என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா பிறந்தநாள்"

    • வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைகளுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு இன்று காலை 10 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த உருவப்படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அவருடன் பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி., முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு, மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி, எழிலன், மேயர் பிரியா, தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., கவிஞர் தமிழ்தாசன், பகுதி செயலாளர் அகஸ்டின் பாபு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

    இதே போல் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியவர்.
    • ஆட்சி மாற்றத்தை மக்கள் ஆதரவுடன் மீண்டும் தமிழகத்தில் நிகழ்த்திக் காட்ட உறுதி ஏற்போம்.

    பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மாநில உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பியவர்.

    இருமொழிக் கொள்கையைத் தமிழகத்திற்குத் தந்தவர்.

    தமிழ்நாடு என்று சட்டப்படி பெயர் மாற்றியவர்.

    சமூக நீதியைக் கொள்கையாகக் கொண்டிருந்தவர்.

    சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியவர்.

    குடும்ப ஆதிக்கமற்ற அற்புத அரசியல் தலைவர்.

    கொள்கை வழி நின்றவர்.

    கனிவின் திருவுருவம்.

    இரட்டை வேடம் போட்டுத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல் அவர்களுக்காக உண்மையாக உழைத்தவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்.

    தேர்தல் அரசியலில் அசாத்திய வியூகத்தை வகுத்து, மாபெரும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கு வழிவகுத்த பேரறிஞரின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம்.

    'மக்களிடம் செல்' என்ற அவரது அரசியல் மந்திரத்தைப் பின்பற்றி, 1967 தேர்தல் அரசியல் வெற்றி விளைவை, ஆட்சி மாற்றத்தை மக்கள் ஆதரவுடன் மீண்டும் தமிழகத்தில் நிகழ்த்திக் காட்ட உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என்றால் அண்ணா!
    • அண்ணாவைப் பெயரில் மட்டும் அல்ல- கொள்கையில், செயலில், அரசியல் அறத்தில் 53 ஆண்டுகளாக பெருமையோடு ஏந்தி நிற்கிறது அதிமுக

    பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என்றால் அண்ணா!

    அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ், திராவிடம்!

    இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி

    ஆட்சி அமைக்க முடியுமா?

    நாட்டுக்குள் ஒரு தமிழ்-நாடா?

    என்று சந்தேக கேள்விகள் கேட்ட காலத்தில்

    தன் செயலால், சாதனையால் பதில் சொன்ன தென்னாட்டுத் தென்றல், நம் அண்ணா!

    அண்ணாவைப் பெயரில் மட்டும் அல்ல- கொள்கையில், செயலில், அரசியல் அறத்தில் 53 ஆண்டுகளாக பெருமையோடு ஏந்தி நிற்கிறது அஇஅதிமுக

    குடும்பப் பின்புலமற்ற நம்மைப் போன்ற சாமானியர்களை அரியணை ஏற்றும் திராவிட அரசியலின் ஈடு இணையற்ற தலைமகனான பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று,

    குடும்ப ஆட்சியின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தை மீட்டு, சாமானிய மக்களுக்கான #அண்ணாயிசம் போற்றும் ஆட்சியை #அஇஅதிமுக தலைமையில் நிறுவிட உறுதியேற்போம்.

    மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்.

    அண்ணா நாமம் வாழ்க!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டு அரசியலை சாமானியன் பக்கம் திருப்பிவிட்ட 'கடமை',
    • பொதுவாழ்வில் கொள்கைப் பகைத்தவிர, தனிப்பகை கொள்ளாத 'கண்ணியம்',

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஜனநாயகப் பேரதிசயம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் இன்று!

    தமிழ்நாட்டு அரசியலை சாமானியன் பக்கம் திருப்பிவிட்ட 'கடமை',

    பொதுவாழ்வில் கொள்கைப் பகைத்தவிர, தனிப்பகை கொள்ளாத 'கண்ணியம்',

    எண்ணம் - பேச்சு - எழுத்து - செயல் அனைத்திலும் தமிழின முன்னேற்றம் ஒன்றே என்ற 'கட்டுப்பாடு',

    இவையே நம் அண்ணா!

    'தமிழ்நாடு' இருக்கும் வரை 'அண்ணா'வே நம்மை ஆள்கிறார்.

    அண்ணா- கலைஞர் வழியில் கழகத்தலைவர் @mkstalin தலைமையில் மீண்டும் கழக அரசை அமைத்திட இந்நாளில் உறுதியேற்போம்.

    வாழ்க அண்ணா!

    வெல்க திராவிட முன்னேற்றக் கழகம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பணம் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிக்கு சென்றடையும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன.
    • இன்னும் ஓரிரு நாளில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த உள்ளது.

    சென்னை:

    குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த பணம் குடும்ப தலைவிகளுக்கு எப்போது கிடைக்கும் என்று எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்பி வந்தன. குடும்ப தலைவிகளும் மாதம் ரூ.1000 எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

    இதற்காக இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள், நடைபாதையில் வணிகம் செய்திடும் பெண்கள், மீனவ பெண்கள், கட்டுமான தொழிலில் பணிபுரியும் பெண்கள், சிறிய கடைகள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் பெண்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் பணிபுரியக் கூடிய பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், முதியோர்கள் பலர் இதில் பயன் அடைய உள்ளனர்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாத சம்பளம் அதிகம் வாங்குபவர்களுக்கு இந்த பணம் கிடைக்காது. ஒவ்வொரு குடும்பத்தலைவியின் வங்கி கணக்கில் ரூ.1000 பணம் கிடைக்கும் வகையில் அரசு 1 கோடி பெண்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

    இந்த பணம் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிக்கு சென்றடையும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன. அது குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இதில் குடும்ப தலைவி யார்-யாருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. ரேஷன் கார்டுகள் அடிப்படையில் குடும்ப தலைவிகளை தேர்வு செய்வது, அதில் அவர்களது ஆண்டு வருமானத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

    வயது வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக இன்னும் ஓரிரு நாளில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த உள்ளது.

    அதனை அடிப்படையாக வைத்து குடும்ப தலைவிகள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்கள் தகுதியாக இருக்கும் பட்சத்தில் ரூ.1000 பணம் அவரவர் வங்கி கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.

    இதுகுறித்து அரசு உயர் அதிகாரி கூறுகையில், 'மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெறுவதற்கு யார்-யார் தகுதியானவர்கள் என்பதை கண்டறிய வருமானத்தை கணக்கிடுவது முக்கியம் என்பதால் அதை அடிப்படையாக வைத்தும், ரேஷன் கார்டை அடிப்படையாக வைத்தும் பணம் வழங்கப்படும்.

    எனவே அந்த விதிமுறைகளை அரசு விரைவில் வெளியிட உள்ளது. அதை படித்து பார்த்து ஒவ்வொரு குடும்ப தலைவிகளும் ரூ.1000 பணம் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    அந்த மனுக்களை பரிசீலனை செய்து அரசு பணம் ஒதுக்கும். அவை வங்கி கணக்கு மூலம் குடும்ப தலைவிகளுக்கு சென்றடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்ணா உருவச்சிலைக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தலைமைக் கழகச் செயலாளர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
    • கழக நிர்வாகிகள் மற்றும் பாசறை நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளான வருகிற 15-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், சென்னை அண்ணாசாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா உருவச்சிலைக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தலைமைக் கழகச் செயலாளர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள் மற்றும் பாசறை நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இரட்டை மண்டபம், மூங்கில் மண்டபம், காந்தி சாலை, ரங்கசாமி குளம் வழியாக சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்கு முதலமைச்சர் செல்கிறார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளருமான தா.மோ.அன்பரசன் மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வரலாற்றுப் பெருமை வாய்ந்த காஞ்சிபுரம் மண்ணில் பிறந்து தனது அடுக்கு மொழி பேச்சாற்றலாலும்-எழுத்தாற்றலாலும்-அறிவாற்றலாலும் தமிழக மக்களை கவர்ந்த மாபெரும் அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் காலை 10 மணியளில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கிடும் கலைஞர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சிறப்பான முறையில் நடைபெற உள்ளது.

    தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த உளுந்தையிலிருந்து வருகிற 15-ந்தேதி காலை 8 மணியளவில் புறப்பட்டு காஞ்சிபுரத்திற்கு வருகிறார்.

    ஸ்ரீபெரும்புதூர் நகரிலிருந்து இவ்விழா நடைபெறும் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானம் வரை 40 கி.மீ. தூரத்திற்கு வழி நெடுகிலும் கழகத்தினரும், பொதுமக்களும் எழுச்சியுடன் நின்று மகிழ்ச்சியுடன் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    அண்ணா பிறந்த புனித பூமிக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொன்னேரி கரை, கம்மாள தெரு சந்திப்பு, சங்கரம் மடம், மேற்கு ராஜா வீதி வழியாக காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் வந்து அடைகிறார். அங்குள்ள பேரறிஞர் அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணங்குகிறார்.

    பின்னர் அவர் இரட்டை மண்டபம், மூங்கில் மண்டபம், காந்தி சாலை, ரங்கசாமி குளம் வழியாக சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்கு செல்கிறார்.

    அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்துகிறார். அதன் பிறகு அவர் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி விளையாட்டு அரங்கில் நடைபெறும் கலைஞர் உரிமைத் தொகை வழங்கும் தொடக்க விழாவில் பங்கேற்று சிறப்பிக்கிறார்.

    இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

    இதே போல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு கூறி உள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் அவருடன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.

    • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
    • தலைமைக் காவலர் கருப்பசாமி என்பவரின் உயிரை காப்பாற்ற மிகவும் உதவியாக இருந்து உள்ளார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ஆண்டு, காவல் துறையில் தலைமைக் காவலர் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் மாவட்ட அலுவலர் வரையிலான 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் சிறை கண்காணிப்பாளர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில் ஊர்க்காவல் படைவீரர் முதல் படைதளபதி வரையிலான 4 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் 2 அலுவலர்கள் துணை இயக்குநர் மற்றும் அறிவியல் அலுவலர் ஆகியோருக்கும், அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் "மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள்" வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

    மேலும், சாயல்குடி காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில், கூட்டுப் பலாத்காரம் மற்றும் கொள்ளை குற்றத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு தலைமறைவான குற்றவாளிகளை 25.03.2022 அன்று கைது செய்யும் பணியில் ஈடுபட்டபோது திரு கே.நவநீத கிருஷ்ணன், உதவி ஆய்வாளர், தீவிர குற்றத்தடுப்பு பிரிவு, இராமநாதபுரம் மாவட்டம், எதிரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு இடது தொடையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்தபோதும், சற்றும் தளர்வில்லாமல் தனது தைரியச் செயலினால் இரண்டு எதிரிகளையும் கைது செய்ய உதவியாக இருந்துள்ளார்.

    இந்த தாக்குதலில் தலைமைக் காவலர் கருப்பசாமி என்பவரின் உயிரை காப்பாற்ற மிகவும் உதவியாக இருந்து உள்ளார். கே.நவநீத கிருஷ்ணன், உதவி ஆய்வாளர்களின் துணிச்சலையும், செயலையும் பாராட்டி அவருக்கு காவல் துறையின் வீரதீர செயலுக்கான "மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கம்" வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

    மேற்கண்ட பதக்கங்கள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினால் வேறு ஒரு விழாவில் வழங்கப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அண்ணா நினைவு இல்லத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
    • மகளிர் உரிமைத்திட்டத்தில் தகுதிவாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் பெண்கள் பயன் பெற உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். பின்னர் அண்ணா நினைவு இல்லத்தை முதலமைச்சர் பார்வையிட்டார்.

    இதையடுத்து அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் குடும்பத்தலைவிகள் ஆவலுடன் எதிர்பார்த்த ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    மகளிர் உரிமைத்திட்டத்தில் தகுதிவாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் பெண்கள் பயன் பெற உள்ளனர்.

    • மாநாட்டில் ம.தி.மு.க.வின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.
    • மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.

    மதுரை:

    முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் மாநில மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு 115-வது பிறந்தநாளையொட்டி மதுரை வலையங்குளத்தில் மாநாடு நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தொடங்கின. மதுரையில் முகாமிட்ட வைகோ மாநாட்டு பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.

    மேலும் இந்த மாநாடு வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வலுசேர்க்கும் என்றும், மதுரை மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாகவும் கூறினார்.

    இந்த மாநாட்டில் ம.தி.மு.க.வின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.

    அதன்படி மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. முன்னிலையில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது. மாலை 4 மணி வரை நெல்லை அபுபக்கர், ஒரத்தநாடு கோபு குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலை 4 மணிக்கு மாநாட்டு திடலில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் மொழிப்போர் தியாகிகளின் படங்கள் திறந்து வைக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.

    மாநாட்டில் வரவேற்பு குழு தலைவர் பூமிநாதன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். ம.தி.மு.க. அவைத்தலைவர் அர்ஜூனராஜ் தலைமை தாங்குகிறார். மாநாட்டில் இந்துத்துவ பாசிசம் வேரறுப்போம், இந்தியாவின் எதிர்காலம், சமூக நீதி காப்போம், திராவிட இயக்கத்தின் சாதனைகள், அண்ணாவின் மாநில சுயாட்சி, சுற்றுச்சூழல் சவால்கள், அண்ணா ஏற்படுத்திய அறிவுச்சுடர்,

    திராவிட இயக்கத்தில் பெண்கள், மொழி உரிமைப் போராட்டம், நதிநீர் உரிமை போரில் வைகோ, பாராளுமன்றத்தில் வைகோ, முழு மதுவிலக்கே நமது இலக்கு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரையரங்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதில் மாவட்டச் செயலாளர்கள் வெற்றிவேல், செல்வராகவன், ராமகிருஷ்ணன், ஜெயராமன், மனோகரன், பி.கே. சுரேஷ், துணைப்பொது செயலாளர்கள் ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், டாக்டர் ரொஹையா, ராஜேந்திரன், ஆட்சிக்குழு கிருஷ்ணன் மற்றும் வந்தியதேவன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், வழக்கறிஞர் அந்திரிதாஸ், கவிஞர் மணிவேந்தன், ஆசைத்தம்பி, காரை செல்வராஜ், புலவர் அரங்க நெடுமாறன், மல்லிகா தயாளன், வழக்கறிஞர் செந்தில் செல்வன், பாஸ்கர் சேதுபதி, பால சசிகுமார் என்.எஸ்.அழகிரி ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

    இதைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள் செந்திலதிபன், துரை வைகோ, மல்லை சத்யா, கணேச மூர்த்தி, சதன் திருமலை குமார், சின்னப்பா எம்.எல்.ஏ., ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். மாநாட்டின் முக்கிய நிகழ்வாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. மாநாடு நிறைவு உரையாற்றுகிறார்.

    மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அவர்களுக்கு தேவையான குடிநீர், அடிப்படை வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

    • திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
    • மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருப்பூர்:

    பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழாவையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, குணசேகரன், திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் அன்பகம் திருப்பதி, பகுதி செயலாளர் கண்ணப்பன், கருணாகரன், ஹரிஹரசுதன், பட்டுலிங்கம், எம்ஜிஆர்., மன்ற செயலாளர் சிட்டி ஈஸ்வரன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன், வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி. என். பழனிச்சாமி மற்றும் ஆண்டவர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு மானாமதுரை-திருப்புவனத்தில் தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • பேரூராட்சி தலைவர் நஜூமுதீன் கலந்து கொண்டார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், இளையான்குடி, மானாமதுரை ஆகிய பகுதிகளில் தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    திருப்புவனத்தில் பேரூராட்சித் தலைவர் சேங்கை மாறன் தலைமையில் தி.மு.க.வினர் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் தி.மு.க. ஒன்றியச் செயலர்கள் கடம்பசாமி, வசந்தி சேங்கைமாறன், மீனவரணி மாவட்ட நிர்வாகி அண் ணாமலை கலந்து கொண்டனர்.

    இளையான்குடியில் முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன் தலைமையில் தி.மு.க.வினர் அவரது படத்திற்கு மாலை அணிவித்தனர். இதில் பேரூராட்சித் தலைவர் நஜூமுதீன் கலந்து கொண்டார்.

    மானாமதுரையில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். நகர் மன்றத் தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம்,ஒன்றியச் செயலர்கள் ராஜாமணி, அண்ணாதுரை, அண்ணா சிலைக்கு மாலை ஊராட்சி ஒன்றியத் தலை வர் லதா அண்ணாதுரை, துணைத் தலைவர் முத்துச் சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×