search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
    X

    கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் நிர்வாகிகளிடம் வரைவு வாக்காளர் பட்டியலை அளித்த காட்சி.

    தூத்துக்குடி தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    • சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    • சிறப்பு முகாம்களை நாம் தவறாமல் பயன்படுத்தி வாக்காளர் சேர்ப்பு பணிகளில் ஈடுபடவேண்டும் என்றார்.

    தூத்துக்குடி:

    தே.மு.தி.க. தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது தொடர்பாக நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தயாளலிங்கம் பேசியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதன்படி சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி எண்கள் அடிப்படையில் வழங்கப் பட்டுள்ள புதிய வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது, இடமாற்றம் செய்வது, இறந்தவர்கள் மற்றும் நிரந்தரமாக வெளியூர்களிலுள்ள வாக்காளர்களை நீக்கம் செய்வது ஆகிய பணிகளை நிர்வாகிகள் தவறாமல் மேற்கொள்ளவேண்டும்.

    நமது கட்சியினர் வருகிற ஜனவரி 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தியாகி உள்ள புதிய வாக்காளர்களை இப்பட்டியலில் அவசியம் சேர்க்கவேண்டும். புதியதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6, ஆதார் விபரம் சேர்ப்பதற்கு 6பி, பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7, எழுத்துப்பிழை, முகவரி மாற்றம் செய்தல் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு படிவம் 8 பூர்த்தி செய்து வரும் டிசம்பர் 8-ந் தேதி வரை வாக்குச்சாவடி மையங்கள் அல்லது வாக்காளர் சேர்ப்பிற்கான தாசில்தார் அலுவலகத்தில் வழங்கலாம்.

    மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக புதிய வாக்காளர் சேர்த்தல், இடம் மாறுதல், நீக்கம் செய்தல் போன்ற பணிகளை செய்வதற்கு தேர்தல் ஆணையம் நவம்பர் 12, 13 மற்றும் 26, 27 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்களை நடத்துகிறது.

    இந்த சிறப்பு முகாம்களை நாம் தவறாமல் பயன்படுத்தி வாக்காளர் சேர்ப்பு மற்றும் இதர பணிகளில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள், வார்டு, வட்ட செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆகியோர் இணைந்து இப்பணியை சிறப்பாக மேற்கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இதில் மாவட்ட கழக பொருளாளர் விஜயன், பகுதி செயலாளர்கள் சின்னதுரை, நாராயணமூர்த்தி, தங்க முத்து, வல்லரசுதுரை, ராஜா முகமது, மாவட்ட நிர்வாகிகள் சின்னதுரை, செல்வம், சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×