search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகலாந்தில் ரசாயனம் கலந்த மீன்கள் பறிமுதல்
    X

    நாகலாந்தில் ரசாயனம் கலந்த மீன்கள் பறிமுதல்

    நாகலாந்து மாநிலத்தின் தலைநகர் கோஹிமா பகுதியில் ரசாயனம் கலந்த ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #ChemicalMixedFish #Nagaland
    கோஹிமா:

    மீன்கள் விரைவில் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அதன் மீது பென்ஸோயேட் மற்றும் அம்மோனியா ஆகிய வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் வெளியானது. இந்த வகை வேதிப்பொருட்களால் உடலில் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் எனவும், இந்த வகை வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் எனவும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

    இதனை அடுத்து கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வேதிப்பொருட்கள் கலந்த மீன்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த வேதிப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிவுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நாகலாந்து மாநிலத்தின் தலைநகரான கோஹிமாவில் உள்ள மீன்கடைகளில் சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் பல்வேறு கடைகளில் இருந்து மீன்கள் எடுத்து செல்லப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வில் மீன்களில் வேதிப்பொருட்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டு, சுமார் ஆயிரத்து 666 கிலோ எடை கொண்ட மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. மேலும், மீன்கள் இறக்குமதி செய்பவர்களிடமும் இந்த சோதனையை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #ChemicalMixedFish #Nagaland
    Next Story
    ×