என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக வெற்றி கழகம்"

    • மிகவும் கொச்சையாக பேசுகிற பாஜகவினரை பற்றி அதிமுகவினர் ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை.
    • விஜய் சொன்னதற்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என நீங்கள் கேட்டு சொல்லுங்கள்.

    மதுரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் 2வது மாநாட்டில், தவெக தலைவர் விஜய் பேசினார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்தார்.

    அ.தி.மு.க. குறித்து விஜய் பேசிய கருத்துக்கு அவர் கூறியதாவது:-

    அதிமுக தான் அதுகுறித்து பதில் சொல்ல வேண்டும். நான் எம்ஜிஆரை பற்றி சொன்ன உடனயே ஆ.. ஊ.. என்று எகிறிக் குதித்தவர்கள் இப்போது வாயை மூடிக்கொண்டுள்ளனர்.

    எம்ஜிஆர், அண்ணா, பெரியாரைப் பற்றி மிகவும் கொச்சையாக பேசுகிற பாஜகவினரை பற்றி அதிமுகவினர் ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை.

    தற்குறி எடப்பாடி பழனிசாமி என்று பேசியவர் அண்ணாமலை. அப்போது அவர்கள் வாயை மூடிக்கொண்டு எங்கேயோ மவுனித்து கிடந்தார்கள். வாய் திறந்து பேசவில்லை.

    சமூகத்தில் இருக்கின்ற விமர்சனங்கள் இப்படி இருக்கின்றன என்று யாரோ சொன்னதை மேற்கோள் காட்டி பேசினேன். உடனே பாய்ந்து, பிராண்டினார்கள்.

    இப்போது விஜய் சொன்னதற்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என நீங்கள் கேட்டு சொல்லுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • த.வெ.க. கட்சியின் 2-வது மாநில மாநாடு 21-ம் தேதி மதுரையில் நடைபெறும்.
    • மாநாட்டுக்கான பணிகள் சிறப்பான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்தது.

    இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் வரும் 25-ம் தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எலியார்பத்தி சுங்கச்சாவடி பகுதி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் மாநாட்டிற்கான பூமி பூஜை நடந்தது.

    கட்சி நிர்வாகிகள் மாநாட்டிற்கு அனுமதி பெறுவதற்காக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு அர்விந்தை சந்தித்து மனு அளித்தனர். மேலும், மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தனர்.

    மாநாடு நடைபெறும் 25-ம் தேதியை தொடர்ந்து 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி வர இருப்பதாகவும், அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டியதிருப்பதால், மாநாடு நடைபெறும் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என போலீசார் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    இதற்கிடையே, த.வெ.க. கட்சியின் 2-வது மாநில மாநாடு 18-ம் தேதியில் இருந்து 22-ம் தேதிக்குள் ஏதோ ஒரு தேதியில் நடைபெறும். எந்த தேதி என்பதை தலைவர் விஜய் அறிவிப்பார் என புஸ்ஸி ஆனந்த் நேற்று தெரிவித்தார்.

    இந்நிலையில், வரும் 21-ம் தேதி மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    கழகத் தோழர்களுக்கு வணக்கம்.

    மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வீறுகொண்டு வெற்றிநடை போட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாகக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்டு 25-ம் தேதி மதுரையில் நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

    ஆனால், மாநாடு முடிந்த ஒருநாள் இடைவெளியில் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால். காவல்துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டியிருக்கிறது. எனவே மாநாட்டிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக 18.08.2025 முதல் 22.08.2025 வரை ஏதேனும் ஒரு தேதியில் மாநாட்டை நடத்தும்படியும் காவல்துறை கேட்டுக்கொண்டது. அதன்பேரில், கழகத்தின் மாநில மாநாடு முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு ஆகஸ்டு 21-ம் தேதி வியாழக்கிழமை மாலை 4.00 மணி அளவில் ஏற்கனவே அறிவித்த அதே மதுரை மாநகரில் அதே பிரம்மாண்டத்தோடும் கூடுதல் உற்சாகத்தோடும் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    இதற்கான பணிகள், ஏற்கனவே சிறப்பான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகள் தற்போது மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே கழகத் தோழர்கள் வரும் 21-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள கழகத்தின் மாநில மாநாட்டிற்கு மிகவும் பொறுப்புடனும் பாதுகாப்புடனும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • பூத் கமிட்டி கூட்டம், மாநாடு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
    • 'வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு' என்ற செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.

    2026 தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி தமிழக வெற்றிக்கழகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பூத் கமிட்டி கூட்டம், மாநாடு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில், பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் MY TVK எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

    தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக 'வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு' என்ற செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.

    இந்நிலையில், "வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு செயலியை தொடங்கி விஜய்க்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கூறிய அவர்," 2026 தேர்தல் திருப்புமுனையாக அமையும். தேர்தல் திருப்புமுனையை நோக்கிதான் அனைவரும் பயணப்படுகிறோம்" என்றார்.

    • மதுரை மக்களின் அன்பிற்கு கோடான கோடி நன்றிகள்.
    • ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்வதற்காக மதுரை வருகிறேன்.

    நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் கொடைக்கானல் செல்வதற்காக இன்று மதுரை வருவதாக கூறப்பட்டது. இந்த தகவல் பரவியதை தொடர்ந்து, விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் மதுரை விமான நிலையத்தில் திரண்டனர்.

    விஜயை பார்க்காமல் செல்லமாட்டோம் என்று வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்துக் கொண்டிருந்தனர்.

    தவெகவினருக்கு நேற்று கடிதம் மூலம் விஜய் அறிவுரை வழங்கியதையும் ஏற்காமல் தொண்டர்கள் குவிந்தனர்.

    மேலும், மதுரை விமான நிலைய வாயிலில் போலீசாருடன் விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து, மதுரைக்கு புறப்படுவதற்கு முன்பு,

    சென்னை விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர்," மதுரை விமான நிலையத்தில் நம் நண்பர்கள், நண்பிகள், தோழர்கள், தோழிகள் அனைவரும் வந்திருக்கிறார்கள். மதுரை மக்கள் அனைவருக்குமே என்னுடைய வணக்கம். உங்களுடைய அன்பிற்கு கோடான கோடி நன்றிகள்.

    நான் இன்று ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்வதற்காக மதுரை வருகிறேன்.

    கூடிய விரைவில் மதுரை மண்ணிற்கு நம் கட்சி சார்பில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரையும் சந்தித்து பேசிகிறேன்.

    ஒரு மணி நேரத்தில் உங்களை சந்தித்து என் வேலையை பார்க்க சென்றுவிடுவேன். நீங்களும் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லுங்கள். யாரும் வாகனத்தை பின் தொடர வேண்டாம்" என்றார்.

    விஜய் கட்சி தொடங்கியப் பிறகு, முதல் முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    இதனை தொடர்ந்து மாலை 4 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வந்து சேர்ந்தார். அங்கு அவரை வரவேற்பதற்காக ஏராளமான ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் குவிந்தனர்.

    மதுரை விமான நிலையத்தில் விஜய்யை கண்டதும் த.வெ.க. தொண்டர்கள் உற்சாகமாக கோஷங்களை அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

    விஜய்யை காண அதிக அளவில் கூட்டம் கூடியதால் மதுரை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து பிரசார வாகனத்தில் ஏறி நின்று தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி விமான நிலையத்தில் இருந்து விஜய் புறப்பட்டுச் சென்றார்.

    மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக ஜனநாயகன் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்கிறார். விஜய்யை காண்பதற்காக சில தொண்டர்கள் மரக்கிளைகள் மீதும், வாகனங்கள் மீதும் ஏறி நின்றனர். தொண்டர்களின் கூட்டத்திற்கு நடுவே விஜய்யின் வாகனம் மெதுவாக நகர்ந்து சென்றது.

    தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு வாகனத்தின் மீது நின்று கையசைத்தபடி விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    • தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சௌந்தரராஜா.
    • நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சௌந்தரராஜா. நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். மரம் வளர்ப்பது தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சௌந்தரராஜா இதற்காக பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

    இதுதவிர நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி அறிவிப்பு வெளியானது முதலே சௌந்தரராஜா அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். முன்னதாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்த சௌந்தரராஜா, பிறகு கட்சியின் கொடி வெளியிட்டதும் அதனை மதுரை மீனாட்சி அம்மன் சன்னதியில் வைத்து சிறப்பாக வழிபாடு நடத்தி இருந்தார். பின்னர் மாநாட்டுக்கு சைக்கிள் பேரணி ஆகியவற்றை முன்நின்று செய்து வருகிறார்.

    இந்த நிலையில், நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்காக 'தலைவன் நீயே, தொண்டன் நானே...' என்ற தலைப்பில் ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கும் பணிகளில் நடிகர் சௌந்தரராஜா ஈடுபட்டு வருகிறார். மேலும், இந்த பாடலுக்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. டாக்டர் நந்துதாசன் நாகலிங்கம் இந்த பாடலை எழுத, சந்தோஷ் இசையமைக்கிறார்.

    நிரோஜன் இயக்க இருக்கும் இந்த பாரலுக்கு நடன இயக்குநராக பிரசாந்த், புகைப்பட கலைஞராக சக்தி பிரியன் ஆகியோர் பணியாற்ற உள்ளார்கள். இந்தப் பாடலில் நடிகர் சௌந்தரராஜா நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான மதுரை டூரிங் டாக்கீஸ் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். இப் பாடல் தொடர்பான இதர விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் பல சேவைகளை செய்து வந்தார்.
    • இவர் தற்போது தன் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாமா அல்லது வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கலாமா என ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் நடிகர் விஜய் தொடங்க உள்ள அரசியல் கட்சியின் பெயர் இன்று அறிவிக்கப்படும் என்று செய்தி பரவி வந்தது. இதையடுத்து நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    • நடிகர் விஜய் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார்.
    • இவர் சமீபத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார். இதைத்தொடர்ந்து வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை நடத்தினார்.


    இந்நிலையில் நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

    இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


    வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின் வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்.

    இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்க


    பணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது எமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழ, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இறுதியாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    நடிகராக இருந்த விஜய் இதன் மூலம் முழுநேர அரசியல்வாதியாக மாறியுள்ளார்.


    • அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
    • மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வந்தார். இந்நிலையில் இன்று தனது கட்சியின் பெயரை வெளிட்டார். அதில் கூறியிருப்பதவாது:

    தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.

    ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.

    • பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் விஜய் கடந்த 25-ந்தேதி ஆலோசனை நடத்தினார்.
    • நடிகர் விஜய் தொடங்க உள்ள அரசியல் கட்சியின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அன்னதானம், குழந்தைகளுக்கு சத்தான உணவுகள், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கி விஜய் ரசிகர்கள் மக்கள் சேவையில் இறங்கினர். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

    இந்நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் விஜய் கடந்த 25-ந்தேதி ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாமா அல்லது வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கலாமா என ஆலோசனை நடத்தப்பட்டது. பாராளுமன்றத்தேர்தலை தொடர்ந்து தொகுதி முழுவதும் பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் விஜய் ஆலோசனை வழங்கினார்.

    நடிகர் விஜய் தொடங்க உள்ள அரசியல் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கடந்த ஓராண்டாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு விரைவில் விஜயிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கும் என்றும் கட்சி கொடி, சின்னம் மற்றும் வண்ணங்கள் முடிவு செய்யும் பணி தொடங்கியதாக தகவல் வெளியாகி இருந்தது.

    இந்நிலையில் நடிகர் விஜய் தொடங்கி உள்ள அரசியல் கட்சியின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார்.

    வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

    • விஜய் கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார்.
    • விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    நடிகர் விஜய் "விஜய் மக்கள் இயக்கம்" மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

    இன்று தனது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், மண் ஆள்வதற்கு முன்னால், தமிழக மக்களின் மனங்களை விஜய் வெல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அ.தி.மு.க.வின் வாக்குகளை யாராலும் பறிக்க முடியாது. யாரும் கை வைக்க முடியாது விஜய் தன் அறிக்கையில் தி.மு.க., பா.ஜ.க. குறித்தே விமர்சனங்களை முன் வைத்துள்ளார். புதிய, நடுநிலை வாக்காளர்களின் ஓட்டு நிச்சயம் அ.தி.மு.க.வுக்கே என்று தெரிவித்துள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.
    • கட்சி அறிவிப்பை தொடர்ந்து, விஜய்யை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    நடிகர் விஜய் "விஜய் மக்கள் இயக்கம்" மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

    இன்று தனது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    கட்சி அறிவிப்பை தொடர்ந்து, விஜய்யை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடிகர் விஜய் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தகவலையடுத்து நடிகர் விஜய்யை காண ஒரகடத்தில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

    • தனக்குப் பின்னால் இருப்பவர்களும் முன்னால் வரவேண்டும் என நினைப்பவர் விஜய்.
    • தமிழக வெற்றி கழகம் பெயருக்கு ஏற்ற மாதிரி தமிழகத்தில் வெற்றி பெறும் என்றார்.

    சென்னை:

    நடிகர் விஜய் "விஜய் மக்கள் இயக்கம்" மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார். இன்று தனது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார்.

    வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், விஜயின் தாயாரான ஷோபா சந்திரசேகர் தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஷோபா கூறியதாவது:

    தனக்குப் பின்னால் இருப்பவர்களும் முன்னால் வரவேண்டும் என நினைப்பவர் விஜய்.

    ஒவ்வொரு குடிமகனுக்கும், குடிமகளுக்கும் அரசியல் பொறுப்பு இருக்கிறது.

    மதம், சாதி என்பதில் எல்லாம் விஜய்க்கு உடன்பாடு இல்லை.

    தமிழக வெற்றி கழகம் பெயருக்கு ஏற்ற மாதிரி தமிழகத்தில் வெற்றி பெறும்

    வாகை சூடு விஜய் என தெரிவித்துள்ளார்.

    ×