விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் பங்கேற்றனர்.

  2024 ஆம் ஆண்டில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் என்னனென்ன படங்கள் இடம்பெற போகிறது என்பதை அறிவிப்பதற்காகவே இந்த விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் அடுத்த ஆண்டு வெளியாகும் 69 படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பற்றிய தகவல்களை வெளியிட்டனர்.

  தமிழ் சினிமாவில் மிகவும் எதிர் பார்க்கப்படும் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் கங்குவா படத்தை 80 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்நிலையில் "கேங்க்ஸ் குருதி புனல்" என்ற வெப் சீரிஸின் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளது. நடிகர் அசோக் செல்வன், சத்யராஜ், நிமிஷா சஜயன், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

  இக்கதை 70 காலக்கட்டத்தில் நடக்கும் நாடகமாகும், ஒரு துறைமுக நகரத்தின் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலுக்குள் பழிவாங்கும் மற்றும் அதிகாரத்தை மீட்டெடுக்கும் ரத்தப் போராட்டமாக இக்கதைக்களம் அமைந்துள்ளது.

  ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இந்த வெப் சீரிஸ்சில் கிரியேட்டிவ் ப்ரொட்யூசராக பணியாற்றி இருக்கிறார். நோவா இக்கதையை இயக்கியுள்ளார். இக்கதையை நோவாவுடன் சேர்ந்து தமிழ் பிரபா மற்றும் பிரபு காளிதாஸ் எழுதியுல்ளனர். கேங்க்ஸ் குருதி புனல் வெப்சீரிசின் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கபடவில்லை.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • கடந்த சில நாட்களாகவே திவ்யா சத்யராஜ் அரசியலுக்கு வர போகிறார், பாஜகவில் சேர போகிறார் என்று தகவல்கள் பரவி வந்தன
  • இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

  கடந்த சில நாட்களாகவே திவ்யா சத்யராஜ் அரசியலுக்கு வர போகிறார், பாஜகவில் இணைய போகிறார் என்று தகவல்கள் பரவி வந்தன. சத்யராஜ் தி.க கொள்கைகளில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் அவரது மகள் பாஜகவில் சேர போகிறாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

  இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  அதில், கடந்து சில மாதங்களுக்கு முன்பு ஊடகத்தில் அரசியலில் ஆர்வம் இருக்கிறது என நான் கூறிய பிறகு பலரும் எந்த கட்சியில் சேருவீர்கள்? உங்களுக்காக சத்யராஜ் பிரச்சாரம் செய்வாரா? மேயர் பதவிக்கு ஆசைப்படுகிறீர்களா? ராஜ்ய சபா எம்.பி சீட் கேட்பீர்களா? என பல கேள்விகளை என்னிடம் கேட்டார்கள்.

  நான் அரசியலுக்கு வருவது பதவிக்காக அல்ல. மக்கள் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக. மகிழ்மதி இயக்கம் என்ற அமைப்பை கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறேன். அதன் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை இலவசமாக நாங்கள் அளித்து வருகிறோம்.

  அந்த வகையில் அரசியலில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். பாஜகவில் இருந்து வரும் தேர்தலில் போட்டியிட எனக்கு அழைப்பு வந்தது உண்மை தான். ஆனால் எந்த ஒரு மதத்தை போற்றும் கட்சியிலும் இணைய விருப்பம் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம் நான் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதில்லை.

  நான் எந்த கட்சியில் இணைய போகிறேன் என்பதை வரும் மக்களவை தேர்தலுக்கு பின் அறிவிப்பேன். புரட்சி தமிழன், தோழர் சத்யராஜின் மகளாகவும், தமிழ் மகளாகவும் தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப்பேன்" என்று அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

  • ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’.
  • இப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  ஆர்.ஜே.பாலாஜி தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இதில் சிகையலங்கார நிபுணராக நடித்துள்ளார். இதற்காக அவர் சுமார் ஒன்றரை மாதம் சிகையலங்கார நிபுணர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.


  இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


  இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, "படத்தின் டிரைலரை பார்த்தேன். அருமையாக இருந்தது. அதை விட சூப்பராக 'சிங்கப்பூர் சலூன்' என்ற டைட்டில் இருக்கிறது. பாலாஜியைத் திரையில் பார்க்க நன்றாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு நானும் பாலாஜியும் மொட்ட மாடியில் ஒரு மணி நேரம் தம் அடித்துக் கொண்டே பல கதைகள் பேசியுள்ளோம். அவருடைய வளர்ச்சி, அவர் தைரியமாக கருத்துகளைப் பேசும் விதம் எல்லாவற்றையும் ரசிக்கிறேன்.


  கோகுல் கொஞ்சம் டார்ச்சர்தான். ஆனால், திறமையான இயக்குனர். அவருடன் வேலைப் பார்த்த இரண்டு படங்களும் மிகச்சிறந்த அனுபவம். இதைவிட மிகப்பெரிய மேஜிக் படங்களில் செய்வார். சத்யராஜ் சாரின் நடிப்பைத் திரையில் பார்ப்பதே அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அவருடைய எந்தப் படத்தையும் பார்ப்பது சிறந்த அனுபவம். அவருடன் சரிக்கு சமமாக நடிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக அது இருக்க வேண்டும்." என்றார்.

  • நரேந்திர மூர்த்தி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார்.
  • இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

  அமெரிக்கா மற்றும் மலேசியாவில் ஆவண படங்களை எடுத்திருக்கும் நரேந்திர மூர்த்தி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். சேகர் ஜி புரோடக்ஷன்ஸ் சார்பில் இளையராஜா சேகர் தயாரிக்கும் இந்த புதிய படம் டார்க் காமெடி கதையம்சத்தில் உருவாக இருக்கிறது.


  இந்த படத்தில் சத்யராஜ், வெற்றி, எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, சச்சு, பிராத்தனா, ஐரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கோடியில் ஒருவன் மற்றும் குரங்கு பொம்மை படங்களில் பணியாற்றிய ஆர்.உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.


  ஜெரார்டு ஃபெலிக்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராமர் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இவர் முன்னதாக அசுரன், வடசென்னை மற்றும் விடுதலை போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. முழு வீச்சில் இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் பல இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

  • தமிழ் திரையுலகில் பன்முகத்தன்மை கொண்டவர் சசிகுமார்.
  • புதிய வெப் சீரிஸ்-ஐ இயக்க இருக்கிறார்.

  தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் சசிகுமார். இவர் எழுதி, இயக்கி, நடித்த வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் திரையுலகின் மைல்கல்லாக அமைந்தது. இதோடு இவர் இயக்கிய படங்களும் வெற்றி வாகை சூடியுள்ளன.

   


  இந்த நிலையில், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸ் இயக்க இருப்பதாக சசிகுமார் தெரிவித்து இருக்கிறார். மேலும் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த வெப் சீரிசில் சத்யராஜ் நடிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

  • பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
  • திரைப்பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களது உதவிக்கரத்தை நீட்டி வருகின்றனர்.

  கடந்த சில நாட்களாக 'மிச்சாங்' புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.


  இதைத்தொடர்ந்து, பல திரைப்பிரபலங்களும் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களது உதவிக்கரத்தை நீட்டி வருகின்றனர். இந்த வரிசையில் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள 'வெப்பன்' திரைப்படக்குழுவும் இணைந்துள்ளது.


  இதன் தயாரிப்பாளர் மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் மற்றும் அவரது குழுவினர் மதுரவாயல், பள்ளிக்கரணை, வளசரவாக்கம் என சென்னையின் ஏரி சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் மளிகை சாமான்கள் அடங்கிய 400 பெட்டிகளைக் கொடுத்து உதவியுள்ளனர். 'வெப்பன்' படக்குழுவின் இந்த நெகிழ்ச்சியான செயலுக்கு உதவி பெற்ற மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

  • சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ‘வெப்பன்’.
  • இந்த படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார்.

  குகன் சென்னியப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வெப்பன்' . இப்படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, தன்யா ஹோப், யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலு பிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரீம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி மற்றும் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


  மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பில் எம்.எஸ். மன்சூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.


  இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி 'வெப்பன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மறக்க முடியாத மற்றும் சிறந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தத் திரைப்படம் நிச்சயம் கொடுக்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

  • சத்யராஜ்க்கு ஆறுதல் கூறும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திப்பு.
  • முதலமைச்சருடன் அமைச்சர்களாக துரைமுருகன், சேகர் பாபு உள்ளிட்டோர் இருந்தனர்.

  நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் (94) கடந்த மாதம் 11ம் தேதி அன்று வயது மூப்பு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

  இந்நிலையில், சத்யராஜ்க்கு ஆறுதல் கூறும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார். முதலமைச்சருடன் அமைச்சர்களாக துரைமுருகன், சேகர் பாபு உள்ளிட்டோர் இருந்தனர்.

  இதையடுத்து நடிகர் சத்யராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் வந்து சந்தித்தது ஆறுதலாக உள்ளது.

  சனாதானம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக பேசியுள்ளார். அமைச்சர் உதயநிதியின் துணிச்சலை பாராட்டுகிறேன்.

  எதிர்ப்புக்கு பிறகு ஒவ்வொரு விஷயத்தையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையாளும் விதம் பெருமையாக உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் சமீபத்தில் காலமானார்.
  • இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்தனர்.

  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் (94). இவர் கோவையில் வசித்து வந்தார். இவர் வயது மூப்பின் காரணமாக ஆகஸ்ட் 11-ஆம் தேதியன்று மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார். நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்தனர்.


  சத்யராஜ் -நாதாம்பாள்

  இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் சத்யராஜை நேரில் சந்தித்து அவரது தாயார் நாதாம்பாள் மறைவிற்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  • சத்யராஜின் தயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், நடிகர், நடிகைகள் உள்பட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
  • நாதாம்பாள் உடலுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் வயது முதிர்வு காரணமாக கோவையில் வசித்து வந்தார். அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததில் நேற்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 94. நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

  சத்யராஜின் தயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், நடிகர், நடிகைகள் உள்பட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  இதையடுத்து நாதாம்பாள் உடலுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நாதாம்பாளின் உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறுகிறது.