தனுஷ் மற்றும் இட்லி கடை படத்தை பற்றி கோவை பாஷையில் வெளுத்துக்கட்டிய சத்யராஜ்

நான் ராஜமவுலி இயக்கம் முதல் கொண்டு நடித்து பாத்திட்டனுங்க. இவருகிட்ட (தனுஷ்) நடிப்பது ரொம்ப சிரமமுங்க.
தனுஷ் மற்றும் இட்லி கடை படத்தை பற்றி கோவை பாஷையில் வெளுத்துக்கட்டிய சத்யராஜ்
Published on

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படம் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் நித்யா மேனன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை படத்தின் இசை வெளியீடு விழா நடைபெற்றது.

இன்று கோவையில் உள்ள மாலில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சத்யராஜ், கோவை பாஷையில் பேசி அசத்தினார்.

அவர் தனுஷ் மற்றும் இட்லி கடை படம் குறித்து கூறியதாவது:-

நான் ராஜமவுலி இயக்கம் முதல் கொண்டு நடித்து பாத்திட்டனுங்க. இவருகிட்ட நடிப்பது ரொம்ப சிரமமுங்க. இப்படித்தான் நடிக்கனும். இந்த பக்கம், அந்த பக்கம் நகர முடியாதுங்க. ஆனா ஒன்னும் மட்டும் தெரியுதுங்க. இட்லி கடை பட்டைய கௌப்ப போதுங்க. இது கண்டிப்பாக தெரியுதுங்க.

சமீப காலத்தில் எத்தனை டிரைலர் பாத்திருக்கோம்ங்க. எல்லாம் டமால் டுமில்தான் என இருந்திருக்கும்ங்க. ஒரு டைரக்டர் சிரிக்க வேண்டும்னு காட்சி வச்சா சிரிக்கனும்ங்க. அழுகனும்னு காட்சி வச்சா, அழுகனும்ங்க. எகிறி அடிக்கனும்போது கைதட்டனும்னா தட்டனும்ங்க. அதற்கு பெயர்தான் சினிமா. அதுதான் இட்லி கடைங்க..

இவ்வாறு சத்யராஜ் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com