search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "centre govt"

    நாகலாந்து மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் நிவாரண நிதியாக முதல்மந்திரி ரியோ கோரியுள்ளார். #NagalandFlood
    கொஹிமா:

    இந்தியா முழுவதும் இந்த ஆண்டு பருவ மழை நன்கு பெய்து வருகிறது.  இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.  

    இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக நாகாலாந்தில் பெய்து வரும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்கு, 12 பேர் உயிரிழந்துள்ளனர். 800 கோடி ரூபாய் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாகலாந்து மாநிலத்திற்கு அண்டை மாநிலங்கள் நிதியுதவி அளித்து வருகின்றது.



    கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் போக்குவரத்து வசதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதிலும் அதிக சிக்கல் நிலவி வருகிறது.

    இதையடுத்து, முதற்கட்டமாக சாலைகளை சீரமைப்பதற்காக மத்திய அரசிடம் இருந்து 100 கோடி ரூபாய் நிதியுதவி வேண்டி நாகலாந்து முதல்மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார். 3 நாட்களுக்கு முன்பு இவர் நிவாரண உதவி கோரியிருந்த நிலையில் மத்திய அரசிடம் இருந்து எவ்வித நிவாரணமும் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட மிகப்பெரிய சேதத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரண உதவியாக நாகலாந்து அளித்தது குறிப்பிடத்தக்கது. #NagalandFlood
    ×