என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்ணாவிரதம்"

    • மா கொள்முதலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என மா விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
    • போராட்டத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிருஷ்ணகிரி:

    தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 50,000 ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு மா கொள்முதலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என மா விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

    இதையடுத்து அ.தி.மு.க. சார்பில் மா விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தி.மு.க. அரசை கண்டித்து ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

    அதன்படி கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் அருகே இன்று காலை 9 மணிக்கு அ.தி.மு.க. துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

    இந்த போராட்டத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சட்ட மன்ற உறுப்பினர்கள் அசோக்குமார், தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி. ராஜேந்திரன், முனி வெங்கட்டப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், கிருஷ்ணமூர்த்தி, காத்தவராயன் உள்பட ஏராளமான 1000-கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் மா கொள்முதல் விலை கிலோவுக்கு 13 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், மாங்குழுக்கான ஜி.எஸ்.டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் தங்கமுத்து, கேசவன், சோக்கடிராஜன், ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×