என் மலர்
இந்தியா

மணிப்பூர் கவர்னர் அஜய் பல்லா நாகாலாந்து கவர்னராக கூடுதல் பொறுப்பு
- நாகாலாந்து கவர்னராக பதவி வகித்த இல.கணேசன் காலமானார்.
- அவரது மறைவுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
புதுடெல்லி:
நாகாலாந்து கவர்னராக பதவி வகித்து வந்த இல.கணேசன் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இதற்கிடையே, சென்னையில் இல.கணேசன் உடல் 42 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மணிப்பூர் கவர்னரான அஜய் குமார் பல்லா கூடுதல் பொறுப்பாக நாகாலாந்து கவர்னர் பதவியையும் சேர்த்து வகிப்பார் என ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.
Next Story






