என் மலர்
நீங்கள் தேடியது "முத்ரா திட்டம்"
- முத்ரா கடன் திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.
- நாடு முழுவதும் 52 கோடி பேர் பயனடைந்து இருக்கிறார்.
புதுச்சேரி:
பிரதம மந்திரியின் முத்ரா கடன் திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இதையொட்டி இந்தியன் வங்கி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முத்ரா கடன் திட்ட பயனாளிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடந்தது. விழாவிற்கு கவர்னர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது பயனாளிகள் முத்ரா வங்கிக் கடன் தங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி கொண்டு வந்ததாக கூறினர். மேலும் குறைந்த வட்டியில் தொழில் முன்னேற்ற ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுடன், தற்போது மற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கி உதவி வருவதையும் உருக்கமாக எடுத்துக் கூறினர். முத்ரா கடன் திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்து கவர்னர் கைலாஷ்நாதன் பேசும்போது முத்ரா கடன் திட்டத்தால் பயன் பெற்றவர்கள் மற்றவர்களுக்கும் இதுகுறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த திட்டத்தில் தற்போது ரூ.40 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 52 கோடி பேர் பயனடைந்து இருக்கிறார். குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் அதிகளவில் பயனடைந்து இருக்கிறார்கள். இந்த திட்டம் அதன் இலக்கை நோக்கி சரியாக சென்று கொண்டு இருக்கிறது என்று கூறிய படி கவர்னர் கைலாஷ்நாதன் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். பின்னர் கண் கண்ணாடியை கழற்றி விட்டு கண்ணீரை துடைத்தார்.
தொடர்ந்து புதிய பயனாளிகளுக்கு முத்ரா கடன் வழங்குவதற்கான ஆணைகளை கவர்னர் வழங்கினார்.
- பயனடைந்தவர்களில் 68 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள்.
- 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாய் வரை வழக்கப்படுகிறது.
முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் 52 கோடி மக்களுக்கு தொழில் தொடங்குவதற்காக பிணையில்லாமல் 33 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதில் பயனடைந்தவர்களில் 68 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்த கடன் 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இன்று, இந்த உதவி மூலம் மக்கள் புதிய வியாபார முயற்சிகளை தொடங்குகின்றனர். அத்துட்ன நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு கட்டமைப்புகளுக்கான பட்ஜெட்டை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இது நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன" என்றார்.
- 10 ஆண்டுகள் நிறைவையொட்டி பயனாளிகள் இன்று பிரதமரின் இல்லத்திற்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது
- இதன்பிறகு அந்த வாலிபர் தனது மாத வருமானம் ரூ.2.5 லட்சம் என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று முத்ரா யோஜனா பயனாளிகளுடன் கலந்துரையாடினார். முத்ரா யோஜனாவின் பயனாளிகள் பிரதமரின் இல்லத்தில் அழைக்கப்பட்டனர்.
முத்ரா யோஜனாவின் 10 ஆண்டுகள் நிறைவையொட்டி பயனாளிகள் இன்று பிரதமரின் இல்லத்திற்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பயனாளிகளிடம் மோடி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன் போது, பிரதமர் நரேந்திர மோடி ஒரு பயனாளியிடம், உங்கள் வருமானம் என்ன என்று கேட்டார். பிரதமர் மோடியின் இந்தக் கேள்வியால் பயனாளி தயங்கினார்.

இது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், "நிதியமைச்சர் என் அருகில் அமர்ந்திருக்கிறார், நான் அவரிடம் சொல்கிறேன். பயப்படாதீர்கள். வருமான வரித்துறையினர் வரமாட்டார்கள்" என்று கிண்டலாக கூறினார். இதைக் கேட்டு அனைத்து பயனாளிகளும் சிரித்தனர். இதன்பிறகு அந்த வாலிபர் தனது மாத வருமானம் ரூ.2.5 லட்சம் என்று தெரிவித்தார்.
முத்ரா திட்டம் பின்தங்கிய குறு நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு நிதியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்கீழ் ரூ.10 லட்சம் வரை அந்நிறுவங்களக்குக்கு கடன் வழங்கப்படுகிறது.






