search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaa vathiyaar"

    • இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் உள்ளிட்ட பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
    • கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை கார்த்தி 26 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளனர்.

    நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் இவருடைய 25 ஆவது படமான ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

    அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடித்துள்ளார். சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி.

    இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 'கார்த்தி 26' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் உள்ளிட்ட பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை கார்த்தி 26 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளனர். படத்திற்கு 'வா வாத்தியார்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.

    போஸ்டரில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடித்த பல கதாப்பாத்திரங்களின் வேடத்தில்  நிற்கின்றனர். கார்த்தி வித்தியாசமான போலிஸ் கெட்டப்பில் சிவப்பு நிற கண்ணாடியை அணிந்து காணப்படுகிறார். எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார் என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×