என் மலர்
நீங்கள் தேடியது "North East"
- சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை அவர்கள் தொடர்ந்து வந்துள்ளனர்.
- மேகாலய மாநில முதல்வர் கான்ராட் சங்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் வடகிழக்கு மாநிலமான நாகலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, ஒரு வணிக வளாகத்தில் இருந்து அந்தப் பெண் வெளியே வந்தபோது, மூன்று பேர் கொண்ட கும்பல் அவரைப் பின்தொடரத் தொடங்கியுள்ளது.
சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை அவர்கள் தொடர்ந்து வந்துள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனையின் நுழைவாயிலுக்கு அருகில் அவரை மறித்த அந்தக் கும்பல், அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததோடு, இனரீதியாக அநாகரீகமான வார்த்தைகளால் திட்டியும் மிரட்டியும் உள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
பெண்ணின் புகாரை அடுத்து வணிக வளாகத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், இரண்டு இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்துள்ளனர். அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூன்றாவது நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மேகாலய மாநில முதல்வர் கான்ராட் சங்மா, வடகிழக்கு இந்தியப் பெண்கள் தொடர்ந்து இத்தகைய இனப்பாகுபாடு மற்றும் பாலியல் துன்புறுத்தல்களைச் சந்திப்பது வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார்.






