என் மலர்
நீங்கள் தேடியது "PremalathaVijayakanth"
- விஜய் யாரை மனதில் வைத்து பேசுகிறார் என்பது தெரியவில்லை.
- எங்களுடைய கட்சி வளர்ச்சியில் தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி அருகே உள்ள அண்ணா சிலைக்கு தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க. 3 கட்சிகளுக்கு தான் பூத் கமிட்டி உள்ளது. உச்ச நட்சத்திரங்களுக்கு மக்கள் கூட்டம் கூடுவது இயல்புதான். இதை நாங்கள் 1990-களில் இருந்து பார்த்து வருகிறோம். விஜயகாந்துக்கும் அதிக அளவிற்கு கூட்டம் கூடியது.
விஜய்க்கும் மக்கள் கூட்டம் கூடியது. விஜய் அந்த கூட்டத்தை முறையாக ஒழுங்குப்படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். தி.மு.க மற்றும் பா.ஜ.க.வை விஜய் எதிர்த்து வருகிறார். அவரை அக்கட்சியினர் விமர்சனம் செய்து தான் பேசுவார்கள். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே அதிக வாக்கு சதவீதம் பெற்றவர். அவருடன் வேறு யாரையும் ஒப்பிடவே கூடாது. அவ்வாறு ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம்.
விஜய் யாரை மனதில் வைத்து பேசுகிறார் என்பது தெரியவில்லை. விஜய் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் விஜய் தான் பதில் அளிக்க வேண்டும். விஜய் குறித்து அவரிடம் கேட்காமல் மற்றவர்களிடம் கேள்வி கேட்பது தவறு. இனிமேல் கூட்டணி குறித்தும், விஜய் குறித்தும் என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் என ஏற்கனவே கூறியுள்ளேன்.
எல்லா கட்சியும் எங்களுடைய நண்பர்கள் தான் கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் எங்களுக்கு நேரம் வேண்டும். விஜயகாந்த் இல்லாமல் நாங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் எங்களுடைய கட்சி வளர்ச்சியில் தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கேப்டன் விஜயகாந்த் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர்.
- பிரதமர் மோடிக்கும், விஜயகாந்துக்கும் இடையிலான உறவு அரசியலை தாண்டிய ஒன்று.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த தே.மு.தி.க. தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்று கடந்த வாரம் பிரேமலதா கூறி இருந்தார்.
இதற்கிடையே சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணிக்குள் தே.மு.தி.க.வையும் கொண்டுவர முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் பிரதமர் மோடியை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா புகழ்ந்துள்ளார். கூட்டணி தொடர்பான யூகங்கள் எழுந்து வரும் நிலையில் மோடியை புகழ்ந்து அளித்த பேட்டியை பிரேமலதா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரேமலதா கூறியதாவது:-
கேப்டன் விஜயகாந்த் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர்.
பிரதமர் மோடிக்கும், விஜயகாந்துக்கும் இடையிலான உறவு அரசியலை தாண்டிய ஒன்று. தமிழகத்தின் சிங்கம் என்று விஜயகாந்தை அன்பாக அழைப்பார். விஜயகாந்த் உடல்நலக்குறைவோடு இருந்த போது அடிக்கடி தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
மோடி-விஜயகாந்த் இடையிலான நட்பு பரஸ்பர மரியாதை மற்றும் அன்பினால் கட்டமைக்கப்பட்டு இருந்தது என்று கூறி இருந்தார்.
இந்தநிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில்,
நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம்.
சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.
- உண்மையானவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் இந்த நாட்டில் இடம் இல்லையா?
- கனிமவள கொள்ளை அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் இருந்து அத்தனை வளங்களும் சுரண்டப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்தை கண்டித்தும், கேரளாவிற்கு தென்காசி வழியாக கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்கக்கோரி ஆலங்குளத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
அவருக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட தே.மு.தி.க. பொறுப்பாளர் தயாளலிங்கம் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் மாலதி, துரை, பொருளாளர் விஜயன், பகுதி செயலாளர் சின்னத்துரை மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
கனிமவள கொள்ளை அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் இருந்து அத்தனை வளங்களும் சுரண்டப்படுகிறது. இதுகுறித்து கேட்டால் எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் மாறி மாறி குறை சொல்கிறார்கள். இதை தட்டிக்கேட்ட ஒரு நியாயமான அதிகாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது எந்த வகையில் நியாயம்?. உண்மையானவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் இந்த நாட்டில் இடம் இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வி.ஏ.ஓ. குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரூ.1 கோடி அறிவித்துள்ளார். இதனால் போன உயிர் வந்துவிடுமா. நியாயமாக உழைக்கும் அதிகாரிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?.
3 மருத்துவ கல்லுரிகளின் உரிமம் ரத்து செய்து இருக்கிறார்கள். ஸ்டான்லி கல்லூரி உரிமத்தை ரத்து செய்தது தமிழகத்திற்கு ஒரு தலை குனிவு. பள்ளிக்கூட கட்டிடம் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. ஆனால் டாஸ்மாக் கடை ஒரு தெருவுக்கு 10 திறக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்புக்கு வாழ்த்துக்கள். இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாள் இன்று. நல்ல ஒரு விஷயம் நாட்டிற்காக நடந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக ஜனாதிபதியை அழைத்து இருக்க வேண்டும். அந்த நல்ல நிகழ்வை வரவேற்போம். தமிழகத்தில் இருந்து செங்கோல் அங்கு அமைவது ஒட்டு மொத்த தமிழருக்கு கிடைத்த பெருமை.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவிட்டு ஆலங்குளத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்றார்.
- சீமான் எப்போதும் ஒரே நிலைப்பாடோடு இருக்கணும்.
- விஜய் முன்னெடுத்து செல்லும் நிகழ்வுகள் பொருத்துதான் எல்லாமே இருக்கிறது.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீர் என்று அந்நியனாகவும் மாறுவார். திடீர் என்று அம்பியாகவும் மாறுவார். இதற்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை.
ஏன் தம்பி என்று சொன்னார் ? பிறகு ஏன் லாரியில் அடிப்பட்டு சாகணும் சொல்கிறார். எல்லாவற்றிற்கும் அவர் தான் பதில் சொல்ல வேண்டும். பதில் நான் சொல்லி தேவையில்லை.
எப்போதும் ஒரே நிலைப்பாடோடு இருக்கணும். எல்லோருக்கும் பேசுகின்ற சக்தியை கடவுள் வழங்கியிருக்கிறார். அதற்காக நாம், வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது என்கிற கருத்தை மட்டும் நான் சொல்லிக் கொள்கிறேன்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பு தன்னுடைய எதிரி யார் என்று தெரிந்துக் கொண்டு தான் அரசியலுக்கு வருகிறார்கள். அந்த வகையில் விஜய்யும் தன்னுடைய கருத்தை சொல்லி இருக்கிறார். அதனால் பொருத்து இருந்து பார்ப்போம்.
இன்னும் வருங்காலம் இருக்கிறது. இப்போது தான், விஜய் மாநாடு நடத்தி கொடி ஏற்றி இருக்கிறார். இன்னும் அவர் நடந்து வரவேண்டிய பாதை ஏராளம். எனவே, நிச்சயமாக வருங்காலங்களில் அவருடைய செயல்பாடுகள், அவர் முன்னெடுத்து செல்லும் நிகழ்வுகள் பொருத்துதான் எல்லாமே இருக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மக்கள், பத்திரிக்கையாளர்களை விஜய் சந்தித்து பேச வேண்டும் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.
- யாரோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கப் போகிறார் என்பதை விஜய் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் முதல்முறையாக யாருடைய கூட்டணியும் இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு சாதனை செய்தது தேமுதிக மட்டும்தான்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறு குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
விஜயை செந்தூரப்பாண்டி படம் மூலம் தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர் கேப்டன் விஜயகாந்த். விஜய் எங்கள் வீட்டு பிள்ளை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சினிமா வேறு அரசியல் வேறு.
மக்களை சந்தித்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினால் தான் அரசியலில் விஜய் நிலைத்து நிற்க முடியும். யாரோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கப் போகிறார் என்பதை விஜய் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
- 2026ல் நாங்கள் இடம்பெறும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.
இந்த கூட்டத்தில், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்காது என தெரிவித்தது. இதற்கிடையே, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
தேமுதிகவை பொறுத்தவரையில் தாய் மொழியை காத்து அதேபோல் அனைத்து மொழியையும் காக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
பல்வேறு வகைகளில் வருங்காலம் சிறக்கும். எனவே அவர் அவர்களுக்கு பிடித்த மொழிகளை படிப்பதில் எந்த தவறும் இல்லை.
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சியான எங்களுக்கும் ஒரு வார காலத்திற்கு முன்பே அழைப்பு வந்துவிட்டது. அதனால் உறுதியாக தேமுதிக அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்.
தமிழக முழுவதும் பல்வேறு விதமான சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் இருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம் டாஸ்மாக், கள்ளச்சாராயம், போதை வஸ்துகள் அதிகரிப்பு, வேலை இல்லாத நிலைமை, பாலியல் வன்கொடுமை என எல்லா பக்கமும் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. நிச்சயம் இது தடுக்கப்பட வேண்டும். 2026ல் நாங்கள் இடம்பெறும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






