search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nagaland"

    • திமாபூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
    • மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் கூடிய ஆற்றல் மிக்க தலைவர் என ஆளுநர் இரங்கல்.

    நாகலாந்தில் பத்து முறை எம்எல்ஏவாக இருந்த நோக் வாங்னாவ், உடல்நலக் குறைவு காரணமாக திமாபூரில் உள்ள கிறிஸ்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், சட்டமன்றத்தின் மூத்த உறுப்பினரான நோக் வாங்னாவோ, அவரது 87 வயதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஒரு தீவிர பிராந்தியவாதியான நோக் வாங்னாவ் 1974 ல் அரசியலில் சேர்ந்தார். பின்னர், மோன் மாவட்டத்தில் உள்ள தபி தொகுதியில் இருந்து 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அமைச்சர் பதவி உட்பட பல்வேறு பதவிகளில் மாநிலத்திற்கு சேவை செய்தார்.

    கடந்த பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இறக்கும் வரை சமூக நலத்துறையின் ஆலோசகராகப் பணியாற்றினார்.

    இந்நிலையில், திமாபூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

    முதல்வர் நெய்பியு ரியோ, துணை முதல்வர் ஒய் பாட்டன், சட்டசபை சபாநாயகர் ஷரிங்கெய்ன் லாங்குமர் மற்றும் என்டிபிபி தலைவர் சிங்வாங் கொன்யாக் உட்பட ஏராளமான தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

    நோக் வாங்னாவோ மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் கூடிய ஆற்றல் மிக்க தலைவர் என ஆளுநர் இல.கணேசன் தெரிவித்தார்.

    கார்கள் நசுங்கி சிதறிய வீடியோர் பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கச் செய்துள்ளது.

    நாகலாந்தில் திமாபூர் மற்றும் கோஹிமா இடையே சுமோகெடிமா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 29-ல் நேற்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவில் பெரிய பாறைகள் மலையில் இருந்து உருண்டு கார்கள் மீது விழுந்தது. இதில் இரண்டு கார்கள் முற்றிலுமாக நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். பலியானவர்களின் அடையாளம் காணப்பட்டு வருகிறது.

    ராட்சத பாறாங்கல் உருண்டு விழுந்து கார்கள் நசுங்கி சிதறிய வீடியோ பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கச் செய்துள்ளது.

    இதுகுறித்து நாகாலாந்து முதல்வர் நெய்பியு பிரோ தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    திமாபூர் மற்றும் கோஹிமா இடையே இன்று (நேற்று) மாலை சுமார் 5 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் பாறை விழுந்ததில் 2 பேர் பலி மற்றும் 3 பேர் பலத்த காயம் உட்பட பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடம் எப்போதும் "பகலா பஹார்" என்று அழைக்கப்படுகிறது. அதாவது, நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள் விழுவதற்கு பெயர் பெற்றது.

    காயமடைந்தவர்களுக்கு அவசர சேவைகள் மற்றும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

    குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாகலாந்து மாநிலம் முழுவதையும் இடையூறு மிக்க பகுதியாக அறிவித்து அங்கு அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மத்திய அரசு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. #NagalandAFSPA #AFSPA
    புதுடெல்லி:

    பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டு போராளி குழுக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாம், மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டம் அமலில் உள்ளது.

    போடோலாந்து, நக்சலைட், மாவோயிஸ்ட், நாகா விடுதலை முன்னணி ஆகிய அமைப்பினரின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் வன்முறையில் ஈடுபடுவோர் மற்றும் பொதுச் சொத்துகளை நாசப்படுத்துவோரை உடனடியாக கைது செய்யவும், தேவை ஏற்படும்போது தற்காப்புக்காக சுட்டுக் கொல்லவும், சந்தேகத்துக்குரிய பகுதிகளில் முன் அனுமதியின்றி சோதனை நடத்தவும் துணை ராணுவம், போலீசாருக்கு இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது

    மேகாலயா மாநிலத்தில் அமலில் இருந்த ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டம் கடந்த 31-3-2018 முதல் முற்றிலுமாக வாபஸ் பெறப்பட்டது.



    இந்நிலையில், நாகலாந்து மாநிலம் முழுவதையும் இடையூறு மிக்க பகுதியாக அறிவித்து அங்கு பல ஆண்டுகளாக அமலில் உள்ள ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டத்தை மத்திய அரசு மேலும் 6 மாதங்களுக்கு  நீட்டித்துள்ளது.

    சமீபகாலமாக இம்மாநிலத்தில் நடைபெற்றுவரும் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் ஆகிய குற்றச்செயல்களை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு துணை புரிவதற்காக வரும் ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நாகலாந்து மாநிலத்தில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டம் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #NagalandAFSPA #AFSPA
    நாகலாந்து மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல் மந்திரி ரியோவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். #NagalandFlood
    கொஹிமா:

    இந்தியா முழுவதும் இந்த ஆண்டு பருவமழை நன்கு பெய்து வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.  

    கடந்த ஒரு மாதமாக நாகலாந்தில் பெய்து வரும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்கு, 12 பேர் உயிரிழந்துள்ளனர். 800 கோடி ரூபாய் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசிடம் இருந்து 100 கோடி ரூபாய் நிதியுதவி வேண்டி நாகலாந்து முதல் மந்திரி நெய்பு ரியோ கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில், நாகலாந்து மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல் மந்திரி ரியோவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், நாகலாந்தில் பெய்து வரும் கனமழை பாதிப்பு குறித்து முதல் மந்திரியிடம் கேட்டறிந்தேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாகலாந்து மக்களுக்கு தோளோடு தோள் நிற்போம்.  மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என பதிவிட்டுள்ளார். #NagalandFlood
    நாகலாந்து மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் நிவாரண நிதியாக முதல்மந்திரி ரியோ கோரியுள்ளார். #NagalandFlood
    கொஹிமா:

    இந்தியா முழுவதும் இந்த ஆண்டு பருவ மழை நன்கு பெய்து வருகிறது.  இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.  

    இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக நாகாலாந்தில் பெய்து வரும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்கு, 12 பேர் உயிரிழந்துள்ளனர். 800 கோடி ரூபாய் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாகலாந்து மாநிலத்திற்கு அண்டை மாநிலங்கள் நிதியுதவி அளித்து வருகின்றது.



    கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் போக்குவரத்து வசதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதிலும் அதிக சிக்கல் நிலவி வருகிறது.

    இதையடுத்து, முதற்கட்டமாக சாலைகளை சீரமைப்பதற்காக மத்திய அரசிடம் இருந்து 100 கோடி ரூபாய் நிதியுதவி வேண்டி நாகலாந்து முதல்மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார். 3 நாட்களுக்கு முன்பு இவர் நிவாரண உதவி கோரியிருந்த நிலையில் மத்திய அரசிடம் இருந்து எவ்வித நிவாரணமும் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட மிகப்பெரிய சேதத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரண உதவியாக நாகலாந்து அளித்தது குறிப்பிடத்தக்கது. #NagalandFlood
    நாகாலாந்து மாநிலத்தில் உள்ள கோஹிமா கல்லூரியில் மாணவர்கள் வசதிக்காக வாட்டர் ஏடிஎம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #WaterATM
    கோஹிமா:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று நாகாலாந்து. இதன் தலைநகரம் கோஹிமா. இங்குள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக வாட்டர் ஏடிஎம் அமைக்கப்படும் என உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி துறை மந்திரி அறிவித்தார்.

    அதன் ஒரு பகுதியாக, கோஹிமா நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் நேற்று வாட்டர் ஏடிஎம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்த ஏடிஎம்மில் ஒரு லிட்டர் தண்ணீர் ஒரு ரூபாய்க்கு கிடைக்கும். இந்த கருவியை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி, அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஐந்து ரூபாய்க்கு 5 லிட்டர் குடிநீர் கிடைக்கும்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்த ஏடிஎம் வெற்றியை பொறுத்துதான் பல்வேறு இடங்களில் இதை அமைப்பது குறித்து பரீசிலிக்கப்படும் என்றார். #WaterATM
    நாகலாந்து மாநிலத்தின் தலைநகர் கோஹிமா பகுதியில் ரசாயனம் கலந்த ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #ChemicalMixedFish #Nagaland
    கோஹிமா:

    மீன்கள் விரைவில் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அதன் மீது பென்ஸோயேட் மற்றும் அம்மோனியா ஆகிய வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் வெளியானது. இந்த வகை வேதிப்பொருட்களால் உடலில் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் எனவும், இந்த வகை வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் எனவும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

    இதனை அடுத்து கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வேதிப்பொருட்கள் கலந்த மீன்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த வேதிப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிவுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நாகலாந்து மாநிலத்தின் தலைநகரான கோஹிமாவில் உள்ள மீன்கடைகளில் சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் பல்வேறு கடைகளில் இருந்து மீன்கள் எடுத்து செல்லப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வில் மீன்களில் வேதிப்பொருட்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டு, சுமார் ஆயிரத்து 666 கிலோ எடை கொண்ட மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. மேலும், மீன்கள் இறக்குமதி செய்பவர்களிடமும் இந்த சோதனையை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #ChemicalMixedFish #Nagaland
    நாகாலாந்து மாநில பா.ஜ.க தலைவராக இருக்கும் விசாசோலி லௌங்கு விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தேம்ஜென் இம்னா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    கோஹிமா :

    நாகாலாந்து மாநில பா.ஜ.க தலைவராக இருக்கும் விசாசோலி லௌங்கு, அம்மாநிலத்தில் ஆளும் மக்கள் ஜனநாயக கூட்டணியின் துணை தலைவர் மற்றும்  நாகாலாந்து மூங்கில் வளர்ச்சி மேம்பாட்டு முகமை தலைவர் என்று ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளை வகித்து வருகிறார்.

    இந்நிலையில், ‘ஒருவருக்கு ஒரு பதவி’ எனும் கொள்கையின் கீழ் விசாசோலி லௌங்கு அம்மாநில பா.ஜ.க தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தேம்ஜென் இம்னா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த அறிவிப்பை பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளரும், வடகிழக்கு மாநிலங்கள் பொறுப்பாளருமான அருண் சிங் வெளியிட்டுள்ளார். மேலும், தேம்ஜென் இம்னா சிறப்பாக செயல்பட அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
    ×