என் மலர்

  நீங்கள் தேடியது "Anna Statue"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

  வாலாஜா:

  வாலாஜா அடுத்த விசி.மோட்டூரில் அண்ணாவின் 54-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விசி.மோட்டூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  இதனை தொடர்ந்து வாலாஜா நகரத்தில் உள்ள உருவ சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் காந்தி தலைமையில் அமைதி ஊர்வலமாக வந்து வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  நிகழ்ச்சியில் மாநில சுற்றுச்சூழல் அணி வினோத்காந்தி, ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், துணை தலைவர் ராதாகிருஷ்ணன், வாலாஜா நகரமன்ற தலைவர் ஹரிணி, நகர செயலாளர் தில்லை உள்பட மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாளை நினைவு நாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க.வினர் திரளாக வர வேண்டும்.
  • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  மதுரை

  மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

  பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை நெல்பேட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவசிலைக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

  இந்தநிகழ்ச்சியில் இந்நாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு அண்ணாவுக்கு புகழஞ்சலி செலுத்த அன்புடன் வேண்டுகிறேன்.

  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக மீண்டும் பொறுப்பேற்பு
  • கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்

  ராணிப்பேட்டை:

  திமுக தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசியுடன் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக (ராணிப்பேட்டை) தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பொறுப் பேற்றுக் கொண்டார்.

  இதனை யொட்டி நேற்று ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன், முரசொலிமாறன் ஆகியோரது உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை அடுத்த வீசி.மோட்டூர் பைபாஸ் சாலை சந்திப்பில் உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் அமைச்சர் ஆர்.காந்தி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் அமைச்சர் காந்திக்கு திமுக வேட்டி அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

  நிகழ்ச்சியில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத்காந்தி, மாவட்ட நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, ஏ.வி. சாரதி, ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ்கர்ணா, வாலாஜா நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத், உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் நகரமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருப்பத்தூரில் அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
  • பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

  நெற்குப்பை

  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி தி.மு.க. சார்பில் திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய தலைவருமான சண்முகவடிவேல் தலைமையில், நகரச் செயலாளர் கார்த்திகேயன் முன்னிலையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

  முன்னதாக காந்தி சிலையில் இருந்து பஸ் நிலையம், மதுரை ரோடு வழியாக, பேரணியாக வந்தனர். பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலா ராணி நாராயணன், துணைத்தலைவர் கான்முகமது, ஒன்றிய பொருளாளர் கண்ணன், முன்னாள் சேர்மன் சாக்ளா, நகர் துணைத் தலைவர் உதய சண்முகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தமிழ் நம்பி, தொழிலதிபர் பிளாசா சேகர், ஒன்றிய மாணவரணி சோமசுந்தரம், புதூர் கண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் அபுதாஹிர், சரவணன், பசீர் அகமது, பழக்கடை அஜீஸ், பேச்சாளர் ஷாஜகான், வார்டு பொறுப்பாளர் ஸ்டீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் அசோகன் முன்னிலையில் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக நடந்து வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

  இதில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஆசை தம்பி, மதுரை மாவட்ட முன்னாள் அரசு வழக்கறிஞர் ஈரோடு சாமி, சிவகங்கை முன்னாள் அரசு வழக்கறிஞர் ராமநாதன், மாவட்ட பேரவை துணை செயலாளர் பாலா, காரைக்குடி திருஞானம், திருப்பத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் சிவா, வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாகராஜன், நகர பொறுப்பாளர் முருகேசன், புதூர் கு.மா.காந்தி, நெற்குப்பை நகர பொறுப்பாளர் கருப்பையா, எஸ்.புதூர் ஒன்றிய பொறு ப்பாளர்கள் செந்தில்குமார், பித்திரை செல்வன், சிங்கம்புணரி ஒன்றிய பொறுப்பாளர் விஜயராஜ், உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அண்ணா பிறந்த நாளையொட்டி தி.மு.க சார்பில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம். எல். ஏ. ஆகியோர் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  • அ.தி.மு.க. சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் திரண்டு வந்து சந்திப்பு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  நெல்லை:

  முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு இன்று அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  தி.மு.க.

  தி.மு.க சார்பில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம். எல். ஏ. ஆகியோர் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  இதில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, அவைத் தலைவர் சுப. சீதாராமன், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மாநகர துணை செயலாளர் சுதா மூர்த்தி, பாளை யூனியன் சேர்மன் கே. எஸ். தங்கபாண்டியன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த்், கூட்டுறவு பேரங்காடி சேர்மன் பல்லிக்கோட்டை செல்லத்துரை, கவுன்சிலர்கள் உலகநாதன், கோகுல வாணி, பவுல்ராஜ், ரவீந்தர்், கிட்டு மற்றும் நிர்வாகிகள் எஸ்.வி. சுரேஷ், புவனேஸ்வரி, ஆவின் ஆறுமுகம்், பேச்சி பாண்டியன், வேலங்குளம் முருகன், வக்கீல் தினேஷ், வல்லநாடு முத்து உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  தச்சநல்லூர்

  நெல்லை மாநகரத்தின் முன்னாள் தி.மு.க செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாலை ராஜா தலைமையில் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் தச்சநல்லூரில் உள்ள அண்ணா சிலை மற்றும் நெல்லை மாநகராட்சி மைய அலுவலகம் முன்புள்ள அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொது மக்களுக்கு லட்டு வழங்கி கொண்டாடினர்.

  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன் கான், தச்சநல்லூர் பகுதி செயலாளர் முன்னாள் மண்டல சேர்மன் தச்சை சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் மற்றும் நிர்வாகிகள் ஆ.க மணி, அருண்குமார், பூக்கடை அண்ணாதுரை, அப்துல் கயூம், நெல்லை கோபி, அருள்மணி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன், கவுன்சிலர் கருப்பசாமி கோட்டையப்பன், இளைஞர் அணி மணிகண்டன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  அ.தி.மு.க.

  அ.தி.மு.க. சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் திரண்டு வந்து சந்திப்பு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  இதில் அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்.பி முத்துக்கருப்பன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பெரிய பெருமாள், மாநில எம்.ஜி.ஆர். மன்றம் கல்லூர் வேலாயுதம், பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், திருத்து சின்னத்துரை, சண்முக குமார், சக்தி குமார், ஒன்றிய செயலாளர்கள் முத்துக் குட்டி பாண்டியன், மருதூர் ராமசுப்பிரமணியன், கவுன்சிலர் சந்திரசேகர், ஆவரை பால்துரை, நகர கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், நெல்லை பகுதி ஜெயலலிதா பேரவை சீனி முகமது சேட், பாறையடி மணி பக்கீர் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ம.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
  • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  திருப்பூர் :

  பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளையொட்டி திருப்பூர் ெரயில் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  இதில் அவை தலைவர் நேமிநாதன், பொருளாளர் சண்முகசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ரத்தினசாமி, மகளிர் அணி துணைச் செயலாளர் சாந்தாமணி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரையில் 3 இடங்களில் அண்ணா சிலைக்கு நாளை அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
  • திருப்பரங்குன்றத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

  மதுரை

  மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நெல்பேட்டையில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

  நாளை (15-ந்தேதி) காலை 10 மணி அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னோடிகள், கூட்டுறவு சங்க, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்கும்படி வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  பேரறிஞர் அண்ணா 114-வது பிறந்த தினத்தையொட்டி கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாடிப்பட்டியில் உள்ள சிலைக்கு நாளை காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

  இந்த நிகழ்ச்சியில் முன்னாள், இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.

  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  ராஜன் செல்லப்பா

  மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா கூறியிருப்பதாவது:-

  அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணா 114-வது பிறந்த தினம் கொண்டாட்டம் திருப்பரங்குன்றத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

  16 கால் மண்டபம் அருகே நடைபெறும் நிகழ்ச்சியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது இதில் இந்நாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்கும் படி வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். #PerarignarAnna #Anna #MKStalin
  சென்னை:

  பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழா பல்வேறு கட்சிகள் சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.

  சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்துக்கும் மலர் தூவினார்.

  நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரிகள் ஆ.ராசா, தயாநிதிமாறன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி.

  எம்.பி.க்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், நடிகர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டக் கழக செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், எம்.எல்.ஏ.க்கள் ப.ரங்கநாதன், இ.கருணாநிதி, பெரிய கருப்பன், டி.ஆர்.பி. ராஜா, கே.எஸ்.ரவிச்சந்திரன், தொழிலாளர் அணி செயலாளர் சிங்கார ரத்தின சபாபதி, பல்லாவரம் ரஞ்சன்.

  கட்சி நிர்வாகிகள் துறைமுகம் காஜா, பூச்சிமுருகன், வி.எஸ்.ராஜ், ராமலிங்கம், அகஸ்டின், ஐ.கென்னடி, ஜெ.கருணாநிதி, கே.ஏழுமலை, ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், மா.பா.அன்புதுரை, மதன்மோகன், சேப்பாக்கம் பா.சிதம்பரம், ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா, சிற்றரசு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள். #PerarignarAnna #Anna #MKStalin

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அண்ணா பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு 15-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். #EdappadiPalaniswami #Paneerselvam #AnnaBirthDay
  சென்னை:

  அண்ணா பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு 15-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

  அறிஞர் அண்ணா 110-வது பிறந்தநாளையொட்டி 15-ந் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும்.

  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

  அறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு, 15.9.2018 முதல் 17.9.2018 வரை 3 நாட்கள், அண்ணா பிறந்தநாள் பொதுக் கூட்டங்கள் அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் நகரங்களிலும், மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

  பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை அனைத்து நிர்வாகிகளுடனும் இணைந்து நடத்த வேண்டும்.

  இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

  பொன்னேரியில் நடக்கும் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், காஞ்சீபுரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்கின்றனர். மற்ற மாவட்டங்களில் மாவட்டங்களை சார்ந்த அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். 
  ×