search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TVK Party"

    • இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம்.
    • இந்தப் புதிய அணி, கழக உள்கட்டமைப்பைச் சார்ந்து விரைவில் விரிவாக்கம் செய்யப்படும்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். இதன் முதற்கட்டமாக, உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம்.

    மகளிர் தலைமையில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர். கழகத் தோழர்களோடு இணைந்து, மக்களுக்கு உதவி செய்வார்கள்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணிக்கு, மாநிலச் செயலாளர் சி.விஜயலட்சுமி, மாநில இணைச் செயலாளர் எஸ்.என். யாஸ்மின், மாநிலப் பொருளாளர் வி. சம்பத்குமார், மாநிலத் துணைச் செயலாளர் ஏ. விஜய் அன்பன், மாநிலத் துணைச் செயலாளர் எம்.எல். பிரபு ஆகிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தப் புதிய அணி, கழக உள்கட்டமைப்பைச் சார்ந்து விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

    • 2 கோடி உறுப்பினர்களை கழகத்தில் சேர்க்க இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
    • புதிய வாக்காளர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்ட வாக்காளர்கள் அனைவரையும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    2 கோடி உறுப்பினர்களை கழகத்தில் சேர்க்க இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக வெற்றிகளாக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

    இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நம் தலைவர் அவர்களின் ஆணைப்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும்.

    நமது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களால் விரைவில் முதற்கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர். உறுப்பினர் சேர்க்கை அணியுடன் இணைந்து, புதியதாக நியமிக்கப்பட இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோர் முழு அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

    தமிழக வெற்றிக் கழகத்தால் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்புச் செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்ட, மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, வார்டு வாரியாக முழுவீச்சில் நடத்தி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். தலைவர் அவர்களின் ஆணையை ஏற்று, இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்டப் பணியாகும்.

    ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள, புதிய வாக்காளர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்ட வாக்காளர்கள் அனைவரையும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ரீதியாகவும். சட்டமன்றத் தொகுதி வாரியாகவும் புதிய திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள். தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் தொடர்புடைய வாக்காளர் பட்டியலின் நகலை முறைப்படி பெற்றுக்கொள்ள வேண்டும்.

    மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள், தங்களது நிர்வாகத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும். பூத் கமிட்டி அமைத்து, பூத் வாரியாக வாக்காளர்களில் கட்சி சார்புள்ளவர்கள் யார்? யார்? எந்தக் கட்சியையும் சாராதவர்கள் யார்? யார்? என்ற விவரங்களையும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    நமது கழகத் தலைவர் அவர்களின் உந்தரவின் பேரில், மாவட்ட சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை ஏற்றுச் செயல்படுவதைக் கடமையாகக் கருத வேண்டும்.

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை அறிவித்து, தலைவர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நமது இலக்கு குறித்தும், அரசியல் நிலைப்பாடு குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளார்கள். அதனை மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

    • ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் சாமி தலைமை தாங்கினார்.
    • பச்சேரி கிராமத்தில் வெண்ணிக்காலாடிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    புளியங்குடி:

    புளியங்குடியில் தமிழர் விடுதலை களம் கட்சி சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வெண்ணிக்காலாடிக்கு மணிமண்டபம் அமைத்துதரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புளியங்குடி பேருந்து நிலையம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் சாமி தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் சுரேஷ் பாண்டியன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் குமார், ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், தீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் விடுதலைக் கழக நிறுவனத் தலைவர் ராஜ்குமார்பாண்டியன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பச்சேரி கிராமத்தில் வெண்ணிக்காலாடிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும், வெண்ணிக்காலாடி நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகி கடலரசன் நன்றி கூறினார்.

    ×