என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவெக செயலி"

    • விஜயின் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • திருச்சியை அடுத்து அரியலூர், குன்னம், பெரம்பலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம்.

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ளிட்ட 4 இடங்களில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டிருந்தார்.

    ஆனால், தற்போது விஜயின் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விஜய் தொண்டர்களிடையே உரையாற்ற உள்ள நிகழ்வை சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பதில் திருச்சி மரக்கடை, உழவர் சந்தை பகுதியில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    திருச்சியை அடுத்து அரியலூர், குன்னம், பெரம்பலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பூத் கமிட்டி கூட்டம், மாநாடு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
    • 'வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு' என்ற செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.

    2026 தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி தமிழக வெற்றிக்கழகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பூத் கமிட்டி கூட்டம், மாநாடு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில், பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் MY TVK எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

    தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக 'வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு' என்ற செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.

    இந்நிலையில், "வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு செயலியை தொடங்கி விஜய்க்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கூறிய அவர்," 2026 தேர்தல் திருப்புமுனையாக அமையும். தேர்தல் திருப்புமுனையை நோக்கிதான் அனைவரும் பயணப்படுகிறோம்" என்றார்.

    • முதல் உறுப்பினராக கட்சி தலைவர் விஜய் சேர்ந்தார்.
    • தமிழ்நாட்டு வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாய் ஒன்றிணைவோம்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை இன்று மாலை சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

    உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

    முதல் உறுப்பினராக கட்சி தலைவர் விஜய் சேர்ந்தார். இதன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    வாட்ஸ் அப், டெலிகிராம், தொலைபேசி எண் வாயிலாகவும் கட்சியில் உறுப்பினராக இணையலாம் எனவும், தமிழ்நாட்டு வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாய் ஒன்றிணைவோம் என்று விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

    இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி முடங்கியது.

    ஒரே நேரத்தில் ஏராளமானோர் பதிவு செய்ய முயன்றதால், செயலி முடங்கியுள்ளது.

    வாட்ஸ் அப், டெலிகிராம், செயலி என அனைத்து தளங்களும் முடங்கியுள்ளது.

    ×