என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ajay Kumar Bhalla"

    • நாகாலாந்து கவர்னராக பதவி வகித்த இல.கணேசன் காலமானார்.
    • அவரது மறைவுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    நாகாலாந்து கவர்னராக பதவி வகித்து வந்த இல.கணேசன் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, சென்னையில் இல.கணேசன் உடல் 42 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், மணிப்பூர் கவர்னரான அஜய் குமார் பல்லா கூடுதல் பொறுப்பாக நாகாலாந்து கவர்னர் பதவியையும் சேர்த்து வகிப்பார் என ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.

    • மத்திய உள்துறை செயலாளராக இருந்து வருபவர் அஜய் பல்லா.
    • இவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் உள்துறை செயலராக அஜய்குமார் பல்லா இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

    இந்நிலையில், அஜய் குமாரின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதலின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் 2023, ஆகஸ்ட் 23 வரை அஜய்குமார் பல்லா பணியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×