search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shipments"

    வடகிழக்கு மாநிலங்களுக்கு எளிதாக சரக்குகளை கொண்டு செல்வதற்காக வங்காள தேசத்தில் உள்ள சிட்டகாங், மோங்லா துறைமுகங்களை இந்தியா பயன்படுத்த அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. #Bangladesh #India
    டாக்கா:

    நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள 7 மாநிலங்களை இணைக்க ஒரே ஒரு தரை வழி மட்டுமே உள்ளது. இதனால், அங்குள்ள திரிபுரா, மிசோரம் போன்ற மாநிலங்களுக்கு சரக்குகளை எடுத்துச் செல்வதில் கால தாமதம் ஏற்படுகிறது.

    இந்த நிலையில், வங்காளதேசத்தில் உள்ள சிட்டகாங், மோங்லா துறைமுகங்களை வணிக ரீதியாக பயன்படுத்த அந்நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம், இந்திய துறைமுகங்களில் இருந்து மேற்கண்ட இரண்டு துறைமுகங்களுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சாலைகள், நீர்வழி மூலம் எளிதாக இந்திய பகுதிக்கு எடுத்துச் செல்லப்படும்.

    இந்த ஒப்பந்தத்தின் வரைவுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் எனவும், தேவைப்பட்டால் நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளுக்கும் இந்த துறைமுகம் மூலம் சரக்குகள் அனுப்பலாம் எனவும் வரைவில் கூறப்பட்டுள்ளது. 
    ×