search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு கவர்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • கேரள கவர்னரின் துண்டில் பட்டு எரிந்த தீயை அருகிலிருந்தவர் உடனடியாக அணைத்தனர்.

    கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள சபரி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் அம்மாநில கவர்னர் ஆரிஃப் முகமது கான் கலந்து கொண்டார்.

    ஆசிரமத்தில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு கவர்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது புகைப்படத்திற்கு அருகில் இருந்த விளக்கில் இருந்து கவர்னரின் துண்டில் தீப்பிடித்தது. இதை உடனடியாக கவனித்த அதிகாரிகள் தீயை அணைத்தனர்.

    பின்னர் பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து கவர்னரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இச்சம்பத்தால் கவர்னருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் நிகழ்வின் நிறைவு விழாவை அவர் தொடங்கி வைத்தார்.

    • பெண் டாக்டர் கொலை தொடர்பாக கொல்கத்தாவில் இன்னும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.
    • கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயலை மாற்ற வேண்டும் என்று கவர்னர் வலியுறுத்தியுள்ளார்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் டாக்டர் கருத்தரங்கு அறையில் கடந்த மாதம் 9-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் மருத்துவர்கள் வெகுண்டெழுந்த நிலையில் கொல்கத்தாவில் இன்னும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.

    இந்நிலையில், உயிரிழந்த பெண் மருத்துவருக்கு நீதி கிடைவேண்டும் என்ற மக்களின் கோரிக்கை குறித்து அவசரமாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி நடத்த வேண்டும் என்று முதல்வர் மம்தா பேனர்ஜிக்கு கவர்னர் சிவி ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயலை மாற்ற வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து மாநில அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    • வரம்பு மீறாமல், தவறு செய்யாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும்.
    • ஒருமித்த கருத்துடன், அற்ப அரசியலில் ஈடுபடாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும்.

    கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் அல்லது, அற்ப அரசியலில் ஈடுபடாத ஒருவரை, ஒருமித்த கருத்துடன் நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

    கடந்த வாரம் தெலுங்கானாவில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட அபிஷேக் மனு சிங்வி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

    அப்போது பேசிய அவர், "இந்த அரசாங்கத்தின் மிகப் பெரிய தோல்வி என்னவென்றால், அது ஒவ்வொரு நிறுவனத்தையும் இழிவுபடுத்தி, மதிப்பை குறைத்துள்ளது.

    கவர்னர்கள் இரண்டாவது தலைமை நிர்வாகியாக அல்லது ஒரே உறையில் இரண்டு கத்தியாக செயல்படும் நிகழ்வுகள் பல நடந்துள்ளன. கவர்னர் பதவியை அகற்ற வேண்டும் அல்லது ஒருமித்த கருத்துடன், அற்ப அரசியலில் ஈடுபடாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும். வரம்பு மீறாமல், தவறு செய்யாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும். அல்லது ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்.

    கவர்னராக இருப்பவர் முதலமைச்சருக்கு சவாலாகவோ, அச்சுறுத்தலாகவோ இருந்தால் கீழே இறங்க வேண்டியது கவர்னர்தான் . ஏனென்றால், முதலமைச்சர் யார்? என்பதற்குத்தான் தேர்தல் நடக்கிறது. கவர்னர் யார்? என்பதற்கு அல்ல

    இறுதியில் நீதிமன்றத்திற்குச் சென்று மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றம் கூறும்போது, அதை ஜனாதிபதிக்கு அனுப்புங்கள் என கவர்னர் கூறுகிறார். ஆட்சி பாதிக்கப்படுகிறது. முடிவுகளை எடுக்க முடியவில்லை. அதே கோவத்தில் ஒரே உறையில் இரண்டு கத்தியாக மற்றொரு தலைமை நிர்வாகி போல் கவர்னர் செயல்படுகிறார்" என்று தெரிவித்தார்.

    • கவர்னருக்கும், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
    • ஊர்வலத்தில் முதல்-மந்திரி மற்றும் அனைத்து மந்திரிகள், கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பங்கேற்பார்கள்.

    பெங்களூர்:

    கர்நாடகாவில் முடா நில ஒதுக்கீட்டு வழக்கில் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிரான விசாரணைக்கு கவர்னர் அனுமதி வழங்கினார். இதையடுத்து கவர்னருக்கும், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மத்திய மந்திரி எச்.டி.குமாரசாமி, முன்னாள் மந்திரி முருகேஷ் நிராணி, எம்.எல்.ஏக்கள் சசிகலா ஜொல்லே, ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் மீதான வழக்குகளை விசாரிக்க கவர்னர் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 31-ந் தேதி கர்நாடக அரசு சார்பில் விதான்சவுதாவில் உள்ள காந்தி சிலையில் இருந்து கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக செல்லப்போவதாக காங்கிரஸ் மாநில தலைவரும், கர்நாடக துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.

    மேலும் இந்த ஊர்வலத்தில் முதல்-மந்திரி மற்றும் அனைத்து மந்திரிகள், கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பங்கேற்பார்கள் என்று அறிவித்து உள்ளார். கவர்னருக்கு எதிராக முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள், போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கர்நாடகாவில் பரபரப்பு நிலவி வருகிறது.

    • கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடக்கிறது.
    • 11 மணிக்கு முன்பாக சட்டசபை கூட்டத்தை முடிக்க திட்டம்.

    புதுச்சேரி:

    தெலுங்கானா கவர்ன ராகவும், புதுச்சேரியில் பொறுப்பு கவர்னராக பதவி வகித்து வந்த தமி ழிசை சவுந்தரராஜன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால், கவர்னர் பதவியை கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார்.

    அவருக்கு பதிலாக ஜார்க்கண்ட் மாநில கவர்னராக பதவி வகித்து வந்த தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் பதவி வழங்கப்பட்டது.

    தற்போது அவர் மகாராஷ்டிரா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கடந்த 27-ந் தேதி புதுச்சேரியின் புதிய கவர்னராக கே.கைலாசநாதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார்.

    புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள கைலாசநாதன் 7-ந் தேதி (புதன்கிழமை) பதவியேற்கிறார். 6-ந் தேதி மாலை புதுச்சேரி வருகிறார். 7-ந் தேதி காலை 11.15 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடக்கிறது.

    இதில் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கிருஷ்ண குமார் புதிய கவர்னராக நிமியக்கப்பட்டுள்ள கைலாசநாதனுக்கு பதவி பிரமானமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைக்கிறார்.

    விழாவில் முதல்- அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர திகாரிகள் கலந்து கொண்டு கவர்னருக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கவர்னர் மாளிகை செய்து வருகிறது.

    இந்த பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பதற்காக, 7-ந் தேதி காலை 11 மணிக்கு முன்பாக சட்டசபை கூட்டத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • வயநாட்டிற்கு தமிழகம் சார்பாக உதவி.
    • முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கொளத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு சார்பாக அனைத்து உதவிகளையும் செய்வதாக சொல்லி உள்ளோம். இதற்காக 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை அனுப்பி உள்ளோம். அது மட்டுமின்றி தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடியை அனுப்பி வைத்துள்ளோம். இன்னும் தேவைப்பட்டால் உதவி செய்வதாக கூறி உள்ளோம்.

    கேள்வி:- பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி மீது ஜாதி ரீதியான தாக்குதல்கள் செய்யப்பட்டுள்ளது?

    பதில்:- இது கேட்க வேண்டிய கேள்வியே இல்லை.

    கேள்வி:- கவர்னர் ஆர்.என்.ரவி பதவி காலம் முடிகிறதே. அவரது பதவி நீட்டிக்கப்படும் என தெரிகிறதே?

    பதில்:- நான் ஜனாதிபதியும் அல்ல, பிரதமரும் அல்ல இவ்வாறு கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

    • சி.வி. ஆனந்த போஸ் மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.
    • ' ஆளுநர் மாளிகை செல்வதற்குப் பெண்கள் பயப்படுகின்றனர்' என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியிருந்தார்.

    மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். ஆனால், அந்த குற்றச்சாட்டை கவர்னர் மறுத்தார். இதனையடுத்து, 'ஆளுநர் மாளிகை செல்வதற்குப் பெண்கள் பயப்படுகின்றனர்' என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியிருந்தார்.

    மேலும், அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற 2 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பதிவு பிரமாணம் செய்து வைக்காமல் கவர்னர் இழுத்தடித்து வந்தார். அதனால் அந்த 2 எம்.எல்.ஏ.க்களும் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரை விமர்சித்தனர்.

     

    இந்நிலையில், மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூலை 17 ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, ஆளுநருக்கு எதிராக அரசியல் ரீதியாக எந்த கருத்தையும் மம்தாவும் அவரது கட்சியினரும் தெரிவிக்கக் கூடாது என்று நீதிபதி கிருஷ்ண ராவ் உத்தரவிட்டார். இந்த உத்தரவானது அடுத்த மாதம் ஆகஸ்ட் 14 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

     

    இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மம்தா பானர்ஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில்தான் நேற்று அந்த கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிஸ்வரூப் சவுத்ரி மற்றும் ஐ.பி.முகர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கருத்துச் சுதந்திரத்தை மதித்து சட்டத்திற்கு உட்பட்டு முதல்வர் மம்தா பானர்ஜி ஆளுநரை விமர்சிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் விமர்சிக்கக்கூடாது என்ற முந்தைய தீர்ப்பு செயலிழந்துள்ளது.

    • ஆனந்த போஸ் மீது கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.
    • கவர்னர் மாளிகை செல்வதற்கு பெண்கள் பயப்படுகின்றனர்' என்று மம்தா பானர்ஜி பேசியிருந்தார்.

    மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் மீது கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். ஆனால், அந்த குற்றச்சாட்டை கவர்னர் மறுத்தார்.

    இதனையடுத்து, 'கவர்னர் மாளிகை செல்வதற்கு பெண்கள் பயப்படுகின்றனர்' என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியிருந்தார்.

    மேலும், அண்மையில் நடைபெற்ற இடை தேர்தலில் வெற்றி பெற்ற 2 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பதிவு பிரமாணம் செய்து வைக்காமல் கவர்னர் இழுத்தடித்து வந்தார். அதனால் அந்த 2 எம்.எல்.ஏ.க்களும் இந்த விவகாரம் தொடர்பாக கவர்னரை விமர்சித்தனர்.

    இந்நிலையில், மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, கவர்னருக்கு எதிராக அவதூறாக எந்த கருத்தையும் மம்தாவும் அவரது கட்சியினரும் தெரிவிக்க கூடாது என்று நீதிபதி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டார். 

    • ஆசிரியர்களின் திறனை உருவாக்குதல் உள்ளிட்ட தலைப்புகளில் அமர்வுகளும், உரையாடல்களும் நடந்தன.
    • அறிஞர்கள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் 2 நாள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டுக்கு கவர்னர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி உரையாற்றினார்.

    மாநாட்டில் மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 48 துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் பெரும்பாலான துணை வேந்தர்கள் பங்கேற்றனர். பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    ஆசிரியர்களின் திறனை உருவாக்குதல் உள்ளிட்ட தலைப்புகளில் அமர்வுகளும், உரையாடல்களும் நடந்தன. மேலும் ஆராய்ச்சியின் சிறப்பம்சம், நிறுவன மேம்பாடு, தொழில் முனைவோரை ஊக்குவித்தல், ஆசிரிய உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு, உலகளாவிய மனித விழுமி யங்களை ஊக்குவித்தல் போன்றவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.


    இன்றைய முதல் நாள் மாநாட்டில் சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் வைத்திய சுப்பிரமணியம் எழுதிய நிறுவன மேம்பாட்டு திட்டம்- பல்கலைக்கழகங்களுக்கான தொலைநோக்கு ஆவணம், கட்டிட ஆராய்ச்சி சிறப்பு மற்றும் செயற்கை நுண்ண றிவு எதிர்காலம் குறித்து விளக்கப்பட்டது.

    மாநாட்டில் பங்கேற்ற துணைவேந்தர்கள் பல்கலைக்கழகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகள் என்ற தலைப்பில் உரையாற்றினர். யு.ஜி.சி. சி.ஐ.எஸ்.ஆர். தேர்வுகளில் தகுதி பெற்ற மற்றும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பெற்ற மாணவர்கள், அறிஞர்கள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என். ரவி நேற்றுமுன்தினம் மாலை ஊட்டிக்கு வந்தார். வருகிற 30-ந் தேதி வரை அவர் ஊட்டியில் தங்கியிருக்கிறார். மாநாடு நிறைவுக்கு பின் 29-ந் தேதி கோத்தகிரி மற்றும் கோடநாடு காட்சி முனையை பார்வையிடுகிறார். பின்னர் 30-ந் தேதி ஊட்டியில் இருந்து சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.

    • இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் உரிமையை தாரை வார்த்து கொடுத்து இருக்கிறார்கள்.
    • சட்ட நடவடிக்கையோ கூட்டணி சார்பாக அழுத்தமோ கொடுக்க தி.மு.க தவறிவிட்டது.

    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 43-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்த பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தினத்தந்தி என்ற நாளிதழை ஆரம்பித்து அதன் மூலம் பட்டித்தொட்டி எல்லாம் தமிழை பாமர மக்களும் அறிய செய்தவர் சி.பா.ஆதித்தனார். அவரது நினைவு நாளில் கழகத்தின் சார்பாக நினைவஞ்சலி செலுத்தியிருக்கிறோம்.

    விவசாயத்திற்கும் சரி குடிநீருக்கும் சரி தமிழ் நாட்டைப் பொறுத்தவரை நீர் ஆதாரம் நாம் நம்பி இருப்பது கேரளாவில் இருந்து வருகின்ற சிலந்தி ஆறு கர்நாடகாவில் இருந்து வருகின்ற காவிரி ஆறு அதேபோல ஆந்திராவில் இருந்து வருகிற பாலாறு.

    இந்த மூன்றும் நாம் நம்பி இருக்கிற நிலையில் அ.தி.முக. ஆட்சியில் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து நமக்குரிய உரிமையை முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிலை நாட்டினார்கள்.

    இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் உரிமையை தாரை வார்த்து கொடுத்து இருக்கிறார்கள்

    காவிரியில் இந்த வருடம் 50 சதவீதம் தண்ணீர் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் 50 சதவீதத்தை கூட கேட்க பெறாத துப்பில்லாமல் விவசாயிகளுக்கு தண்ணீர் பாசனத்திற்கு வழியில்லாத வகையில் ஒட்டுமொத்த துரோகத்தையும் தி.மு.க. அரசு செய்கிறது. சட்ட நடவடிக்கையோ கூட்டணி சார்பாக அழுத்தமோ கொடுக்க தி.மு.க தவறிவிட்டது.

    திருவள்ளுவரைப் பொருத்தவரை உலகப் பொதுமறை தந்தவர் உலகம் முழுவதும் அதிகமான அளவுக்கு ஒரு மொழி பெயர்க்கப்பட்ட நூல் என்றால் அது திருக்குறள். திருவள்ளுவரைப் பொருத்த வரையில் ஜாதி கிடையாது மதம் கிடையாது இனம் கிடையாது அப்படி இருக்கின்ற ஒருவரை காவி உடை அணிந்து திரு வள்ளுவரை சித்தரிப்பது ஏற்க முடியாத ஒன்று.

    தற்போது திருவள்ளுவர் தினம் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன. தமிழினத்தையும் திருவள்ளுவரையும் அவமானப்படுத்துகிறவிதமாக தான் கவர்னரின் செயலை பார்க்க முடிகிறது. கவர்னரின் செயல் கண்டிக்கத்தக்கது ஏற்றுக்கொள்ள முடியாதது.

    ஜாதி மதம் இனம் மொழி எல்லாவற்றையும் கடந்து எல்லோரையும் நேசிக்க கூடிய ஒரு மிகப்பெரிய உன்னத தலைவர் ஜெயலலிதா. அண்ணாமலை போன்றவர்கள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகிறவர்கள்.

    குறுகிய எண்ணம் கொண்டவர்களின் கருத்து என்பது நிச்சயமாக யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. நிராகரிக்கப்பட வேண்டிய ஒரு கருத்து.

    எந்த ஆட்சி வந்தாலும் காவல்துறை ஒரே காவல்துறை தான். தி.மு.க. ஆட்சியில் ஏண்டா காக்கி சட்டை போடுறோம் என்கின்ற மனக்கஷ்டத்தில் காவலர்கள் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
    • இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.மம்தா பானர்ஜி மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்.

    மேற்கு வங்கத்தில் கவர்னராக இருப்பவர் ஆனந்த் போஸ். மாநில அரசுக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.



    இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்காக தற்போது மேற்கு வங்கம் வந்துள்ளார். அவர் இரவில் ராஜ்பவனில் தங்க உள்ளார். இந்நிலையில் தற்போது திடீர் திருப்பமாக ராஜ்பவனில் பணியாற்றும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர், கவர்னர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

    அங்குள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் அவர் புகார் கொடுத்துள்ளார். உடனே அவரை போலீசார் 'ஹரே தெரு' காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் எழுத்துப்பூர்வமாக கவர்னர் மீது புகார் கொடுத்தார்.




    அதில் தன்னை கவர்னர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் பிரதமர் மோடி 2 நாள் பிரசார பயணத்திற்கு வந்துள்ளதால் தற்போது இது தொடர்பாக விசாரணை செய்ய வரும் போலீசாரை ராஜ் பவனுக்குள் நுழைய கவர்னர் தடை விதித்து உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆனதை தொடர்ந்து அவரை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னருக்கு கடிதம் அனுப்பினார்
    • பொன்முடியை அமைச்சராக்குவது சரியாக இருக்காது என்று தமிழக அரசுக்கு கவர்னர் கடிதம் எழுதி விட்டார்

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடிக்கு சென்னை ஐகோர்ட் கடந்த டிசம்பர் மாதம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததுடன் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.

    இந்த வழக்கில் பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இதில் அவருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 11-ம் தேதி நிறுத்தி வைத்தது.

    இதனால் பொன்முடி திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தொடரலாம் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆனதை தொடர்ந்து அவரை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் கவர்னர் ஆர்.என்.ரவி அதை பொருட்படுத்தவில்லை.

    பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர அவர் நிரபராதி என்று கோர்ட்டு கூறவில்லை என்பதால் பொன்முடியை அமைச்சராக்குவது சரியாக இருக்காது என்று தமிழக அரசுக்கு கவர்னர் கடிதம் எழுதி விட்டார்.

    கவர்னரின் இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    அவ்வழக்கு தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக கவர்னரின் செயல்பாடு தொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, கவர்னர் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாக அப்போது கண்டனம் தெரிவித்தார்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கவர்னர் தரப்பில் இருந்து நேற்று முதல் எந்த அழைப்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவில்லை.

    இந்நிலையில், இன்று பிற்பகலில் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். பதவி ஏற்க வருமாறு கவர்னர் ஆர்.என். ரவி அழைத்து விடுத்துள்ளார். இதையடுத்து இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பொன்முடி அமைச்சராக பதவியேற்கிறார்.

    இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில், "அரசியலமைப்பு நெறிமுறைக்கு எதிராக செயல்படுவது" என்பதை தனது அடிப்படை கொள்கையாகவே கொண்டிருக்கிறார் தமிழக கவர்னர்.

    பதவிப்பிரமாணம் செய்ய மறுப்பது, அரசு தயாரிக்கும் கவர்னர் உரையை படிக்காமல் செல்வது, மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருப்பது உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பானவற்றை கவர்னர் தொடர்ந்து செய்து வருகிறார்.

    இவைகள் "திருடக்கூடாது" என்பது "இந்தியத் தண்டனைச் சட்டத்தின் நெறிமுறைகளுக்கு எதிரானது" என்று சொல்வது போல் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    ×