search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா சிலைக்கு நாளை அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
    X

    அண்ணா சிலைக்கு நாளை அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

    • மதுரையில் 3 இடங்களில் அண்ணா சிலைக்கு நாளை அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
    • திருப்பரங்குன்றத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நெல்பேட்டையில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    நாளை (15-ந்தேதி) காலை 10 மணி அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னோடிகள், கூட்டுறவு சங்க, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்கும்படி வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணா 114-வது பிறந்த தினத்தையொட்டி கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாடிப்பட்டியில் உள்ள சிலைக்கு நாளை காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள், இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ராஜன் செல்லப்பா

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணா 114-வது பிறந்த தினம் கொண்டாட்டம் திருப்பரங்குன்றத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

    16 கால் மண்டபம் அருகே நடைபெறும் நிகழ்ச்சியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது இதில் இந்நாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்கும் படி வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×