என் மலர்

  நீங்கள் தேடியது "soundararaja"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நடிகர் சௌந்தரராஜா பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
  • இவருக்கு சிறந்த மனிதநேய விருது வழங்கப்பட்டுள்ளது.

  நடிகர் சௌந்தரராஜா 2012-ஆம் ஆண்டு மாதவன், ஆர்யா நடிப்பில் வெளியான 'வேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் சுந்தரபாண்டியன், தெறி, பிகில் போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.


  சௌந்தரராஜா 

  இதையடுத்து நடிகர் சௌந்தரராஜாவிற்கு இந்த ஆண்டிற்கான சிறந்த மனிதநேய விருது வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரசெடிகளை நட்டு, இயற்கை மற்றும் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துக்கூறி பொது வாழ்க்கையிலும் ஈடுப்படுத்தி கொண்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் என்ற விருது மலேஷியா கோலாலம்பூரில் வழங்கப்பட்டது.

  இந்த நிகழ்ச்சியில் மலேஷியா செலங்கூர் மன்னர் சலாகுத்தீன் அப்துல் அஜிஸ் ஷா, டத்தோ சசிகலா சுப்ரமணியம் (துணை போலீஸ் இயக்குனர் - மலேசியா ராயல் போலீஸ்) மற்றும் கலாம் பவுண்டேஷன் சலீம், ஸ்ரீமதி கேசவன், டேக்கேர் இன்டர்நேஷனல் நிறுவனர் முகமது இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.


  சௌந்தரராஜா 

  இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சௌந்தரராஜா, "நான் செய்வது சேவை அல்ல கடமை. மாதம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இந்த மண்ணுக்காகவும் இந்த மண்ணில் பிறந்த மக்களுக்காவும் உழைப்போம் என்று கேட்டுக்கொண்டு இந்த விருதை விவசாயிகளுக்கும் இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும் அர்ப்பணிப்பு செய்கிறேன்" என்று பேசினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மண்ணுக்கும் மக்களுக்கும் அதிக மதிப்பு கொடுக்கும் சௌந்தரராஜா, தன் குழந்தைக்கு மரக்கன்று ஒன்றை பரிசாக அளித்தார்.
  தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர் சௌந்தரராஜா. இவர் சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் கவனிக்க வைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் சௌந்தரராஜா, தமன்னா என்பவரை 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

  மனைவி, மகளுடன் சௌந்தரராஜா
  மனைவி, மகளுடன் சௌந்தரராஜா

  இவர்களுக்கு நேற்று அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறும் சௌந்தரராஜா, குழந்தைகள் தினத்தில் பெண் குழந்தை பிறந்தது தனக்கு அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது என்றார். மேலும் மண்ணுக்கும் மக்களுக்கும் அதிக மதிப்பு கொடுக்கும் சௌந்தரராஜா, தன் மகளுக்கு மரக்கன்று ஒன்றை பரிசாக அளித்தார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சவுந்தரராஜா, விஜய் ஒத்திகை பார்க்க மாட்டார் என்று கூறியிருக்கிறார்.
  சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் படங்களில் கவனிக்க வைத்த சவுந்தரராஜா அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விஜய் படத்தில் நடித்தது குறித்து சவுந்தரராஜா பேட்டி ஒன்றில் கூறியதாவது: 

  ‘தளபதி 63 படத்தில் எனக்கு வெறும் 6 காட்சிகள் தான். படம் குறித்து எந்த தகவலையும் வெளியிடக் கூடாது என்று அட்லி தெரிவித்துள்ளார். அதனால் நான் இதற்கு மேல் எதுவும் கூற முடியாது. ஆனால் என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நான் ஏற்கனவே தெறி படத்தில் விஜய் சாருடன் சேர்ந்து நடித்துள்ளேன். அவருடன் சேர்ந்து நடிப்பதன் மூலம் நிறைய கற்றுக் கொள்கிறேன். அவர் தனது காட்சிகளை அவ்வளவாக ஒத்திகை பார்க்க மாட்டார்.   அன்றைய காட்சிகள் குறித்து அட்லி துணை நடிகர்களிடம் விளக்குவார். விஜய் வந்த உடன் அவர் என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிப்பார். விஜய் பெரும்பாலும் ஒரே டேக்கில் நடித்துவிடுவார். அவரின் அந்த திறமையை பார்த்து வியக்கிறேன். அவர் நடிப்பை பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன். 

  காபி என்னும் திரைப்படத்தில் நான் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்து வருகிறேன். சண்டை காட்சிகளுக்காக சிறப்பு பயிற்சி எடுத்து நடித்துள்ளேன். இப்படத்தை அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார்’. இவ்வாறு அவர் கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஷ்ணு விஷால் நடிப்பில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சவுந்தர்ராஜா, இந்த படத்தின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்ததில் மகிழ்ச்சி என்றார். #Soundararaja
  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சவுந்தரராஜா. கதை நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.

  கார்த்தி கதாநாயகனாக நடித்த கடைக்குட்டி சிங்கம், விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம் என இரண்டு படங்களிலும் குணச்சித்திர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் ராஜபாண்டி எம்.எல்.ஏ. வாக கெத்தான, வெத்து வில்லன் கதாபாத்திரத்தில் சவுந்தரராஜாவின் நடிப்பிற்கு பாராட்டு கிடைத்துள்ளது. இதுகுறித்து சவுந்தரராஜா கூறும்போது, ரசிகர்களை சிரிக்க வைத்ததில் நிஜமாகவே மகிழ்ச்சி என்றார்.  சுந்தரபாண்டியன் படத்தில் தன் பயணத்தை தொடங்கிய சவுந்தரராஜா நடித்த படங்கள் பெரும்பாலும் ஹிட்டாகியிருக்கும் நிலையில், அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

  அவரது நடிப்பில் அடுத்ததாக, கள்ளன், அருவா சண்ட உள்ளிட்ட படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. #Soundararaja #SilukkuvarupattiSingam

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல வெற்றி படங்களில் நடித்து வரும் சௌந்தரராஜா போலீசில் இருந்து, ராணுவத்திற்கு மாறி இருக்கிறார். #SoundaraRaja #Army #Police
  தன்னுடைய தனித் திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் சௌந்தரராஜா. இவர் ‘சுந்தரபாண்டியன்’, ‘ஜிகர்தண்டா’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

  மேலும் இவரது நடிப்பில் ‘பில்லா பாண்டி’, ‘அபிமன்யு’ ஆகிய படங்கள் ரிலீசாக இருக்கிறது. அபிமன்யு படத்தில் உதவி கமிஷனராக நடிக்கிறார். இப்படத்திற்காக போலீஸ் அதிகாரிகளின் உடை, பாவனை, உடல் மொழி உள்ளிட்ட அனைத்து சம்சங்களை தெரிந்து பயிற்சி எடுத்து நடித்து வருகிறார்.   இந்நிலையில், தற்போது ராணுவ அதிகாரியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். ஆர்மி மேனாக நடிப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்திய ராணுவ வீரர்களை நான் எப்போதும் மதிப்பேன். ஆனால், இன்று அவர்களின் மேல் இருக்கும் மரியாதை இன்னும் அதிகமாகி, கடவுளுக்கு நிகராஜ உணர்கிறேன் என்று சௌந்தரராஜா கூறியிருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமீபத்தில் தமன்னாவை திருமணம் செய்துக் கொண்ட நடிகர் சௌந்தராஜா, தன் மனைவியுடன் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். #Vijayakanth #Soundararaja
  நடிகர் சௌந்தரராஜாவிற்கும் தமன்னாவிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இவரது திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி, விஷால், அருண் விஜய் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்கள்.

  இந்நிலையில், விஜயகாந்திடம் வாழ்த்து பெற்றிருக்கிறார் சௌந்தரராஜா. இதுபற்றி சௌந்தரராஜா கூறுகையில், ‘தமிழ் சினிமாவின் மிக அற்புதமான மனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். சக மனிதரிடத்திலும் சினிமா குடும்பத்தினரிடமும் கேப்டன் அவர்கள் காட்டும் அன்பில் அவர் மிக உயர்ந்த மனிதர். 

  அப்படிப்பட்ட நல்லுள்ளம் கொண்டவரிடம் நானும் என் மனைவியும் வாழ்த்துப்பெற்றதை பெருமிதமாக உணர்கிறேன். எங்கள் சந்திப்புகளை நினைவுகூர்ந்து என்னையும் என் மனைவியையும் அன்போடு வாழ்த்திய விஜயகாந்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றார்.
  ×