மெட்ராஸ் மேட்னி படத்தின் செகண்ட் சிங்கிள் இன்று மாலை வெளியீடு

அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.திரைப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி வெளியாகிறது.
மெட்ராஸ் மேட்னி படத்தின் செகண்ட் சிங்கிள் இன்று மாலை வெளியீடு
Published on: 

அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஒரு மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையில் சந்தோஷம் மற்றும் சுவாரசியம் எங்கே இருக்கிறது என்ற கேள்வியுடன் நம் அனைவரின் கதையை பிரதிபலிக்கும் வகையில் ஒரு எதார்த்த கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான `என்னடா பொழப்பு இது'பாடலை படக்குழு வெளியிட்டு அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாடலான உசுரே உன்ன தானே பாடல் இன்று மாலை 7 மணிக்கு படக்குழு வெளியிடவுள்ளது. இப்பாடலை சினேகன் வரிகளில் விஜய் யேசுதாஸ் பாடியுள்ளார். திரைப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் ஜி.கே, இசை கே.சி பாலசரங்கன், படத்தொகுப்பு சதீஷ் குமார், கலை வடிவத்தை ஜாக்கி மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com