என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.ஜி.ஆர்"

    • தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி திரை உலகில் சுமார் 167-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
    • முதல் படத்திலேயே அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டதோடு, தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

    இப்போ இருக்குற 2 கே கிட்ஸ்-க்கு லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நயன்தாராவை தான் கூறுவார்கள். ஆனால் 1960 காலக்கட்டங்களில் தி ஒரிஜினல் OG லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நடிகை சரோஜாதேவி தான். சுமார் 30 ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகை ஆண்ட இந்த நடிகை சரோஜா தேவி யார்?

    தமிழ் திரை உலகில் அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்தவர் சரோஜா தேவி (87). தன் நடிப்பாலும், உடல் அசைவுகளாலும், நலினத்தாலும் ஒட்டு மொத்த தென்னிந்திய திரை உலகத்தையே கட்டுப் போட்டு கால் நூற்றாண்டுக்கு மேலாக வெற்றிக்கரமாக பயணித்து வந்தார். அவரது நடை, உடை, முகபாவனைகள், சிகை அலங்காரங்கள், நடிப்பு ஆகிய அனைத்தும் திரை உலக ரசிகர்களை மிகவும் கவர்ந்து வந்தது.

    தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி திரை உலகில் சுமார் 167-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1955-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை 29 ஆண்டுகள் தொடர்ச்சியாக படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்த ஒரே இந்திய நடிகை சரோஜா தேவி.

    சிறுவயதில் இருந்தே நடனம் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருந்த சரோஜாதேவியை நடிக்க ஊக்குவித்தவர் அவரது அப்பா பைரப்பாதான். 13 வயதிலேயே சரோஜாதேவிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அப்போது அதனை மறுத்துவிட்ட அவர், 1955ம் ஆண்டு தனது 17 வயதில் 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப் படத்தில் நாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டதோடு, தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

    தமிழ் திரையுலகில் பல கதாநாயகிகள் வந்து சென்றாலும், சரோஜா தேவியின் இடத்தை யாராலும் கைப்பற்ற முடியவில்லை. இவர் கொஞ்சி பேசும் வசனங்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இக்காலக்கட்டத்தில் கதாநாயகிகள் வைரல் அல்லது புகழடைய வேண்டுமென்றால் ஒரு படத்தில் அல்லது ஒரு பாடலில் கவர்ச்சி உடையணிந்து பார்வையாளர்களை கவர்ந்து  சினிமா மார்க்கெட்டில் அவர்களை தக்க வைத்துக் கொள்கின்றனர் ஆனால் எந்த வித நீச்சல் ஆடை அணியாமல் கவர்ச்சி உடை அணியாமல் முன்னணி அந்தஸ்துடைய கதாநாயகியாக சரோஜா தேவி திகழ்ந்தார்.

     

    எம்.ஜி ஆர் உடன் 26 படங்களிலும். சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். 50 ஆண்டு திரைப்பயணத்தில் 2000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

     1990-ம் ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்து வந்தார். 1997-ல் வெளிவந்த ஒன்ஸ்மோர் படத்தில் சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சூர்யா நடித்த ஆதவன் படம் தான் இவர் கடைசியாக நடித்த தமிழ் படம். பல ஆண்டுகளாக பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது வீட்டில் வாழ்ந்து வந்தார்.

    வயது முதிர்வு காரணமாக சில ஆண்டுகளாக சரோஜா தேவி உடல்நலக் குறைவினால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமாகி இன்று காலை காலமானார்.

     

     

    தமிழ் திரை உலக ரசிகர்கள் மனதில் இன்றும் அபிநய சரஸ்வதியாக வாழ்ந்து வந்த சரோஜா தேவியின் மரணம் திரை உலகை மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    • நாடோடி மன்னன் படத்துக்கு பல தனிச்சிறப்புகள் உண்டு.
    • நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய முதல் திரைப்படம் ஆகும்.

    சரோஜாதேவி சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் அவரை சினிமா உலகில் உச்சத்துக்கு கொண்டு சென்ற படம் 'நாடோடி மன்னன்' தான். நாடோடி மன்னன் படத்துக்கு பல தனிச்சிறப்புகள் உண்டு.

    நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய முதல் திரைப்படம் ஆகும்.

    இந்த படத்தில் முதல் கதாநாயகி பானுமதி. 2-வது கதாநாயகியாக சரோஜா தேவி. இந்த படத்தில் கதாநாயகியாக சரோஜா தேவியை நடிக்க வைக்க சில எதிர்ப்புகள் கிளம்பினாலும் எம்.ஜி.ஆர் அவரை கதாநாயகி ஆக்குவதில் உறுதியாக இருந்தார்.

     

    தமிழ் சினிமாவில் முதல் வண்ண திரைப்படம் 'அலிபாபாவும் 40 திருடர்களும்'. அதே நேரத்தில் பகுதி நேர முதல் வண்ண திரைப்படம் நாடோடி மன்னன்.

    நாடோடி மன்னன் படம் முதல் பாதிக்கும் மேல் கருப்பு வெள்ளை திரைப்படம், பாதிக்கு பிறகு வண்ண திரைப்படமாக வெளியானது.

     

    இந்த படம் சரோஜா தேவியின் அறிமுக காட்சியுடன் வண்ணத்திரைப் படமாக ஆரம்பமாகும். 'கண்ணில் வந்த மின்னல் போல் காணுதே' என்ற பாடல் காட்சியுடன் சரோஜா தேவி அறிமுகமாவார். தண்ணீருக்கு அடியில் நின்ற படி எம்.ஜி.ஆர், சரோஜா தேவி பாடும் வகையில் இந்த பாடல் காட்சி அமைந்திருக்கும்.

    சரோஜா தேவி அறிமுகமான இந்த பாடல் காட்சி பட்டி தொட்டி எங்கும் ரசிகர்களால் கை தட்டி விசில் அடித்து கொண்டாடப்பட்டது. அதன் பிறகு சரோஜா தேவி தமிழ் திரைப்பட உலகில் தவிர்க்க முடியாத கதாநாயகி ஆனார்.

    ரசிகர்களுக்கு தெரியாத குடும்ப வாழ்க்கை

    சரோஜாதேவியின் இயற்பெயர் ராதாதேவி கவுடா. இவர் பெங்களூரில் 1938-ம் ஆண்டு ஜனவரி 7-ந்தேதி பிறந்தார். அவரது தந்தை பைரப்பா காவல் துறையில் பணிபுரிந்தார். அவரது தாயார் ருத்ரம்மா. அவர்களின் 4-வது மகள்தான் சரோஜாதேவி.

    சரோஜாதேவிக்கு சரஸ்வதிதேவி, பாமாதேவி, சீதாதேவி என்ற 3 அக்காவும் வசந்தா தேவி என்ற ஒரு தங்கையும் உள்ளனர். இளம் பருவத்தில் சரோஜாதேவி தனது தந்தையுடன் அடிக்கடி ஸ்டுடியோக்களுக்கு செல்வார்.

     

    சினிமாவுக்காக நடனம் கற்றுக் கொண்டார். சினிமா படங்களில் நீச்சல் உடைகள் மற்றும் அறைகுறை ஆடைகள் அணிவதை தவிர்த்தார். தமிழ் திரையுலகில் 60 முதல் 70 வரையான கால கட்டங்களில் 17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்த சரோஜாதேவி எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகிய 3 பேருடனும் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர். ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர் நடிகை சரோஜாதேவி.

    இவர் ராதாதேவி என்ற பெயரை திரை உலகிற்காக சரோஜாதேவி என்ற பெயரை மாற்றிக் கொண்டு ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த "மகாகவி காளிதாஸ்" என்ற கன்னடப் படத்தில் (1955) கதாநாயகியாக அறிமுகம் ஆனார். முதல் படமே அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது.

    கன்னடப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிப் புகழ் பெற்ற சரோஜாதேவிக்கு தமிழ்நாட்டில் பெரிய புகழைத் தேடித்தந்த படம் எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன்" இதன் பின்னர் ஸ்ரீதரின் "கல்யாணப் பரிசு" (1959) படத்தில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். சரோஜாதேவி 1967-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி அன்று எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயர் ஸ்ரீ ஹர்ஷாவை திருமணம் செய்து கொண்டார். அந்த நேரத்தில் அவர் நிதி நெருக்கடி மற்றும் வருமான வரி சிக்கல்களை எதிர் கொண்டார்.

    இந்த சிக்கல்களை சமாளிக்க அவரது கணவர் உதவினார். மேலும் அவரது நிதிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்று அவருக்குக் கற்றுக் கொடுத்தார். சரோஜாதேவி கணவர் ஸ்ரீஹர்ஷா 1986-ல் ஆண்டு இறந்தார்.



    • தமிழ்நாட்டில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது.
    • பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது. இதனை சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிப்படுத்தினார்.

    இதனையடுத்து, பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். இந்நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு கோவையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். வேடத்தில் பாஜக கொடியுடன் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலையுள்ளது.

    அதிமுக கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆர். வேடத்தில் இருந்த இருந்த நபர் பாஜக கொடியுடன் நடனமாடிய விவகாரம் அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காங்கயம் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது .
    • எம் ஜி .ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் நகர அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காங்கயம் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது . நிகழ்ச்சியில் காங்கயம் அ.தி.மு.க நகர செயலாளர் வெங்கு.ஜி.மணிமாறன் தலைமையில் எம் ஜி .ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து எம்.ஜி.ஆரின் ஏழை மக்களுக்கான திட்டங்களையும், அவர் குறித்த நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் காங்கயம் அ.தி.மு.க மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு எம் ஜி .ஆரின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி, பாஜக வாக்கு பெற நினைப்பது கீழ்த்தரமானது.
    • தங்கள் தலைவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என இதன்மூலம் தெரிகிறது. கொஞ்சம் கூட பாஜகவுக்கு வெட்கமாக இல்லையா?

    சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் சந்தித்து பேசினார்.

    அப்போது, "அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி, பாஜக வாக்கு பெற நினைப்பது கீழ்த்தரமானது. தங்கள் தலைவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என இதன்மூலம் தெரிகிறது. கொஞ்சம் கூட பாஜகவுக்கு வெட்கமாக இல்லையா?" என்று தெரிவித்தார்.

    மேலும், புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களை போட்டு வாக்கு சேகரித்ததற்கு புதுவை மாநில அதிமுக செயலாளர் ஏற்கனவே கண்டித்துள்ளார். அதிமுக தலைவர்களை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்க பாஜக வெட்கப்பட வேண்டும்

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முகங்களைக் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றால் அது நடக்காது. அந்த இரண்டு முகங்களுக்கு அதிமுக மட்டுமே சொந்தமானது. இப்படியொரு கீழ்த்தரமான அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது.

    திருச்சியில் அண்ணாமலை பேசுவதைப் பார்த்து இருப்பீர்கள். ஏதோ இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய எழுச்சி மாநாட்டை நடத்துவதாக அண்ணாமலை கூறியிருந்தார். ஆனால், நான் டிவியில் பார்த்தேன் எல்லா சேர்களும் காலியாக இருந்தது. காலி சேர்களை பார்த்து அண்ணாமலை பேசி வருகிறார். அந்தக் கூட்டத்தில் யாருமே இல்லை. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எந்தவொரு ஆதரவும் இல்லை

    தமிழகத்தில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் தான் போட்டி. பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக எங்களை மிரட்ட நாங்கள் ஒன்றும் குழந்தைகள் கிடையாது. லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்" என்று அவர் தெரிவித்தார்

    • அரசியல் இயக்கத்தில் மதம் கலக்க கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது
    • அதிமுகவுக்கு ஓட்டு போடும் மக்களை ஏமாற்ற பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.

    மதுரையில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அதில், பிரதமர் மோடி நன்றாக நடிக்கிறார். அவர்கள் கட்சி தலைவர்களான வாஜ்பாய், அத்வானிக்கு மாற்றாக அதிமுக தலைவர்களின் புகழை பாடுகிறார். அதிமுகவுக்கு ஓட்டு போடும் மக்களை ஏமாற்ற மோடி முயற்சிக்கிறார். கஜினி முகமது போல பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு படையெடுத்தாலும் சரி, மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    அரசியல் இயக்கத்தில் மதம் கலக்க கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது. அதை தமிழக மக்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள். ராமர் கோயில் கட்டுவதை குறை சொல்லவில்லை. அதை மக்கள் மத்தியில் பிரச்சாரமாக எடுத்து செல்ல கூடாது. பாஜக எவ்வளவு உருண்டாலும் அவர்களை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் ஒரு அரசியல் நாடகம் தான். தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்த பிரதமர் ஏன் இந்த கட்டுமானம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவேயில்லை. எப்படியாவது மருத்துவமனையை கட்டி முடித்தால் சரி தான் என் அவர் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார்.

    இதனை அடுத்து, புதுச்சேரியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன் பிரதமர் மோடி, அமித்ஷா, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரின் படங்களுடன், வாக்களிப்போம் தாமரைக்கே என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியிருந்தது பரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • மலரவனுக்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். தான் பெயர் வைத்தார்.
    • சில மாதங்களாக மலரவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    கோவை:

    கோவை மாநகராட்சி முன்னாள் மேயராகவும், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் மலரவன்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இவர் தீபா கட்சியில் இணைந்து செயல்பட்டார். பின்னர் அங்கிருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    கடந்த சில மாதங்களாக மலரவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அரசியலில் இருந்து விலகி கோவை கணபதி பாரதிநகரில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று காலை மலரவன் மரணம் அடைந்தார்.

    மலரவனுக்கு இந்த பெயரை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். தான் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மலரவன் அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோருடன் நெருங்கிய பழக்கத்தில் இருந்தவர்.

    ×