சீமான் திடீரென அந்நியனாகவும் மாறுவார்.. அம்பியாகவும் மாறுவார்..- பிரேமலதா விஜயகாந்த்

சீமான் எப்போதும் ஒரே நிலைப்பாடோடு இருக்கணும்.விஜய் முன்னெடுத்து செல்லும் நிகழ்வுகள் பொருத்துதான் எல்லாமே இருக்கிறது.
சீமான் திடீரென அந்நியனாகவும் மாறுவார்.. அம்பியாகவும் மாறுவார்..- பிரேமலதா விஜயகாந்த்
Published on

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீர் என்று அந்நியனாகவும் மாறுவார். திடீர் என்று அம்பியாகவும் மாறுவார். இதற்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை.

ஏன் தம்பி என்று சொன்னார் ? பிறகு ஏன் லாரியில் அடிப்பட்டு சாகணும் சொல்கிறார். எல்லாவற்றிற்கும் அவர் தான் பதில் சொல்ல வேண்டும். பதில் நான் சொல்லி தேவையில்லை.

எப்போதும் ஒரே நிலைப்பாடோடு இருக்கணும். எல்லோருக்கும் பேசுகின்ற சக்தியை கடவுள் வழங்கியிருக்கிறார். அதற்காக நாம், வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது என்கிற கருத்தை மட்டும் நான் சொல்லிக் கொள்கிறேன்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பு தன்னுடைய எதிரி யார் என்று தெரிந்துக் கொண்டு தான் அரசியலுக்கு வருகிறார்கள். அந்த வகையில் விஜய்யும் தன்னுடைய கருத்தை சொல்லி இருக்கிறார். அதனால் பொருத்து இருந்து பார்ப்போம்.

இன்னும் வருங்காலம் இருக்கிறது. இப்போது தான், விஜய் மாநாடு நடத்தி கொடி ஏற்றி இருக்கிறார். இன்னும் அவர் நடந்து வரவேண்டிய பாதை ஏராளம். எனவே, நிச்சயமாக வருங்காலங்களில் அவருடைய செயல்பாடுகள், அவர் முன்னெடுத்து செல்லும் நிகழ்வுகள் பொருத்துதான் எல்லாமே இருக்கிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com