அண்ணா சிலைக்கு தி.மு.க-அ.தி.மு.க.வினர் மாலை

அண்ணா சிலைக்கு தி.மு.க- அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர். தலைவர் பழனிதுரை, நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வாடிப்பட்டியில் தி.மு.க. சார்பில் அண்ணா வாழ்க்கை வரலாறு புத்தகம் வழங்கப்பட்டது.
வாடிப்பட்டியில் தி.மு.க. சார்பில் அண்ணா வாழ்க்கை வரலாறு புத்தகம் வழங்கப்பட்டது.
Published on
<p>பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
</p><p></p>

வாடிப்பட்டி

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. செயலாளர் பால் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.

இதில் ஒன்றிய செயலாளர் பால.ராஜேந்திரன், முன்னாள் பேரூர் செயலா ளர் பிரகாஷ், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், கஜேந்திரன், முரளி வினோத், ராஜசேகர், அரவிந்த் முருகன் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். அண்ணா வாழ்க்கை வரலாறு புத்தகம் வழங்கப்பட்டது.

அழகர்கோவில் கோட்டைவாசல் முன்புள்ள அண்ணா சிலைக்கு பெரிய புள்ளான் எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், கொட்டாம்பட்டி முன்னாள் சேர்மன் வெற்றிச்செழியன், கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் குலோத்துங்கன்.

மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, மேலூர் நகர் துணைச் செயலாளர் சரவணகுமார், மேலூர் நகர் அம்மா பேரவை செயலாளர் சாகுல் ஹமீது, அ.வலையபட்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெள்ளைச்சாமி, அய்யாபட்டி நயினான், சென்னகரம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிதுரை, நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com