என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகாலாந்து"

    • நாகாலாந்து கவர்னராக பதவி வகித்த இல.கணேசன் காலமானார்.
    • அவரது மறைவுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    நாகாலாந்து கவர்னராக பதவி வகித்து வந்த இல.கணேசன் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, சென்னையில் இல.கணேசன் உடல் 42 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், மணிப்பூர் கவர்னரான அஜய் குமார் பல்லா கூடுதல் பொறுப்பாக நாகாலாந்து கவர்னர் பதவியையும் சேர்த்து வகிப்பார் என ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.

    • ஆளுநர் இல.கணேசன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
    • அப்பல்லோ மருத்துவமனையில் இல.கணேசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் இல.கணேசன். இவர் தற்போது நாகாலாந்து மாநில கவர்னராக பதவி வகித்து வருகிறார். சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் அவருக்கு வீடு உள்ளது. தற்போது சென்னைக்கு வந்திருந்த அவர் தனது வீட்டில் தங்கி இருந்தார்.

    இன்று அதிகாலையில் இல.கணேசன் வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து உடனடியாக அவரை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இன்று காலை 6.45 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மயங்கிய நிலையிலேயே அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    கார்கள் நசுங்கி சிதறிய வீடியோர் பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கச் செய்துள்ளது.

    நாகலாந்தில் திமாபூர் மற்றும் கோஹிமா இடையே சுமோகெடிமா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 29-ல் நேற்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவில் பெரிய பாறைகள் மலையில் இருந்து உருண்டு கார்கள் மீது விழுந்தது. இதில் இரண்டு கார்கள் முற்றிலுமாக நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். பலியானவர்களின் அடையாளம் காணப்பட்டு வருகிறது.

    ராட்சத பாறாங்கல் உருண்டு விழுந்து கார்கள் நசுங்கி சிதறிய வீடியோ பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கச் செய்துள்ளது.

    இதுகுறித்து நாகாலாந்து முதல்வர் நெய்பியு பிரோ தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    திமாபூர் மற்றும் கோஹிமா இடையே இன்று (நேற்று) மாலை சுமார் 5 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் பாறை விழுந்ததில் 2 பேர் பலி மற்றும் 3 பேர் பலத்த காயம் உட்பட பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடம் எப்போதும் "பகலா பஹார்" என்று அழைக்கப்படுகிறது. அதாவது, நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள் விழுவதற்கு பெயர் பெற்றது.

    காயமடைந்தவர்களுக்கு அவசர சேவைகள் மற்றும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

    குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திமாபூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
    • மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் கூடிய ஆற்றல் மிக்க தலைவர் என ஆளுநர் இரங்கல்.

    நாகலாந்தில் பத்து முறை எம்எல்ஏவாக இருந்த நோக் வாங்னாவ், உடல்நலக் குறைவு காரணமாக திமாபூரில் உள்ள கிறிஸ்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், சட்டமன்றத்தின் மூத்த உறுப்பினரான நோக் வாங்னாவோ, அவரது 87 வயதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஒரு தீவிர பிராந்தியவாதியான நோக் வாங்னாவ் 1974 ல் அரசியலில் சேர்ந்தார். பின்னர், மோன் மாவட்டத்தில் உள்ள தபி தொகுதியில் இருந்து 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அமைச்சர் பதவி உட்பட பல்வேறு பதவிகளில் மாநிலத்திற்கு சேவை செய்தார்.

    கடந்த பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இறக்கும் வரை சமூக நலத்துறையின் ஆலோசகராகப் பணியாற்றினார்.

    இந்நிலையில், திமாபூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

    முதல்வர் நெய்பியு ரியோ, துணை முதல்வர் ஒய் பாட்டன், சட்டசபை சபாநாயகர் ஷரிங்கெய்ன் லாங்குமர் மற்றும் என்டிபிபி தலைவர் சிங்வாங் கொன்யாக் உட்பட ஏராளமான தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

    நோக் வாங்னாவோ மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் கூடிய ஆற்றல் மிக்க தலைவர் என ஆளுநர் இல.கணேசன் தெரிவித்தார்.

    • நாகா இனத்தைச் சேர்ந்த 19 ஆம் நூற்றாண்டு மனிதர் ஒருவரின் கொம்புடன் கூடிய மண்டை ஓடு பிரிட்டனில் இன்று ஏலம் விடப்பட உள்ளது.
    • ஏலத்தில் வரும் இந்த மண்டை ஓடானது 3500 முதல் 4000 பவுண்டுகள் வரை மதிப்புடையது

    நாகா இனத்தைச் சேர்ந்த 19 ஆம் நூற்றாண்டு மனிதர் ஒருவரின் கொம்புடன் கூடிய மண்டை ஓடு பிரிட்டனில் இன்று ஏலம் விடப்பட உள்ளது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ [Neiphiu Rio] மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இறந்தவரின் உடல் மீதிகள் நாகா இனத்தவருக்கே சொந்தம் என்றும் இது தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவரின் மண்டை ஓட்டை ஏலம் விடும் இந்த மனிதத்தன்மை அற்ற செயல் மன ரீதியாக நாகா இனத்தவரின் நம்பிக்கையைப் புண்படுத்துவதாக உள்ளது என்று நாகாலாந்து முதல்வர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

     

    பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின்போது நாகா இனத்தவர் சந்தித்த கொடுமைகளை இந்த ஏலம் பிரதி செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். இன்று ஏலத்தில் வரும் இந்த மண்டை ஓடானது பிரிட்டன் நாணயம் மதிப்பில் 3500 முதல் 4000 பவுண்டுகள் [சுமார் 4 லட்சம் ரூபாய்] வரை மதிப்புடையது என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஏலம் தொடர்பாக நாகா மக்கள் நல்லிணக்க அமைப்பான [FNR] தெரியப்படுத்தியதை அடுத்து நாகாலாந்து முதல்வர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் மாநில கட்சியான NDPP ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நாகாலாந்தின் பல்வேறு பகுதிகளில் நாய் இறைச்சி பொதுமக்கள் சாப்பிடுகின்றனர்.
    • பிற மாநிலங்களில் இருந்து நாகாலாந்திற்கு நாய்களை இறைச்சிக்காக கடத்துகின்றனர்.

    அசாம் மாநிலத்தில் இறைச்சிக்காக சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 19 நாய்களை போலீசார் மீட்டனர். நாய்களை கடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்

    இந்த நாய்களை அசாம் மாநிலத்தில் இருந்து நாகாலாந்திற்கு கொண்டு சென்று நாய் இறைச்சிக்கு விற்பனை செய்ய கைது செய்யப்பட்டவர்கள் திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    நாகாலாந்தின் பல்வேறு பகுதிகளில் நாய் இறைச்சி பொதுமக்கள் சாப்பிடுகின்றனர். 2020 ஆம் ஆண்டு நாய் இறைச்சி வியாபாரத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டு கவுகாத்தி உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்தது.

    நாகாலாந்தில் நாய் இறைச்சி சாப்பிடப்பட்டாலும் பிற மாநில மக்கள் நாய் இறைச்சியை சாப்பிடுவதில்லை. ஆகையால் பிற மாநிலங்களில் இருந்து நாகாலாந்திற்கு நாய்களை இறைச்சிக்காக கடத்தும் போக்கு அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது.

    ×