என் மலர்
நீங்கள் தேடியது "பகுஜன் சமாஜ் கட்சி"
- ஆற்காடு சுரேஷின் மனைவி சார்பில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் மனுதாரருக்கும் ஜாமின் வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
- காவல்துறை சார்பில், குற்றச்சாட்டு பதிவு கட்டத்தில் இருக்கும் நிலையில் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத் தாமன் உள்ளிட்ட 29 பேர் மீது காவல்துறை குற்றம் சாட்டியது.
இதில் 27 பேர் கைது செய்யப்பட்டனர். இருவர் இதுவரை தலைமறைவாக உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு காரணமாக முக்கிய குற்றவாளி நாகேந்திரன் மரணம் அடைந்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 12 பேருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இந்நிலையில், இந்த வழக்கில் தமக்கு ஜாமின் வழங்கக்கோரி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனுவும், 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனுவும் ஐகோர்ட்டு நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி சார்பில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் மனுதாரருக்கும் ஜாமின் வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
காவல்துறை சார்பில், குற்றச்சாட்டு பதிவு கட்டத்தில் இருக்கும் நிலையில் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.
மேலும் சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளதால் 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக் கோரி காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, ஜாமின் வழங்கக்கோரி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனு, ஜாமினை ரத்து செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனு ஆகியவற்றோடு காவல்துறை தாக்கல் செய்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் எனக்கூறிய நீதிபதி விசாரணையை டிசம்பர் 3-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
- சென்னை ஐகோர்ட், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு கடந்த மாதம் 24-ந்தேதி மாற்றி உத்தரவிட்டது.
- ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி அவருடைய வீட்டிற்கு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்பட 27 பேரை கைது செய்தனர். அதில் ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ரவுடி நாகேந்திரன் உடல்நல பிரச்சனையால் காலமானார். மேலும் இருவர் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதால் அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த வழக்கில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளதால் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு கடந்த மாதம் 24-ந்தேதி மாற்றி உத்தரவிட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியன் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனு மீது நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி அஞ்சரியா ஆகியோர் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வாதம் முன்வைத்தது . இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றிய ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதித்தது.
மேலும், ஒவ்வொரு வழக்கிலும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடக் கோருவதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
- சென்னை ஐகோர்ட், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு கடந்த மாதம் 24-ந்தேதி மாற்றி உத்தரவிட்டது.
- சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட ஐகோர்ட் உத்தரவு தொடரும்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி அவருடைய வீட்டிற்கு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்பட 27 பேரை கைது செய்தனர். அதில் ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ரவுடி நாகேந்திரன் உடல்நல பிரச்சனையால் நேற்று காலமானார். மேலும் இருவர் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதால் அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த வழக்கில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளதால் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு கடந்த மாதம் 24-ந்தேதி மாற்றி உத்தரவிட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியன் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனு மீது நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி அஞ்சரியா ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள்,
சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட ஐகோர்ட் உத்தரவு தொடரும் என்றும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடையில்லை என்று உத்தரவிட்டனர்.
- ஆளுங்கட்சி தலைவர்கள் விசாரணையில் தலையிட்டுள்ளதால் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்.
- சிபிஐ விசாரணை கேட்ட மனுவை ஏற்கக் கூடாது என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மனுத்தாக்கல் செய்து உள்ளார்.
மனுவில், ஆளுங்கட்சி தலைவர்கள் விசாரணையில் தலையிட்டுள்ளதால் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சிபிஐ விசாரணை கேட்ட இந்த மனுவை ஏற்கக் கூடாது என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு குறித்து அக்.20-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
- ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' என்ற புதிய கட்சியை அறிவித்தார்.
- புதிய கட்சியின் கொடியிலும் யானை படம் இருப்பதாக த.வெ.க. சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவுநாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நினைவேந்தல் சங்கமமாக நடந்தது. தென்னிந்திய புத்தவிகார் தலைவரும் ஆம்ஸ்ட்ராங் மனைவியுமான பொற்கொடி தலைமையில் அமைதிப் பேரணி காலையில் நடந்தது.
அதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் சிலை திறப்பு விழா நடந்தது. நினைவேந்தல் மலரும் வெளியிடப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' என்ற புதிய கட்சியை அறிவித்தார். கட்சி பெயர், கொடியை அறிமுகம் செய்த பொற்கொடி 32 அடி உயர கம்பத்தில் கொடியேற்றினார்.
யானை தனது துதிக்கையில் பேனாவை பிடித்து எடுத்து செல்வதுபோல் உள்ள நீலம், வெண்மை நிறத்திலான கொடியை அறிமுகப்படுத்தினார்.
இந்த நிலையில், த.வெ.க. கொடியில் யானை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணை இன்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று நடந்த நிலையில், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடங்கிய கட்சியின் கொடியிலும் யானை படம் இருப்பதாக த.வெ.க. சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதற்கு எதிராகவும் வழக்கு தொடரப்படும் என பகுஜன் சமாஜ் தரப்பு பதில் அளித்தது.
இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- பொத்தூர் கிராமத்தில் உள்ள வள்ளலார் கோவிலில் இருந்து நினைவிடம் வரை ஊர்வலம் நடந்தது.
- ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி செங்குன்றம் அருகே உள்ள பொத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நினைவேந்தல் சங்கமமாக நடந்தது. தென்னிந்திய புத்தவிகார் தலைவரும் ஆம்ஸ்ட்ராங் மனைவியுமான பொற்கொடி தலைமையில் அமைதிப் பேரணி காலையில் நடந்தது. பொத்தூர் கிராமத்தில் உள்ள வள்ளலார் கோவிலில் இருந்து நினைவிடம் வரை ஊர்வலம் நடந்தது.
இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் தாயார் கமலா கவாய் மற்றும் புத்த பிட்சுகள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் சிலை திறப்பு விழா நடந்தது. அதனை தொடர்ந்து நினைவேந்தல் மலர் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், புரட்சி பாரத கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தினர்.
பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த மைக்கேல் தாஸ், பகுஜன் பிரேம், வெங்கட், பாக்சர் திரு உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நினைவேந்தல் நிகழ்ச்சி யில் தென்னிந்திய பவுத்த சங்கங்கள், அம்பேத்கர் அமைப்புகள், சமூக அமைப் புகள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாட்டையே உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
- சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டையே உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் நினைவுநாளை முன்னிட்டு தேவையற்ற பதற்றத்தை குறைக்க சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- யானை சின்னத்தை தவெக கொடி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி மனு தாக்கல் செய்திருந்தது.
- பகுஜன் சமாஜ் கட்சி கொடிக்கும் தவெக கொடிக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என தவெக தரப்பு தெரிவித்திருந்தது.
தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூலை 3-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கொடியில் உள்ள யானை சின்னத்தை தவெக கொடி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலர் இளங்கோவன் சென்னை முதலாவது உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக தவெக பொதுச்செயலர் என்.ஆனந்த் தாக்க செய்த பதில் மனுவில், "பல தகவல்களை மறைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. பகுஜன் சமாஜ் கட்சி கொடிக்கும் தவெக கொடிக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை. கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான எதிர்காலத் திட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் உள்ள ஒற்றை யானைக்கும் தவெக கொடியில் உள்ள எக்காலம் ஊதும் இரட்டை யானைக்கும் பல மாறுபாடுகள் உள்ளன. தனித்துவத்துடன் தவெக கொடி உருவாக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை குழப்பும் வகையில் உருவாக்கப்படவில்லை எனவே, அபராதத்துடன் இந்த மனுவை தள்ளுட செய்ய வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
- விஜயின் த.வெ.க. கொடியில் இரட்டை யானை இடம் பிடித்துள்ளது.
- பகுஜன் சமாஜ் கட்சி கொடியிலும் யானை இடம் பிடித்துள்ளதால் விஜய் கட்சி பயன்படுத்த தடைகோரி வழக்கு.
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியில் இரட்டை யானை இடம் பெற்றுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி யானை சின்னத்தை பயன்படுத்தி வருகிறது. இதனால் விஜய் கட்சியின் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடைவிதிக்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை யாரும் பயன்படுத்த முடியாது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
- சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தமிழ்நாடு மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள், பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும் என கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை நியமித்து அக்கட்சியின் மாநில தலைவரான ஆனந்தன் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்த பொற்கொடி மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் இனி கட்சி பதவிகளில் ஈடுபட மாட்டார் என்றும் தனது குழந்தையையும் குடும்பத்தையும் மட்டுமே இனி கவனித்துக் கொள்வார் என்றும் கட்சி தலைமை அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள், பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும் என கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
- தனது கடைசி மூச்சு இருக்கும்வரை அரசியல் வாரிசை அறிவிக்கப் போவது இல்லை.
- அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே அவரை மீண்டும் கட்சியில் சேர்த்து மாயாவதி அறிவிப்பு வெளியிட்டார்.
மாயாவதி தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் அறிவித்தார். அதோடு ஆகாஷ் ஆனந்திற்கு பகுஜன் சமாஜ்வாதி கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது வழங்கப்பட்டது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் அவரை கட்சிப்பொறுப்பில் இருந்து நீக்கினார். ஆனால் அடுத்த சில வாரங்களில் மீண்டும் ஆகாஷ் ஆனந்திற்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது.
இதற்கிடையே, மருமகனின் கட்சி விரோத நடவடிக்கைகளால் குறிப்பாக அவரது மாமனாருடன் சேர்ந்து கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்ததால் இரண்டாவது முறையாக ஆகாஷ் ஆனந்தை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து மாயாவதி கடந்த மாதம் அதிரடியாக நீக்கினார்.
தனது கடைசி மூச்சு இருக்கும்வரை அரசியல் வாரிசை அறிவிக்கப் போவது இல்லை. கட்சி விவகாரத்தை தானே பார்த்துக் கொள்கிறேன் என மாயாவதி அப்போது தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஆகாஷ் ஆனந்த் தனது செயலுக்கு நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'கட்சியில் இருந்து எனது நீக்கத்துக்கு காரணமான பதிவை எக்ஸ் தளத்தில் சில நாட்களுக்கு முன்பு போட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
எனது உறவினர்கள் அல்லது வெளிநபர்கள் அறிவுரைப்படி எந்த அரசியல் முடிவும் எடுக்கமாட்டேன் என உறுதியளிக்கிறேன்' என தெரிவித்தார்.
ஆகாஷின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே அவரை மீண்டும் கட்சியில் சேர்த்து மாயாவதி அறிவிப்பு வெளியிட்டார்.
இதுகுறித்து மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில், தனது தவறை உணர்ந்து பொதுவெளியில் மன்னிப்பு கேட்டதால் ஆகாஷுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்குவதாகவும் அதேநேரம் தான் ஆரோக்கியமாக இருக்கும் வரை, கட்சிக்கு எந்த வாரிசையும் நியமிக்கப்போவது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- பிரவீன்குமாரை நீங்கள் முதலமைச்சர் பதவியில் அமர்த்தினால் தெலுங்கானா ஒரு மின் மிகை மாநிலமாக உருவாக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.
- மாநாட்டில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 114 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அதன் வேட்பாளர்களை ஆதரித்து பெங்களூர் அரண்மனை மைதானத்தில் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தேசிய தலைவரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்-அமைச்சருமான மாயாவதி கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து தேர்தல் பிரசாரம் செய்தார்.
அதன்பின்பு பெங்களூரில் தனியார் விடுதியில் தங்கி இருந்த மாயாவதியை புத்த பூர்ணிமா தினத்தன்று பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவருடைய மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், ஆகியோர் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
அப்பொழுது ஆம்ஸ்ட்ராங் தம்பதியினரின் பெண் குழந்தைக்கு இந்திய முதல் பெண் ஆசிரியரான சாவித்திரி பாய் பெயரை மாயாவதி சூட்டி, குழந்தையை முத்தமிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.
பின்னர் ஹைதராபாத்தில் நடைபெற்ற தெலுங்கானா நம்பிக்கை மாநாட்டில் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டார். மாநாட்டிற்கு தெலுங்கானா மாநிலத் தலைவரும் முன்னாள் டிஜிபி ஆர். எஸ். பிரவீன் குமார், (ஐபிஎஸ்) தலைமை தாங்கினார். இந்த மாநாட் டில் மாயாவதி கலந்து கொண்டு பேசியதாவது:-
தெலுங்கானா மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி அமைத்தால் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு சமமான இட ஒதுக்கீடு மற்றும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். இந்த தெலுங்கானா நம்பிக்கை மாநாட்டிற்கு வருகை தந்த அனைவரும் நம்பிக்கையோடு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது ஆண்டு கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து அதனை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகிறார்கள்.
எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தெலுங்கானாவில் ஆட்சி அமைந்தால் உங்கள் நம்பிக்கையின் நட்சத்திரமான பிரவீன்குமாரை நீங்கள் முதலமைச்சர் பதவியில் அமர்த்தினால் தெலுங்கானா ஒரு மின் மிகை மாநிலமாக உருவாக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் சித்தார்த்த மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.






