என் மலர்
நீங்கள் தேடியது "Vijayakanth"
- கொஞ்சம் கொஞ்சமாகத் தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
- தனித்து நின்று நாங்கள் நிச்சயம் வலிமை பெறுவோம்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாக குழு கலந்தாய்வு கூட்டம் சென்னை, வடபழனியில் இன்று நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
234 சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் வந்திருந்த நிர்வாகிகள் மத்தியில் சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்வது தொடர்பாக சீமான் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து பேசினார்.
முன்னதாக சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டணிக்காக காத்திருக்காமல் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறோம் களத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். நல்ல அரசியல் உருவாக வேண்டும் என்கிற எண்ணத்தோடு செயல்பட உள்ளோம்.
வாக்குக்கு பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு மத்தியில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி பணம் வாங்காமல் 35 லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளனர்.
இது 60 லட்சமாக உயர்ந்து ஒரு கோடியை எட்டும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.
கொஞ்சம் கொஞ்சமாகத் தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அவசரம் காட்டக்கூடாது. நான் தற்போது மக்களுக்கு கசாயம் கொடுத்து வருகிறேன். அது மெதுவாகத்தான் வேலை செய்யும். கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் செய்த தவறை நான் நிச்சயம் செய்ய மாட்டேன். அரசியல் கட்சிகளுக்கு மாற்று என்று கூறிவிட்டு அந்த கட்சிகளோடு கூட்டணி அமைத்தால் எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
10 சதவீத வாக்குகளை தனித்து நின்று பெற்ற விஜயகாந்த் கூட்டணி அமைத்த பிறகு என்ன ஆனார் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு தான் அவரது வாக்கு சதவீதம் குறைந்தது. எனவே எந்த தேர்தலிலும் யாருடனும் எப்போதும் கூட்டணி கிடையாது.
தனித்து நின்று நாங்கள் நிச்சயம் வலிமை பெறுவோம். ஆட்சி அதிகாரத்தில் அமர்வோம் என்கிற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு சீமான் கூறினார்.
- விஜய் யாரை மனதில் வைத்து பேசுகிறார் என்பது தெரியவில்லை.
- எங்களுடைய கட்சி வளர்ச்சியில் தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி அருகே உள்ள அண்ணா சிலைக்கு தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க. 3 கட்சிகளுக்கு தான் பூத் கமிட்டி உள்ளது. உச்ச நட்சத்திரங்களுக்கு மக்கள் கூட்டம் கூடுவது இயல்புதான். இதை நாங்கள் 1990-களில் இருந்து பார்த்து வருகிறோம். விஜயகாந்துக்கும் அதிக அளவிற்கு கூட்டம் கூடியது.
விஜய்க்கும் மக்கள் கூட்டம் கூடியது. விஜய் அந்த கூட்டத்தை முறையாக ஒழுங்குப்படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். தி.மு.க மற்றும் பா.ஜ.க.வை விஜய் எதிர்த்து வருகிறார். அவரை அக்கட்சியினர் விமர்சனம் செய்து தான் பேசுவார்கள். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே அதிக வாக்கு சதவீதம் பெற்றவர். அவருடன் வேறு யாரையும் ஒப்பிடவே கூடாது. அவ்வாறு ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம்.
விஜய் யாரை மனதில் வைத்து பேசுகிறார் என்பது தெரியவில்லை. விஜய் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் விஜய் தான் பதில் அளிக்க வேண்டும். விஜய் குறித்து அவரிடம் கேட்காமல் மற்றவர்களிடம் கேள்வி கேட்பது தவறு. இனிமேல் கூட்டணி குறித்தும், விஜய் குறித்தும் என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் என ஏற்கனவே கூறியுள்ளேன்.
எல்லா கட்சியும் எங்களுடைய நண்பர்கள் தான் கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் எங்களுக்கு நேரம் வேண்டும். விஜயகாந்த் இல்லாமல் நாங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் எங்களுடைய கட்சி வளர்ச்சியில் தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விஜய் தற்போது சந்திக்கும் நெருக்கடிகளை தே.மு.தி.கவும் சந்தித்து கடந்து வந்தது.
- குறுகிய காலத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற முதல் தலைவர் விஜயகாந்த் தான்.
புதுக்கோட்டை:
த.வெ.க. தலைவர் விஜய், கேப்டன் விஜயகாந்தை பின்பற்றி வருவதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
* விஜய் தற்போது சந்திக்கும் நெருக்கடிகளை தே.மு.தி.கவும் சந்தித்து கடந்து வந்தது.
* 20 ஆண்டுகளில் எத்தனையோ சவால்களால், எத்தனையோ விதமான இடையூறுகளை கடந்து 21-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.
* குறுகிய காலத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற முதல் தலைவர் விஜயகாந்த் தான்.
* தமிழகத்தில் மிகப்பெரிய 2 கட்சிகள், தேசிய கட்சிகள் உள்ளதால் தடைகளை கடந்து வருவது தான் வெற்றி.
* தடைகள் இருக்கும். தடைகளை உடைத்து வருவதுதான் வெற்றி.
* ஆட்சியில் பங்கு என்பதை வரவேற்கிறோம். ஏன் என்றால்.. அதிகாரம் ஒரே இடத்தில் இல்லாமல், எல்லாருக்கும் பகிர்ந்து தரப்படும்போது கேள்விகள் கேட்க முடியும். மக்களுக்கு இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்றார்.
இதனிடைய, அ.தி.மு.க.வில் நிலவும் பிரச்சனை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, எல்லாரும் ஒன்றாக இருந்தால் தான் பலம். பிரிந்து இருந்தால் எப்படி பலம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று கூறினார்.
- விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து 10 விழுக்காட்டிற்கு மேல் வாக்குகள் பெற்றார்.
- சிரஞ்சீவியும் கட்சி தொடங்கினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது த.வெ.க. குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, "விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து 10 விழுக்காட்டிற்கு மேல் வாக்குகள் பெற்றார். விருத்தாசலத்தில் தான் எம்.எல்.ஏ. ஆனார். 10 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்ற கட்சி இன்று எப்படி இருக்கிறார்கள் என்பதை நாம் திரும்பி பார்க்க வேண்டும். நல்ல சித்தாத்தம், நல்ல கருத்துகளை பேசினார். யாரையும் அவர் வசைபாடவில்லை.
அதேபோல் சிரஞ்சீவியும் கட்சி தொடங்கினார். 20 லட்சம் பேர் கலந்து கொண்டதாக சொன்னார்கள். கடைசியில் என்ன ஆச்சு. காங்கிரசுடன் இணைத்து விட்டார்கள். இப்போ அந்த கட்சி இருக்கிறதா என்றால் அந்த கட்சியே கிடையாது. இதேபோல் பல கட்சிகளை சொல்லலாம்"
இவ்வாறு அவர் கூறினார்.
- தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
- அவருக்கு சினிமா துறையினரும் அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு சினிமா துறையினரும் அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நீங்கா நினைவில் வாழும் அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வணக்கத்துடன் பிறந்தநாள் வாழ்த்துகள்.
என கூறினார்.
- தன்னுடைய உணர்ச்சிமிகு நடிப்பால் வெகுஜன மக்களை ஈர்த்த திரை ஆளுமை...
- எளிய மக்கள் மீது உண்மையான அக்கறையோடு செயல்பட்ட பண்பாளர்...
சென்னை:
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில்,
தன்னுடைய உணர்ச்சிமிகு நடிப்பால் வெகுஜன மக்களை ஈர்த்த திரை ஆளுமை,
எளிய மக்கள் மீது உண்மையான அக்கறையோடு செயல்பட்ட பண்பாளர்,
தனது கடின உழைப்பால் பொதுவாழ்விலும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், மறைந்த அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில், உள்நோக்கமற்ற அவரின் ஈகை குணத்தையும், மறைந்தும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும் அவர் மீதான அன்பையும் நினைவுகூர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
- சினிமா, அரசியல் துறையின் சாதனையாளரும், சினிமாத்துறையில் எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அருமை நண்பருமான புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த்.
- அவருடன் பயணித்த அற்புதமான நினைவுகளையும், எண்ணற்ற தருணங்களையும் நினைவுகூறுகிறேன்.
சென்னை:
நடிகரும், பா.ஜ.க. உறுப்பினருமான சரத்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,
சினிமா, அரசியல் துறையின் சாதனையாளரும், சினிமாத்துறையில் எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அருமை நண்பருமான புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில், அவருடன் பயணித்த அற்புதமான நினைவுகளையும், எண்ணற்ற தருணங்களையும் நினைவுகூறுகிறேன்.
அன்றாடம் நீங்காத நினைவுகளில் நிறைந்திருக்கும், அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை அவர்தம் பிறந்தநாளில் நினைவுகூர்ந்து மகிழ்வோம் என்று கூறியுள்ளார்.
- மக்கள் பாசம், எளிமை, தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கான பார்வை ஆகியவை அடுத்த தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருக்கும்.
- கேப்டன் விஜயகாந்த் உழைப்பையும், தமிழ் மக்களுக்கான சேவையையும் மரியாதையுடன் நினைவுகூருகிறேன்.
சென்னை:
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இன்று மறைந்த தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர், மக்கள் மனங்களை கவர்ந்த அரசியல்வாதியும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.
தமிழக அரசியலில் எப்போதும் தனித்துவமான குரலாகவும், சமூகநீதிக்காக எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டவராகவும் அவர் வாழ்ந்தார். திரை உலகில் அவர் சாதித்த பெருமை, அரசியல் உலகிலும் மக்கள் நலனுக்காக அவர் எடுத்துக்கொண்ட துணிச்சலான நிலைப்பாடுகள் என்றும் நினைவுகூரத்தக்கவை.
அவரது மக்கள் பாசம், எளிமை, தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கான பார்வை ஆகியவை அடுத்த தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருக்கும்.
இந்நாளில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உழைப்பையும், தமிழ் மக்களுக்கான சேவையையும் மரியாதையுடன் நினைவுகூருகிறேன். அவரது நினைவுகள் எப்போதும் நம் மனங்களில் நிலைத்து நிற்கும் என்றார்.
- திரையுலகிலும், அரசியல் தளத்திலும், மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் கேப்டன்.
- ஏழை, எளிய மக்களின் பசியாற்றும் அறப்பணி, இன்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொடர்வது பாராட்டுக்குரியது.
சென்னை:
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தேமுதிக நிறுவனர் தலைவர், பத்மபூஷன், அமரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பிறந்த தினம் இன்று.
திரையுலகிலும், அரசியல் தளத்திலும், மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் கேப்டன் அவர்கள். நடிகர் சங்கத் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் அவரது துணிச்சலான பணிகள் போற்றுதலுக்குரியவை.
கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். அவர் தொடங்கிய ஏழை, எளிய மக்களின் பசியாற்றும் அறப்பணி, இன்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொடர்வது பாராட்டுக்குரியது.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்" என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழும், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.
- விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக தே.மு.தி.க. கடைபிடித்து வருகிறது.
- பொதுச் செயலாளர் பிரேமலதா ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை:
விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக தே.மு.தி.க. கடைபிடித்து வருகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று விஜயகாந்த் பிறந்தநாள், வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்பின்னர் நிருபர்களிடம் பிரேமலதா கூறியதாவது:
இப்போது தான் விஜய் உங்களுக்கு பெரியதாக தெரிகிறார். ஆனால், விஜய் சிறிய பையனாக இருந்ததில் இருந்தே பார்த்து வருகிறோம். என்னை பொருத்தவரையில் அவர் எனது மகன் போன்றவர். அவருக்காக 'செந்தூரபாண்டி' படத்தில் விஜயகாந்த் நடித்து கொடுத்தார். இன்று அவர் நன்றாக இருக்கிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். அதற்காக அவர் விஜயகாந்த் படத்தை அரசியலுக்காகப் பயன்படுத்தினால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.
- உடல்நிலை பாதிப்படைந்திருந்தபோது கேப்டன் அண்ணனாக தெரியவில்லையா?
- உலகம் அறிந்த உண்மையை உரக்க சொல்லியிருக்கிறார் சீமான்
த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்த மாநாட்டில் பேசிய விஜய், விஜயகாந்தை அண்ணன் என்று கூறி புகழ்ந்து பேசினார். விஜயகாந்தை விஜய் புகழ்ந்து பேசியதை விமர்சித்த சீமான், "விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போது விஜய், அவர் கட்சிக்கு ஆதரவாக பேசவும், அவரை சந்திக்கவும் இல்லை; என் கருத்துக்கு வாக்கு செலுத்துங்கள் என்று சொல்லவில்லை. என் முகத்துக்கு வாக்கு செலுத்துங்கள் என்று விஜய் கூறுகிறார்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், விஜயகாந்த் குறித்து விஜய் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, "தலைவர் விஜய்காந்த் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது விஜய் அவரை வந்து சந்திக்கவில்லை. ஆனால், இறந்த பிறகு வந்து பார்த்தார். இது பற்றி நானே அவரிடம் நேரில் கேட்பேன், உலகம் அறிந்த உண்மையை உரக்க சொல்லியிருக்கிறார் சீமான்" என்று தெரிவித்தார்.
- அவரது 100-வது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை புதுப்பொலிவுடன் இன்று தமிழ்நாடு முழுவதும் ரீரிலீஸ் செய்யப்பட்டது.
- பிரேமலதா மற்றும் அவரது மகனான விஜய பிரபாகரன் படத்தை பார்த்தனர்.
தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற ஆக்ஷன் நாயகனாகவும், 'கேப்டன்' என்று கோடிக்கணக்கான மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான விஜயகாந்தின் நினைவுகளைப் போற்றும் வகையில், அவரது 100-வது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை புதுப்பொலிவுடன் இன்று தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
பலரும் இப்படத்தை பார்த்து வருகின்றனர். இன்று படத்தை பிரேமலதா மற்றும் அவரது மகனான விஜய பிரபாகரன் பார்த்தனர். படத்தை பார்த்து அவர்கள் இருவரும் விஜயகாந்தை பார்த்து கதறி அழுத காட்சி இணையத்தில் அனைவரும் மனதை உருக்கியுள்ளது.
1991-ம் ஆண்டு, தமிழ்ப் புத்தாண்டு அன்று இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான 'கேப்டன் பிரபாகரன்', பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படம் விஜயகாந்த் அவர்களுக்கு மக்கள் மத்தியில் 'கேப்டன்' என்ற அடையாளப் பெயரைப் பெற்றுத் தந்தது, அதுவே அவரது வாழ்நாள் முழுவதும் நிலைத்தது.
இசைஞானி இளையராஜாவின் அதிரடியான இசையில், விஜயகாந்துடன் சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலி கான், லிவிங்ஸ்டன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






