search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் தொழிற்சங்கங்கள் சார்பில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம்
    X

    கன்னியாகுமரியில் தொழிற்சங்கங்கள் சார்பில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம்

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடந்தது
    • எதிர்கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்

    கன்னியாகுமரி :

    மத்திய அரசின் தொழி லாளர் விரோதப் போக்கை கண்டித்து அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 9-ந்தேதி சென்னையில் அனைத்து எதிர்கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது. இது குறித்து பரப்புரை தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவரும் பேரூர் தி.மு.க. செயலாளருமான குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. தொழிற் சங்க துணைச் செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை தலைவர் குலாம் மைதீன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தி.மு.க. தொழிற்சங்க மாநில துணை செயலாளர் இளங்கோ, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தங்கமோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அந்தோணி, மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் அன்பழகன், மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைச் செயலாளர் நிசார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் தொ.மு.ச. தொழிற்சங்க செயலாளர் இளங்கோ நன்றி கூறினார்.

    Next Story
    ×