என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரச்சார பொதுக்கூட்டம்"

    • அமித்ஷா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.
    • காரைக்கால் பா.ஜ.க கிளை கமிட்டி நிர்வாகி ஒருவர் இல்லத்தில் கட்சி கொடி ஏற்றி வைக்கிறார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் மற்றும் காரைக்காலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) திருச்சி வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 9 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார்.

    பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார். பின்னர் நாளை 14-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நட்சத்திர விடுதியில் இருந்து காரில் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் வருகிறார்.

    காரைக்கால் வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள ஹெலிபேடு மைதானத்தில் காலை 11 மணியளவில் அமித்ஷா வந்து இறங்குகிறார். பின்னர் அங்கிருந்து பாரதியார் சாலை மற்றும் திருநள்ளாறு சாலை வழியாக சென்று, நகராட்சி திடலில் மதியம் 11.30 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.

    பொதுக்கூட்டம் முடிந்ததும் திருநள்ளாறு சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் காரைக்கால் பா.ஜ.க கிளை கமிட்டி நிர்வாகி ஒருவர் இல்லத்தில் கட்சி கொடி ஏற்றி வைக்கிறார்.

    பின்னர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலை 4 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு செல்கின்றார். அமித் ஷாவின் வருகையையொட்டி சாலை முழுவதும் பா.ஜ.க-வினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் சுமார் 12 ஆயிரம் பேர் கூடுவார்கள் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக புதுச்சேரியில் இருந்து 350 போலீசார் வர உள்ளனர். மேலும் 7 பட்டாலியன் துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்.

    6 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டம் முழுவதும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக காரைக்கால் வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜ.க மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் தலைமையில் அக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். செண்டை மேளம், தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    மேலும், அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சி இடங்களில் கொடி, தோரணங்கள் வழி நெடுகிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு விழா கோலம்போல காட்சியளிக்கிறது.

    மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி மாநில பா.ஜ.க தலைவர் வி.பி.ராமலிங்கம், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் காரைக்காலிலேயே முகாமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • தி.மு.க. எனும் தீய சக்திக்கும், த.வெ.க. எனும் தூய சக்திக்கும் தான் போட்டியே என்றார் விஜய்.
    • எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை நான் இப்போது திரும்ப சொல்கிறேன்.

    திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என ஈரோடு பிரச்சார கூட்டத்தில் விஜய் ஆக்ரோஷமாக முழங்கினார்.

    இதுகுறித்து அவர் மேலும் உரையாற்றியதாவது:-

    எம்.ஜி.ஆர் அவர்களும், ஜெயலலிதா அவர்களும் ஒரே வார்த்தையை சொல்லி திமுகவை காலி செய்தார்கள். நான் கூட யோசிப்பேன். ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக பேசுகிறார்கள், திமுகவை திட்டுகிறார்கள்? என் யோசித்தது உண்டு.

    இப்போ தானே புரிகிறது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை நான் இப்போது திரும்ப சொல்கிறேன்.

    திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி..

    என் நெஞ்சில் குடியிருக்கும் ஈரோடு மக்களே.. தவெக ஒரு தூய சக்தி.

    தூய சக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் தான் போட்டியே.

    என்னை முடக்கலாம் என்று நினைக்கிறீர்கள். ஒருபோதும் என் மக்களின் இந்த சத்தத்தை முடக்க முடியாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • விஜயின் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • திருச்சியை அடுத்து அரியலூர், குன்னம், பெரம்பலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம்.

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ளிட்ட 4 இடங்களில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டிருந்தார்.

    ஆனால், தற்போது விஜயின் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விஜய் தொண்டர்களிடையே உரையாற்ற உள்ள நிகழ்வை சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பதில் திருச்சி மரக்கடை, உழவர் சந்தை பகுதியில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    திருச்சியை அடுத்து அரியலூர், குன்னம், பெரம்பலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடந்தது
    • எதிர்கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்

    கன்னியாகுமரி :

    மத்திய அரசின் தொழி லாளர் விரோதப் போக்கை கண்டித்து அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 9-ந்தேதி சென்னையில் அனைத்து எதிர்கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது. இது குறித்து பரப்புரை தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவரும் பேரூர் தி.மு.க. செயலாளருமான குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. தொழிற் சங்க துணைச் செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை தலைவர் குலாம் மைதீன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தி.மு.க. தொழிற்சங்க மாநில துணை செயலாளர் இளங்கோ, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தங்கமோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அந்தோணி, மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் அன்பழகன், மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைச் செயலாளர் நிசார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் தொ.மு.ச. தொழிற்சங்க செயலாளர் இளங்கோ நன்றி கூறினார்.

    ×