என் மலர்
நீங்கள் தேடியது "அ.தி.மு.க."
- சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள புது வியூகம்.
- எம்.எல்.ஏ.க்களுடன் அமர்ந்து எடப்பாடி பழனிசாமியும் உணவு அருந்துகிறார்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகியுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினரை உற்சாகத்தோடு வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளார்.
இதன்படி இன்று இரவு சென்னை அடையாறு பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் இரவு விருந்துக்கு அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த விருந்தில் 7 வகையான அசைவ உணவுகள் பரிமாறப்படுகிறது.

மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், மட்டன் சுக்கா, முட்டை, இறால் தொக்கு ஆகியவை பரிமாறப்படுகிறது. அதே நேரத்தில் அசைவ சாப்பாட்டை விரும்பாதவர்கள், சைவ உணவை அருந்தும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சைவ உணவில் இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, ஆகியவற்றுடன் சாதம் சாம்பார், ரசம், பொரியல், அவியல் போன்றவையும் இடம் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களையும் தொலைபேசியில் அழைத்து நீங்கள் சைவமா? அசைவமா? என கேட்டு, அதற்கேற்ப உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.
இந்த இரவு விருந்தின் போது எம்.எல்.ஏ.க்களுடன் அமர்ந்து எடப்பாடி பழனிசாமியும் உணவு அருந்துகிறார்.
அப்போது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களது தொகுதி மக்களிடம் சென்று அவர்களது பிரச்சனைகளை கேட்டு தெரிந்து கொண்டு அதற்கேற்ப வேகமாக செயல்பட வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளார். எடப்பாடி பழனிசாமி அளிக்க உள்ள இந்த இரவு விருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
- அ.தி.மு.க. மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.
- 40 தொகுதிகளில் களம்மிரங்குவதற்கு பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்பதே அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் கணக்காக உள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய அ.தி.மு.க., தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் அந்தக் கட்சிக்கு தேர்தலில் தோல்வியே கிடைத்தது.

இதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணிக்கு காய் நகர்த்திய எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அணியில் இருந்து கட்சிகளை இழுத்து புதிய கூட்டணியை அமைத்து விடலாம் என திட்டமிட்டார். ஆனால் அதற்கான சூழல் ஏற்படவே இல்லை .
இந்த நிலையில் தான் அ.தி.மு.க. மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் சேர உள்ளன.
ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த டி.டி.வி. தினகரன் ஓ. பன்னீர்செல்வம், டாக்டர் கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன் ஆகியோரும் இந்த கூட்டணியிலேயே தொடர உள்ளனர்.
இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான புதிய கூட்டணி மெகா கூட்டணியாகவே மாறி இருக்கிறது. இப்படி அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எத்தனை இடங்களை குறி வைத்து காய் நகர்த்தி வருகின்றன என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.
2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ஜ.க. 20 தொகுதிகளில் போட்டியிட்டது. தற்போது இரண்டு மடங்கு கூடுதலாக அந்த கட்சி தொகுதிகளை எதிர்பார்க்கிறது. இதன் மூலம். 40 தொகுதிகளில் களம்மிரங்குவதற்கு அந்த கட்சி திட்டமிட்டு உள்ளது.
பா.ம.க.விற்கு 15 தொகுதிகள் தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் தினகரனுக்கு 10 தொகுதிகள் என முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஓ.பன்னீ செல்வதற்கு தற்போது நான்கு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களை தக்க வைக்கும் வகையில் நான்கு இடங்களை ஒதுக்க லாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தவிர மீதமுள்ள சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளை ஒதுக்கி கொடுப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டணியில் 150 இடங் களில் போட்டியிடுவதற்கு அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ள தன் மூலம் மீதமுள்ள 84 தொகுதிகளையும் பார திய ஜனதா கட்சியிடம் கொடுத்துவிட்டு அவர்கள் மூலமாக மற்ற கட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக வும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. , பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு கள் எவை? எவை? என்பது பற்றிய பட்டியலை தயா ரித்து வைத்துள்ளன.அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி உறுதியாகி இருப்பது போல மற்ற கட்சிகளுடனும் கூட்டணியை இறுதி செய்த பிறகு யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என் கிற விவரங்களை தேர்தல் நேரத்தில் வெளியிடுவ தற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியும் தங்களுக்கு செல் வாக்கு உள்ள பகுதியான கொங்கு பகுதியில் குறிப் பிடத்தக்க தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிட வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளது. இதே போன்று பாட்டாளி மக்கள் கட்சி வடமாநிலங்களில் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை பெறுவதிலும் கவனம் செலுத்த தொடங்கி யுள்ளது.
இப்படி கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகள் தங்களுக்கு தேவையான இடங்களை பெறுவதில் தீவிரம் காட்ட தொடங்கி யுள்ளது.இதன்மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க, கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக விரைவில் இறுதி செய்யப் பட்டு தொகுதி பங்கீடும் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
- சட்டசபையில் நான் பேசும் போது மட்டும் மைக் ஆப் செய்யப்பட்டு வருகிறது.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் 6 மாதத்தில் பல கட்சிகள் இணையும்.
கோவை:
பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பா.ஜ.க என்பது ஜனநாயக ரீதியில் இயங்கூடிய ஒரு கட்சி. பா.ஜ.க தலைவராக இருந்த அண்ணாமலை தனது பதவியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். கட்சி பணியிலும் சரி, தேர்தல் பணியிலும் சரி அவர் சிறப்பாகவே தனது பணியை செய்துள்ளார்.
பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் ஏற்கனவே அமைச்சர், எம்.எல்.ஏ.வாக இருந்தவர். கட்சி விரிவுபடுகிற போது கட்சியில் இணைபவர்களுக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கி அவர்களின் செயல்பாட்டை பா.ஜ.க. பார்த்து வருகிறது. நயினார் நாகேந்திரன் தலைமையில் பா.ஜ.க. கட்சி சிறப்பாக செயல்படும். அவரது செயல்பாட்டால் நன்மைகள் கிடைக்கும்.
நான் மாநில தலைவராக அல்ல, தேசிய தலைவராக இருக்கிறேன். இந்தி தெரியாத எனக்கு பெரிய பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கிறது பா.ஜ.க. பொறுப்பு வேண்டும் என்று நானாக எப்போதும் கேட்டதில்லை. கட்சி கொடுக்கும் பணிகளை செய்கிறேன்.
தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்படும். இந்த கூட்டணியின் ஒரே நோக்கம் 2026-ல் தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்புவது தான்.
2026-ம் ஆண்டில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்போம். கூட்டணி ஆட்சி பற்றி தலைவர்கள் முடிவு செய்வார்கள்.
சட்டசபையில் நான் பேசும் போது மட்டும் மைக் ஆப் செய்யப்பட்டு வருகிறது. மற்ற கட்சி தலைவர்கள் பேசும் போது அவர்களின் பேச்சு நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆனால் நான் பேசுவது மட்டும் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. சட்டசபையில் பேரவை தலைவரின் செயல்பாடு திருப்தியாக இல்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் 6 மாதத்தில் மேலும் பல கட்சிகள் இணையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
- சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜனதா இடையே மீண்டும் கூட்டணி ஏற்படும் என்ற கருத்து நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது கூட்டணி அமைவதற்கான சூழலை உறுதிப்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுவார் என்றும், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் பேச்சு அடிப்படுகிறது.
இதனால் அண்ணாமலையே மீண்டும் தமிழக பா.ஜ.க. தலைவராக தொடர வேண்டும் என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க. கட்சியினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர். அதில், இந்தியாவுக்கு நரேந்திரமோடி, தமிழ்நாட்டுக்கு அண்ணாமலை என அதில் அச்சிடப்பட்டு உள்ளது.
அந்த போஸ்டரில் வேண்டும், வேண்டும் அண்ணாமலை வேண்டும். வேண்டாம், வேண்டாம் அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலையே நீடிக்க வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- அ.தி.மு.க.வில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
- கூட்டணி பற்றி பேச்சு நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கட்சிகள் இடையே மீண்டும் கூட்டணி உருவாவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக பிரச்சனைகளுக்காக அமித் ஷாவை சந்தித்து மனு அளித்தார். அப்போது அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட் டணி தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை மத்திய மந்திரி அமித் ஷாவும் உறுதி செய்துள்ளார்.
அதே நேரத்தில் டெல்லி சென்ற அ.தி.மு.க. மூத்த தலைவரான செங்கோட்டையனும் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இதனால் அ.தி.மு.க.வில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை பணியவைப்பதற்காக பா.ஜ.க. செங்கோட்டையனை கையில் எடுத்திருப்பதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

அதே நேரத்தில் அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தை பெரிது படுத்தாமல் அமைதியாக இருக்குமாறு செங்கோட்டையனுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் அ.தி.மு.க.வில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனை சரி செய்யும் வகையில் வருகிற 6-ந்தேதி மதுரைக்கு வருகை தரும் பிரதமர் மோடியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம் கூட்டணி ஆகியவை பற்றி இருவரும் பேச்சு நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க.வினர் மீது வழக்குகள் போடப்பட்டது.
- வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளோம் என்றார்.
பல்லடம் :
அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட வழக்கிலிருந்து தி.மு.க.வினர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட வழக்கிலிருந்து பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் நகரமன்ற தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம், முன்னாள் நகர செயலாளர் லோகநாதன், நகர பொருளாளர் குங்குமம் ரத்தினசாமி,முன்னாள் மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் மோகன்தாஸ் காந்தி, நகர பிரதிநிதி சம்பத் உள்ளிட்டோர் மீது வழக்குகள் ேபாடப்பட்டது. அந்த வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளோம் என்றார்.
- திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
உடுமலை :
உடுமலை அருகே உள்ள காரத்தொழுவில் அ.தி.மு.க. பொன்விழா நிறைவு, 51ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் திருப்பூர் சி.சிவசாமி சிறப்புரையாற்றினார்.மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.காளீஸ்வரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தகவல்
- நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள ஓய்.ஆர் மஹாலில் மாலை 5 மணிக்கு நடக்கிறது
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 51-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான நாஞ்சில் வின்சென்ட்டு-க்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் விருது வழங்கும் விழா நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள ஓய்.ஆர் மஹாலில் நாளை(1-ந்தேதி) மாலை 5 மணிக்கு நடக்கிறது.
விழாவிற்கு குமரி கிழக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சேவியர்ம னோகரன் தலைமை தாங்குகிறார்.
மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன் வரவேற்று பேசுகிறார். மாவட்ட கழக இணைச் செயலாளர் சாந்தினிபகவதியப்பன், மாவட்ட கழக துணைச் செயலாளர் பார்வதி, மாவட்ட கழகப் பொருளா ளர் திலக், கிழக்கு பகுதி கழகச் செயலாளர் ஜெய கோபால், தெற்கு பகுதி கழகச் செயலாளர் முரு கேஷ்வரன், மேற்கு பகுதி கழகச் செயலாளர் ஜெவின் விசு, மாமன்ற உறுப்பினர் கோபால சுப்பிரமணியம்,
சேகர், ஸ்ரீலிஜா, அனிலாசுகுமாரன், கிழக்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கழக அமைப்புச் செயலாளரும்,
முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் சிறப்புரையாற்றுகிறார்.
அமைப்புச் செய லாளர்கள் சின்னத்துரை, சுதா பரமசிவன், தலைமைக் கழகப் பேச்சாளர் சுப்பையா பாண்டியன், கழக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் கிருஷ்ணதாஸ், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் சிவசெல்வராஜன், கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும்,
மாவட்ட கவுன்சிலருமான பரமேஸ்வரன், குமரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஜாண்தங்கம், குமரி மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சிவ.குற்றாலம் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.
விழாவில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான நாஞ்சில் வின்சென்டுக்கு எம்.ஜி.ஆர் விருதினை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வழங்குகிறார்.
இதனைத் தொடர்ந்து நாஞ்சில் எம்.வின்சென்ட் ஏற்புரையாற்றுகிறார். மாமன்ற உறுப்பினர் அக்சயா கண்ணன் நன்றி கூறுகிறார்.
இவ்விழாவில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், கழக செயல் வீரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் கேட்டு கொண்டுள்ளார்.
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
- 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று எம்.எல்.ஏ. பேசினார்
கோவில்பட்டி:
கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. அப்போது கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. பேசியதாவது:-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பெயர் திருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான சிறப்பு முகாம் இன்று மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதனையடுத்து வருகிற 26 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும். ஒவ்வொரு அ.தி.மு.க. நிர்வாகிகளும் தங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன், அ.தி.மு.க. அவைத் தலைவர் பெருமாள், மாவட்ட துணைச் செயலர் முருகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சத்யா, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலர் விஜயபாண்டியன், முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் ராமர், ஒன்றிய செயலாளர் அன்புராஜ், அ.தி.மு.க. நகர பொருளாளர் ஆரோக்கியராஜ், யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆவின் தாமோதரன், ஆபிரகாம் அய்யாதுரை, மாதவராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, வழக்குரைஞரணி வடக்கு மாவட்டச் செயலர் சிவபெருமாள் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சி.சி.டி.வி. ஆதாரத்துடன் போலீசில் புகார்
- சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை
நாகர்கோவில்:
நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன்.
இவர், புத்தேரி அருகே சக்தி கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று மாலை நாஞ்சில் முருகேசன் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த 2 வாலிபர்கள் நாஞ்சில் முருகேசனிடம் அவரது மகன் சிவா எங்கே என்று கேட்டனர். அப்போது அவர் மகன் வெளியே சென்று இருப்பதாக கூறினார்.
உடனே அந்த வாலிபர்கள் சிவா எங்களிடம் பணம் வாங்கி உள்ளார். வாங்கிய பணத்தை திருப்பி தர வில்லை. பணத்தை உடனே திருப்பி தர வேண்டும் என்று கூறி நாஞ்சில் முருகேசனிடம் கேட்டனர். அப்போது நாஞ்சில் முருகேசனை கொன்று விடுவதாகவும் அந்த வாலிபர்கள் மிரட்டி னார்கள்.
இதையடுத்து நாஞ்சில் முருகேசனின் கார் டிரைவர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர்.உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இது குறித்து நாஞ்சில் முருகேசன் வடசேரி போலீசில் புகார் செய்தார்.
புகாரில் தன்னை கொன்று விடுவதாக மிரட் டிய வாலிபர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். எனக்கும் எனது மகன் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் வாலிபர்கள் நாஞ்சில் முருகேசனை மிரட்டுவது போன்ற சி.சி.டி.வி. ஆதாரத்தையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
போலீசார் அந்த சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை வைத்து நாஞ்சில் முருகேசனை மிரட்டியது யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
- அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரது பெயரை எடுத்துள்ளனர்.
- மாநகராட்சி கவுன்சிலர்களுக்கும் வார்டுகளுக்கு செலவு செய்ய நிதி ஒதுக்க வேண்டும்.
திருப்பூர் :
அ.தி.மு.க. மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரும் 42 வது வார்டு கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி பேசியதாவது :- திருப்பூர் ஈஸ்வரன் கோவில் முன்பு அமைக்கப்பட்ட நிழற்குடைக்கு அ.தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ., சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரது பெயரை எடுத்துள்ளனர். ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்குவதை போல் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கும் வார்டுகளுக்கு செலவு செய்ய நிதி ஒதுக்க வேண்டும். சென்னை மாநகராட்சியை முன்மாதிரியாக கொண்டு திருப்பூர் மாநகராட்சியிலும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சி பகுதிகளில் உள்ளகோவில், பள்ளி, மருத்துவமனை பகுதிகளில் உள்ள மதுபானக்கூடங்களை அகற்ற மாநகராட்சி முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
ம.தி.மு.க. கவுன்சிலர் நாகராஜ் :- குமார் நகர் தொடங்கி காவிரி பாளையம் புதூர் வரை அரசு பேருந்து போதிய அளவில் இல்லை. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் ,வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என பலரும் அன்றாடம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.மாநகராட்சி போதிய பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
மாநகராட்சி பகுதியில் குடிநீர் 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கிறது. வரி வசூல் அதிகரித்துள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாடு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.எனவே சீரான முறையில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற பணிகள் பல்வேறு இடங்களில் தரமற்ற முறையில் உள்ளது. அதனை கண்காணித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து ஆதர வாளர்களை சந்தித்து வருகிறார்.
- அ.தி.மு.க. செயலாளர் காமராஜ் 7 முறை நகர செயலாளராக பதவி வகித்துள்ளார்.
தாராபுரம் :
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என 2 அணியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். மேலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து ஆதர வாளர்களை சந்தித்து வருகிறார். ஒன்றுபட்ட அ.தி.மு.க. என்ற கோஷத்தை முன்வைத்து தனது அணி சார்பில் மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
ஓ.பி.எஸ். அணிக்கு தாவல் :- இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் காமராஜ் தனது ஆதரவாளர்கள் 200 பேருடன் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைய உள்ளார். தாராபுரம் கிளை செயலாளர்கள், அவை தலைவர், நகர பொறுப்பாளர்கள் என நிர்வாகிகள் , தொண்டர்கள் 200 பேருடன் இன்று காலை ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க தேனிக்கு புறப்பட்டு சென்றார். தாராபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் காமராஜ் 7 முறை நகர செயலாளராக பதவி வகித்துள்ளார். தற்போது தாராபுரம் தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்க தலைவராகவும் உள்ளார்.அவர் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவியுள்ளது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ.வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காமராஜ், ஓ.பி.எஸ். அணியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் நகர்மன்ற தலைவர் :- இதனிடையே தாராபுரம் நகர்மன்ற முன்னாள் துணை தலைவரும் அ.தி.மு.க. தொகுதி செயலாளராகவும் இருந்த கோவிந்தராஜ் , அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மோதலையடுத்து தி.மு.க.வில் இணைந்தார். தற்போது அவர் தி.மு.க.வில் இருந்து விலகி ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.