என் மலர்
நீங்கள் தேடியது "தே.மு.தி.க."
- ஒவ்வொரு கட்சியும் அவர்களது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.
திருவாரூர்:
திருவாரூரில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அ.தி.மு.க. 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை. ஒவ்வொரு கட்சியும் அவர்களது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையனின் பதவியில் பறிக்கப்பட்டது உட்கட்சி பிரச்சினை.
வருகின்ற 13-ந்தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கும் த.வெ.க. தலைவர் விஜய்-க்கு வாழ்த்துக்கள் என்றார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதை பழக்கம் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றவில்லை. தற்போது அனைத்து விலைவாசியும் உயர்ந்து விட்டது. தங்கம் விலை, சொத்து வரி உள்பட அனைத்தும் உயர்ந்து விட்டது. இதையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் சேர்த்து குறைக்க வேண்டும்.
ஜெயலலிதா ஆளுமை மிக்க தலைவர். ஒரு பெண் தலைவர் எனது 'ரோல் மாடல்' என நான் பலமுறை ஜெயலலிதாவை சொல்லி இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமியும் கடந்த ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், அவர் முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.
- 40 தொகுதிகளில் களம்மிரங்குவதற்கு பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்பதே அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் கணக்காக உள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய அ.தி.மு.க., தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் அந்தக் கட்சிக்கு தேர்தலில் தோல்வியே கிடைத்தது.

இதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணிக்கு காய் நகர்த்திய எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அணியில் இருந்து கட்சிகளை இழுத்து புதிய கூட்டணியை அமைத்து விடலாம் என திட்டமிட்டார். ஆனால் அதற்கான சூழல் ஏற்படவே இல்லை .
இந்த நிலையில் தான் அ.தி.மு.க. மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் சேர உள்ளன.
ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த டி.டி.வி. தினகரன் ஓ. பன்னீர்செல்வம், டாக்டர் கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன் ஆகியோரும் இந்த கூட்டணியிலேயே தொடர உள்ளனர்.
இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான புதிய கூட்டணி மெகா கூட்டணியாகவே மாறி இருக்கிறது. இப்படி அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எத்தனை இடங்களை குறி வைத்து காய் நகர்த்தி வருகின்றன என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.
2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ஜ.க. 20 தொகுதிகளில் போட்டியிட்டது. தற்போது இரண்டு மடங்கு கூடுதலாக அந்த கட்சி தொகுதிகளை எதிர்பார்க்கிறது. இதன் மூலம். 40 தொகுதிகளில் களம்மிரங்குவதற்கு அந்த கட்சி திட்டமிட்டு உள்ளது.
பா.ம.க.விற்கு 15 தொகுதிகள் தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் தினகரனுக்கு 10 தொகுதிகள் என முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஓ.பன்னீ செல்வதற்கு தற்போது நான்கு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களை தக்க வைக்கும் வகையில் நான்கு இடங்களை ஒதுக்க லாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தவிர மீதமுள்ள சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளை ஒதுக்கி கொடுப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டணியில் 150 இடங் களில் போட்டியிடுவதற்கு அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ள தன் மூலம் மீதமுள்ள 84 தொகுதிகளையும் பார திய ஜனதா கட்சியிடம் கொடுத்துவிட்டு அவர்கள் மூலமாக மற்ற கட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக வும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. , பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு கள் எவை? எவை? என்பது பற்றிய பட்டியலை தயா ரித்து வைத்துள்ளன.அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி உறுதியாகி இருப்பது போல மற்ற கட்சிகளுடனும் கூட்டணியை இறுதி செய்த பிறகு யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என் கிற விவரங்களை தேர்தல் நேரத்தில் வெளியிடுவ தற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியும் தங்களுக்கு செல் வாக்கு உள்ள பகுதியான கொங்கு பகுதியில் குறிப் பிடத்தக்க தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிட வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளது. இதே போன்று பாட்டாளி மக்கள் கட்சி வடமாநிலங்களில் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை பெறுவதிலும் கவனம் செலுத்த தொடங்கி யுள்ளது.
இப்படி கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகள் தங்களுக்கு தேவையான இடங்களை பெறுவதில் தீவிரம் காட்ட தொடங்கி யுள்ளது.இதன்மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க, கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக விரைவில் இறுதி செய்யப் பட்டு தொகுதி பங்கீடும் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
- சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- சிறப்பு முகாம்களை நாம் தவறாமல் பயன்படுத்தி வாக்காளர் சேர்ப்பு பணிகளில் ஈடுபடவேண்டும் என்றார்.
தூத்துக்குடி:
தே.மு.தி.க. தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது தொடர்பாக நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தயாளலிங்கம் பேசியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி எண்கள் அடிப்படையில் வழங்கப் பட்டுள்ள புதிய வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது, இடமாற்றம் செய்வது, இறந்தவர்கள் மற்றும் நிரந்தரமாக வெளியூர்களிலுள்ள வாக்காளர்களை நீக்கம் செய்வது ஆகிய பணிகளை நிர்வாகிகள் தவறாமல் மேற்கொள்ளவேண்டும்.
நமது கட்சியினர் வருகிற ஜனவரி 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தியாகி உள்ள புதிய வாக்காளர்களை இப்பட்டியலில் அவசியம் சேர்க்கவேண்டும். புதியதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6, ஆதார் விபரம் சேர்ப்பதற்கு 6பி, பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7, எழுத்துப்பிழை, முகவரி மாற்றம் செய்தல் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு படிவம் 8 பூர்த்தி செய்து வரும் டிசம்பர் 8-ந் தேதி வரை வாக்குச்சாவடி மையங்கள் அல்லது வாக்காளர் சேர்ப்பிற்கான தாசில்தார் அலுவலகத்தில் வழங்கலாம்.
மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக புதிய வாக்காளர் சேர்த்தல், இடம் மாறுதல், நீக்கம் செய்தல் போன்ற பணிகளை செய்வதற்கு தேர்தல் ஆணையம் நவம்பர் 12, 13 மற்றும் 26, 27 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்களை நடத்துகிறது.
இந்த சிறப்பு முகாம்களை நாம் தவறாமல் பயன்படுத்தி வாக்காளர் சேர்ப்பு மற்றும் இதர பணிகளில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள், வார்டு, வட்ட செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆகியோர் இணைந்து இப்பணியை சிறப்பாக மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
இதில் மாவட்ட கழக பொருளாளர் விஜயன், பகுதி செயலாளர்கள் சின்னதுரை, நாராயணமூர்த்தி, தங்க முத்து, வல்லரசுதுரை, ராஜா முகமது, மாவட்ட நிர்வாகிகள் சின்னதுரை, செல்வம், சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தூத்துக்குடி மாநகர் மாவட்ட தே.மு.தி.க, சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
- கண் சிகிச்சை முகாமில் ஒன்றிய பொறுப்பாளர் விஜி முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம், நாகர்கோவில் பெஜான் சிங் கண் மருத்துவமனை இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விஜயகாந்த் ஆணைக்கிணங்க, பிரேமலதாவின் வழிகாட்டுதலின்படியும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர் விஜி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை மாவட்ட விஜயகாந்த் மன்ற செயலாளர் கோவில்ராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.
விழாவில் மாவட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவம், மாவட்ட மீனவர் அணி செயலாளர் முனியசாமி, மறவன் மடம் ஊராட்சி தலைவர் மரிய புஷ்பலதா, திரேஸ்புரம் பகுதி செயலாளர் முத்து நகர் மு.சம்சுதீன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் முல்லை கண்ணன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் முத்துமாரி, ஒன்றிய துணைச் செயலாளர் கர்ணன், 4-வது வார்டு செயலாளர் மைக்கேல் ராஜ், ஊராட்சி செயலாளர் அம்புரோஸ், மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிர்வாகி பெரியசாமி மற்றும் மறவன்மடம் ஊராட்சி நிர்வாகிகள், திரவியபுரம் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- தே.மு.தி.க. மாநில தேர்தல் பணி செயலாளர் தங்கமணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
- ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 பேர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
ஆலங்குளம்:
தி.மு.க. அரசை கண்டித்தும், அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் தென்காசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் பழனிசங்கர், வடக்கு மாவட்ட செயலாளர் சோலை கனகராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தேர்தல் பணி செயலாளர் தங்கமணி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
தெற்கு மாவட்ட அவை தலைவர் சுரண்டை சங்கரலிங்கம், வடக்கு மாவட்ட அவை தலைவர் கடையநல்லூர் சரவணன், பொருளாளர்கள் வக்கீல் சந்துரு சுப்பிரமணியன் (தெற்கு), ராமர் (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட நகர செயலாளர் பேச்சி வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், அவைத் தலைவர்கள், பொருளாளர்கள், நிர்வாகிகள், நகர செயலாளர், பொருளாளர்கள், நிர்வாகிகள், பேரூர் நிர்வாகிகள் மற்றும் பிற அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட சுமார் 500 பேர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். முடிவில் தென்காசி தெற்கு மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சுடலைமணி நன்றி கூறினார்.
+2
- திருப்பூர் ஒன்றிய தே.மு.தி.க. சார்பாக பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- பெருமாநல்லூர் நால்ரோட்டில் உள்ள கொடிக்கம்பத்தில் தே.மு.தி.க. கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
திருப்பூர்:
தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்தின் 71-வது பிறந்தநாளையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தியும் கட்சி கொடிகளை ஏற்றியும், ஏழை எளியோருக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ஒன்றிய தே.மு.தி.க. சார்பாக பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறி குழந்தைவேல், பொருளாளர் காளியப்பன், அவைத்தலைவர் சரவணகுமார் ஆகியோருடன் துணை செயலாளர் ஏ .எஸ். அக்பர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தொடர்ந்து பெருமாநல்லூர் நால்ரோட்டில் உள்ள கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அப்போது அந்த வழியாக வந்த பேருந்தில் சென்ற பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கினர். அதனைத்தொடர்ந்து பாண்டியன் நகரில் பகுதி செயலாளர் சரவணகுமார் ஏற்பாட்டில் கொடியினை ஏற்றி வைத்த மாவட்ட செயலாளர் விசைத்தறி குழந்தைவேல், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில் பொட்டு காளியப்பன், மாவட்ட பொருளாளர் ராயபுரம் பா. ஆனந்த், வெள்ளியங்கிரி, பிரபு, வசந்த், யுவராஜ், கிட்டுசாமி உள்ளிட்ட ஏராளமான மாவட்ட, ஒன்றிய, பகுதி, கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொண்டர்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்தும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கியும், கட்சி கொடி ஏற்றியும் விஜயகாந்தின் 71 -வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
- விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி நடந்தது
- மாவட்ட செயலாளர் அமுதன் வழங்கினார்
நாகர்கோவில் :
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி ராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் தங்க கிருஷ்ணன் தலைமையில் அன்னதானமும், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மைக்கேல் ரத்தினம் தலைமையில் அழகப்பபுரம் மெயின் பஸ் நிறுத்தத்தில் வைத்து ஏழை, எளியவர்களுக்கு சேலை மற்றும் வேஷ்டிகளை மாவட்ட செயலாளர் அமுதன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், மாவட்ட துணை செயலாளர் செல்வகுமார் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பாபு, வின்சென்ட் கிங், ஒன்றிய செயலாளர் பரமராஜா, மாவட்ட அணி நிர்வாகி மகேஷ் மற்றும் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் லாசர், பேரூர் செயலாளர்கள் லிங்கம் மற்றும் பரமாத்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.
- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் தே.மு.தி.க.வினர் 150 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
- எம்.ஜி.ஆர். போல் வேடமிட்டு வந்த ராஜா என்பவரும் வி.பி.ஆர்.செல்வகுமாருடன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
மதுரை
மதுரை கோரிப்பாளை யத்தில் உள்ள அ.தி.மு.க. மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் தே.மு.தி.க. முன்னாள் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
அவருடன் தே.மு.தி.க. மதுரை முன்னாள் வடக்கு மாவட்ட துணைச்செயலா ளர்கள் சின்னச்சாமி, இளமி நாச்சி யம்மாள், மேரி ராஜேந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் விஜயராஜா, ராஜேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஷேக்அப்து ல்லா, ராஜா, அண்ணாநகர் பகுதி அவைத் தலைவர்கள் கவிஞர் மணி கண்டன், ரஹமத் பீவி, பகுதி துணைச் செயலாளர் ஆனந்தராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் அனிதா ரூபி, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்கள் திவ்யபாரதி, சுமதி, மாணவரணி துணைச் செயலாளர் மணிகண்ட பிரபு, நெசவாளர் அணி மாவட்ட செயலாளர் பிரகாஷ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜெய பாண்டி, தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் செல்வம் உள்பட 150-க் கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை 30-வது வட்ட செயலாளர் பாம்சி கண்ணன் மற்றும் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் குறிஞ்சி குமரன் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் எம்.ஜி.ஆர். போல் வேடமிட்டு வந்த ராஜா என்பவரும் வி.பி.ஆர்.செல்வகுமாருடன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
- சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பபெறக் கோரி நடந்தது
- சாலையில் அமர்ந்ததால் பரபரப்பு
நாகர்கோவில் :
நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பபெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் தே.மு.தி.க. கட்சி சார்பில் மறியல் போராட்டம் இன்று நடந்தது.
நாகர்கோவில் அருகே திருப்பதிசாரத்தில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் குமரி மாவட்ட தே.மு.தி.க.வினர் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அமுதன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் இந்தியன் சுரேஷ் முன்னிலை வகித்தார்.
போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் செல்வகுமார், அவை தலைவர் அய்யாதுரை, மாநில செயற்குழு உறுப்பினர் வைகுண்ட மணி, ஒன்றிய செயலாளர்கள் பரமராஜா, மைக்கேல் ரத்தினம், நாகராஜன், தங்ககிருஷ்ணன், புகாரி, ஜஸ்டின் பிரபு, செந்தில் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பாக்கியவதி, விஜயா, பாப்பா, வக்கீல் பொன் செல்வராஜன், செந்தில் மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்ககோரி கோஷங்களை எழுப்பினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். மறியல் போராட்டத்தையடுத்து திருப்பதிசாரம் சுங்கச்சாவடி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- தே.மு.தி.க. சார்பாக நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம்
- கிளை நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
நாகர்கோவில் :
தே.மு.தி.க. 19-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட தே.மு.தி.க. சார்பாக நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் இந்தியன் சுரேஷ், கிழக்கு மாவட்ட செயலாளர் அமுதன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட துணை செயலாளர் ஆனிஸ் அலெக்ஸ் வரவேற்றார்.
மாவட்ட அவைத்தலை வர் ராஜன், மாவட்ட துணை செயலாளர்கள் கேப்டன் ஜெகன், ராஜமோகன், ராஜேஷ், கிழக்கு பகுதி செயலாளர் நாஞ்சில் வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மாணவரணி துணை செயலாளர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
கூட்டத்தில் வைகுண்ட ராஜா, சிவானந்த், செல்ல பெருமாள், ராஜாமணி, மறவை நாராயணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், ஊராட்சி, கிளை நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
- இந்தியா கூட்டணி உறுதியானதா என்பது கேள்வி குறியாக உள்ளது
- நாகரில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
நாகர்கோவில், நவ.16-
ராஜாக்கமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் அமுதன்-மோனிஷா திருமணத்தை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நடத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து பிரேமலதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அமுதன் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக வந்துள்ளேன். நேற்று கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபம், கோவில்களுக்கு சென்று விட்டு திருமண விழாவில் கலந்துகொண்டுள்ளேன். சென்னை மெட்ரோ சிட்டியாகும் ஒரு இடத்தில் ரோடு போட்டால் மற்ற இடத்தில் பள்ளம் தோண்டி வருகிறார்கள்.
அதை மூடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மழை நீர் வடிகால் வேலை ஆரம்பித்து கடந்த 2½ ஆண்டுகள் ஆகிறது. பள்ளம் தோன்றுவதில் வேகத்தை காண்பிக்கும் அரசாங்கம் அதை மூடுவதில் காட்டுவதில்லை. இதனால் இருச்சக்கர வாகனங்கள், ஆட்டோ வாகனங்களில் பயணிப்பவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
எனவே தமிழக அரசு சிங்கார சென்னை சிங்கப்பூருக்கு இணையான சென்னை என்று கூறி அரசு அதற்கான வழியோ முயற்சிகளோ எடுக்கவில்லை. உடனடியாக மழைநீர் வடிகால் சரி செய்யும் திட்டத்தை சரி செய்து மக்களை பாதுகாப்பாக பயணம் செய்ய சாலை அமைக்க வேண்டும். தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதை தீர்மானம் செய்பவர்கள் மக்கள்தான். யார் எஜமானர்கள் என்பதை மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பாகும்.
தே.மு.தி.க. தற்பொழுது யாருடனும் கூட்டணியில் இல்லை. நட்பு ரீதியாக அனைவரும் எங்களுடன் பேசி வருகிறார்கள். ஆனால் யாருடன் கூட்டணி என்ற இறுதி அறிவிப்பு எந்த தொகுதியில் யார் வேட்பாளர் என்பதை தலைவர் தான் ஜனவரி மாதத்தில் அறிவிப்பார். அதுவே அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, அதுவே இறுதியான அறிவிப்பாகும். எந்த கட்சியும் கூட்டணி குறித்து இதுவரை பேசவில்லை. தி.மு.க. ஒரு கூட்டணி அமைத்து பயணித்து வருகிறார்கள் . மற்ற கட்சிகள் கூட்டணி குறித்து இதுவரை தொடங்கப்படவில்லை.
இந்தியா கூட்டணி கடைசி வரைக்கும் உறுதியான கூட்டணியா என்பதை கேள்விக்குறியாக உள்ளது. அதில் இருக்கின்ற அத்தனை மாநில முதல்-அமைச்சர்களும் அடுத்த பிரதமரும் நான்தான் என்கிறார்கள். ஒருவர் தான் பிரதமராக வர முடியும். அவர்கள் கூட்டணியில் முரண்பாடு உள்ளது. அந்த கூட்டணி இறுதிவரை செல்லுமா பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் மோடி உள்ளார். எந்த கூட்டணி சரியான கூட்டணி. இறுதி கூட்டணியார் வெல்லப்போகிறார் என்பதை ஜனவரி மாதத்தில் தே.மு.தி.க. முடிவு செய்யும் . யாரும் நீட் தேர்வை பற்றி பேசவில்லை. உதயநிதி மட்டும் தான் அதை பற்றி பேசி வருகிறார். 50 லட்சம் கையெழுத்து என்று கூறி வருகிறார். எல்லாமே கண்துடைப்பாக தான் நான் பார்க்கிறேன். மாணவர்களை குழப்பாமல் இருந்தாலே போதும். மாணவர்கள் படித்து தேர்வு எழுத தயாராகிவிடுவார்கள்.
நீட் தேர்வு வராது வராது என்று கூறிவிட்டு மாணவர்களை குழப்பி விட்டு அவர்களை படிக்கவும் விடாமல் ஒரு தெளிவான முடிவை எடுக்கவிடாமல் உதயநிதி பேசி வருகிறார். நீட் தேர்வு ஒழிக்க முடியாமா என்பது கேள்விக்குறிதான். மாணவர்கள், பெற்றோர்கள் தெளிவாகி விட்டனர். நீட் தேர்வை ஒழிப்பது கடினமாகும். மாணவர்கள் பள்ளிக்கூடங்கள் முடித்து வீட்டிற்கு வந்தவுடன் டியூசனுக்கு செல்கிறார்கள். பள்ளிகளில் சரியான கல்வியை கொடுத்தால் இதுபோன்ற கோச்சிங் சென்டர், டியூஷன் சென்டர் செல்ல தேவை இல்லை. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர உறுதியாக அறிவிக்கப்பட்ட தேர்வு வராது என்று கூறுவதற்கு பதிலாக தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை பள்ளியிலேயே கோச்சிங் கொடுத்து தேர்வில் வெற்றி பெற பழக்கப்படுத்த வேண்டும்.
தி.மு.க. மாநாடு நடத்துவது புதிதல்ல. எப்பொழுதும் ஆட்சிக்கு வந்தால் மாநாடு நடத்தி கொண்டு தான் வருகிறார்கள். கலைஞர் உரிமை தொகை திட்டம் வழங்குவது வெற்றி பெறவில்லை. தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் வறுமை இல்லாத நேர்மையான ஆட்சியை வழங்குவோம். படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு நிச்சயமாக வழங்கப்படும். மருத்துவமும், கல்வியும் இலவசமாக வழங்கப்படும்.
மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது இதெல்லாம் கண்துடைப்பாகும். இதனால் மக்களுக்கு பயன் இல்லை. இதனால் யாரும் ஆதாயம் அடையப்போவதில்லை. தொலைநோக்கு பார்வையோடு சரியான திட்டங்களை மக்களுக்கு செய்ய வேண்டும். அதுதான் மக்கள் வரவேற்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தே.மு.தி.க. தலைவர் உடலுக்கு தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்
- 2001ல் வெளிவந்த "தவசி" படத்திற்கு உரையாடல் எழுதினேன் என சீமான் கூறினார்
தே.மு.தி.க. கட்சியின் தலைவர், பிரபல நடிகர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் நேற்று காலை காலமானார்.
ரசிகர்கள் அஞ்சலி செலுத்த பெருந்திரளாக குவிந்து வருவதால் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு பல அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "விஜயகாந்த் என்றால் துணிவுதான். அவருடைய தவசி படத்துக்கு நான் உரையாடல் எழுதினேன். அப்போதுதான் அவரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது" என தெரிவித்தார்.
இதையடுத்து, 2001ல் வெளியான "தவசி" திரைப்படத்திற்கு படத்தின் இயக்குநர் உதயசங்கர் தான் வசனம் எழுதினார் என்பதை படம் எடுத்து வெளியிட்டு சமூக வலைதளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அதில் "வசனம் - சீமான்" என அத்திரைப்படத்தில் எங்குமே இல்லாததை சுட்டி காட்டும் விமர்சகர்கள், 2023 ஜனவரி மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் திருமகன் காலமான போதும், இரங்கல் தெரிவிக்கும் போது, "நாம் தமிழர் கட்சியில் சேர திருமகன் விரும்பினார்" என சீமான் சர்ச்சையை கிளப்பியதை குறிப்பிடுகின்றனர்.

இரங்கல் தெரிவிக்கும் செய்தியில் சர்ச்சையை கிளப்புவது சீமானுக்கு வாடிக்கையாகி உள்ளதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.






