என் மலர்

  நீங்கள் தேடியது "saplings"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வல்லம் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் குப்பைகளை சரியான முறையில் பராமரிக்கின்றனர்.
  • பசுக்கள் வளர்க்கப்பட்டு, அவற்றின் சாணம் உரம் தயாரிப்புக்கு பயன்படுகிறது.

  வல்லம்:

  தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அய்யனார் நகர் பகுதியில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவில் வல்லம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரமாக தயார் செய்யப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வளம் மீட்பு பூங்காவை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டார். பின்னர், அரசு பள்ளி‌ மாணவ-மாணவிகளின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மாணவ-மாணவிகள் சுற்றுப்புற மேம்பாடு குறித்து கவிதை வாசித்தனர்.

  பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:-

  வல்லம் பேரூராட்சியில் தினமும் 4 முதல் 5 டன் குப்பைகள் சேர்கின்றன. வல்லம் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் குப்பைகளை சரியான முறையில் பராமரிக்கின்றனர். இங்கு தோட்டம் அமைக்கப்பட்டு இயற்கை முறையில் காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. மேலும், பசுக்கள் வளர்க்கப்பட்டு, அவற்றின் சாணம் உரம் தயாரிப்புக்கு பயன்படுகிறது.

  வல்லம் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை மாவட்டத்திற்கு மட்டுமல்ல மாநிலத்திற்கே முன்மாதிரியாக உள்ளது. மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள‌ மரக்கன்றுகளை அவர்களுடைய பெயர்களை சூட்டியே வளர்க்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு சிறந்த மாவட்டமாக உருவாகும் என்றும், மாநிலத்திலேயே பெரிய விருட்சவனம் திருமலைசமுத்திரத்திலும், இசைவனம் திருவையாறிலும் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

  இதனையடுத்து, பள்ளி மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து 380 மரக்கன்றுகளை நட்டும், மகளிர் சுய உதவி குழுவிற்கு 4 லட்ச நிதி உதவி வழங்கியும், பேரூராட்சி பணியாளர்களுக்கு நல வாரிய அட்டையினையும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். இதில் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜ், வல்லம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி, பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், தஞ்சை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் அருளானந்தசாமி, வல்லம் தி.மு.க. நகர செயலாளர் கல்யாணசுந்தரம், பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன், வல்லம் அரசு பள்ளி ஆசிரியர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் பலர் உடன் இருந்தனர். ஏற்பாடுகளை பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன், தனபால் மற்றும் பலர் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவில்பட்டி கடலையூர் சாலையில், வாகை, புங்கை, நாவல், மகிழை உட்பட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன
  • ஜீவ அனுகிரகா பசுமை இயக்கம் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

  கோவில்பட்டி:

  முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி ஜீவ அனுகிரகா பசுமை இயக்கம் சார்பில், அதன் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  நிகழ்ச்சிக்கு, ஜீவ அனுகிரகா பசுமை இயக்கம் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் முன்னிலை வகித்தார்.

  கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் 100 பேருக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கினார். பின்னர், கோவில்பட்டி கடலையூர் சாலையில், வாகை, புங்கை, நாவல், மகிழை உட்பட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.

  நிகழ்ச்சியில், ஜீவ அனுகிரக பசுமை இயக்க நிர்வாகிகள் பாபு, ராமர், பாலசுப்பிரமணியன், தங்க மாரியப்பன், செந்தில் குமார், நல்லதம்பி, சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எம்.எல்.ஏ. தியாகராஜன் தலைமை தாங்கி திடக்கழிவு மேலாண்மை வளமீட்பு மைய பூங்கா வளாகத்தில் பல அரிய வகை மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
  • பேரூராட்சி செயல் அலுவலர் குமார் மற்றும் பலர் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து பேசினர்.

  திருச்சி:

  தா.பேட்டை அடுத்த மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு முசிறி தொகுதி எம்எல்ஏவும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமை தாங்கி திடக்கழிவு மேலாண்மை வளமீட்பு மைய பூங்கா வளாகத்தில் பல அரிய வகை மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

  பேரூராட்சித் தலைவர் சௌந்தரராஜன் அனைவரையும் வரவேற்றார். பேரூராட்சி செயல் அலுவலர் குமார் மற்றும் பலர் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து பேசினர்.

  விழாவில் திமுக ஒன்றிய செயலாளர்கள் கே.கே.ஆர்.சேகரன், கே.பெரியசாமி, நகர செயலாளர்கள் தர்மராஜ், தங்கராசு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் கணேசன், பேரூராட்சி உறுப்பினர்கள், பணியாளர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

  இறுதியில் பேரூராட்சி தலைமை எழுத்தர் சம்பத் நன்றி கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 150 மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தொடங்கி வைத்தாா்.
  • ஊராட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

  நாமக்கல்:

  சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

  நாமக்கல் மாவட்டத்தில் பசுமை நாமக்கல் திட்டத்தின் கீழ், வனத்துறை, ஊரக வளா்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் மற்றும் வங்கிகள், தனியாா் தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் மூலம் அரசுக்கு சொந்தமான இடங்கள், பள்ளிகள் மற்றும் நெடுஞ்சாலைகள், ஊராட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எஸ்.வடிவேல், மகளிா் திட்ட இயக்குநா் பிரியா, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் மஞ்சுளா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாமக்கலில் சாலையோர மரக்கன்றுகளை நெடுஞ்சா–லைத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
  • இருமுறைதண்ணீர் விட்டு, இயற்கை உரம் போட்டு, பூச்சிக்கொல்லி மருந்து விட்டு பாதுகாக்கின்றனர்.

  நாமக்கல்:

  நாமக்கல் திருச்சி சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நாமக்கல் முதல் திருச்செங்கோடு சாலை குமரமங்கலம் வரை நெடுஞ்சாவைத்துறை சார்பில் நாவல், புங்கன், பூவரசு, நீர் மருது, வாகை மயில் கொண்டை, மகாகனி, பாதான் உள்ளிட்ட மரக்கன்றுகள் 1582 செடிகள் நடப்பட்டன.

  மரக்கன்று நடப்பட்டு வாரம் இருமுறைதண்ணீர் விட்டு, இயற்கை உரம் போட்டு, பூச்சிக்கொல்லி மருந்து விட்டு செடிகளை பராமரிக்கப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைத்துறையினர் பாது–காப்புடன் தொடர்ந்து பராமரிப்பு பணி மேற்கொண்டு வருவதால் சுமார் சுமார் 15 அடி உயரத்திற்கு செடிகள் வளர்ந்துள்ளது. நெடுஞ்சாலை துறையின் தீவிர பராமரிப்பால் சாலையோரம் செடிகள் வளர்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடையநல்லூரில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது
  • லயன்ஸ் மகாத்மா மெட்ரிகுலேஷன் பள்ளியின் சார்பில்நிகழ்ச்சி நடைபெற்றது.

  கடையநல்லூர்:

  கடையநல்லூரில் லயன்ஸ் மகாத்மா மெட்ரிகுலேஷன் பள்ளியின் சார்பில் கடையநல்லூர் பி.எஸ்.என்.எல். அருகே பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். பள்ளியின் நிர்வாகிகள் சண்முகசுந்தரம், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  நிகழ்ச்சியில் கடையநல்லூர் வனரேஞ்சர் சுரேஷ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ், வனவர் முருகேசன் ஆகியோர் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினர். பள்ளி முதல்வர் அந்தோணி நன்றி கூறினார். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டுக்கு 3 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக 12 மதிப்பெண்கள் வழங்கப்படும் எனும் புதிய திட்டம் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வர இருக்கிறது. #MinisterSengottaiyan #Students #Saplings
  சென்னை:

  மரக்கன்றுகள் நடுவதை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு மிக தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வனத்துறை, உள்ளாட்சித்துறை, கல்வித்துறை போன்ற பல துறைகளும் இப்பணியில் ஈடுபட்டு, பங்களிப்பை அளித்து வருகின்றன.

  இந்தநிலையில் பள்ளி மாணவ-மாணவிகள் இடையே மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஒரு நல்ல திட்டத்தை தீட்டி இருக்கிறார்.  இந்த திட்டத்தின்படி 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் ஆண்டுக்கு ஒரு மரக்கன்று நட்டு பராமரிக்க வேண்டும். இதில் கிடைக்கும் அனுபவத்தை கொண்டு, 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் ஆண்டுக்கு 3 மரக்கன்றுகளை நட வேண்டும்.

  இந்த மரக்கன்றை மாணவர்கள் தங்கள் வீட்டின் வளாகத்திலோ, சொந்த நிலங்களிலோ, பள்ளி வளாகத்திலோ அல்லது பொது இடங்களிலோ நட்டு ஒரு ஆண்டு அதனை பராமரிக்க வேண்டும்.

  அப்படி 3 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியை முழுமையாக நிறைவேற்றும் மாணவர்களுக்கு ஒரு பாடத்துக்கு 2 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் ஆறு பாடங்களுக்கு கூடுதலாக 12 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த திட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  முதல்-அமைச்சரின் ஒப்புதல் கிடைத்த உடனேயே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு, அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதுதவிர மாணவர்களுக்கு மர வளத்தின் நன்மை, மரக்கன்று நட்டு பராமரிப்பது, மர வளத்தை பெருக்குவதின் மூலம் சுற்றுச்சூழல் மேம்பாடு, மரங்களினால் உண்டாகும் மழை வளம் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிய பாடத்திட்டத்தை உருவாக்கலாமா? என்றும் பள்ளி கல்வித்துறை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. #MinisterSengottaiyan #Students #Saplings
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கஜா புயலால் வீட்டை இழந்தவர்களில் 50 பேருக்கு வீடு கட்டித் தருவதாக லாரன்ஸ் அறிவித்துள்ள நிலையில், ரூ.10 லட்சம் செலவில் சமூக சேவகருக்கு வீடு கட்டி தருவதாக லாரன்ஸ் அறிவித்துள்ளார். #GajaCyclone #RaghavaLawrence
  நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கஜா புயலால் வீடு இழந்தவர்களில் 50 பேருக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டித்தரப்போவதாக அறிவித்தார். அதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

  முதல் கட்டமாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை வைத்து ஒரு வயதான பெண்மணிக்கும், சமூக சேவகர் ஆலங்குடி கணேசனுக்கும் வீடு கட்டி தர இருக்கிறார். ஆலங்குடி கணேசனுக்கு 10 லட்ச ரூபாய் செலவில் லாரன்ஸ் கட்டித்தரும் வீட்டுக்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது.

  இதுகுறித்து ராகவா லாரன்ஸ் கூறியதாவது:-

  ஏழையின் இதயத்தில் இரக்கம் அதிகமாக இருக்கும் என்பார்கள். வாழ்ந்தாலும் உள்ளத்தால் உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்தவர் ஆலங்குடி 515 கணேசன். அனாதையாக பிறந்தவர் யாரும் இல்லை.  ஆனால் யாரும் அனாதையாக இறக்கக் கூடாது என்கிற உயர்ந்த சிந்தனையால் ஏறக்குறைய 500 அனாதை சடலங்களை அந்தந்த மத முறைப்படி ஈமக்கிரியை செய்து தகனம் மற்றும் அடக்கம் செய்தவர். இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் யாருக்காவது ஏதாவது ஒன்று என்றால் ஓடோடி வந்து உதவி செய்பவர் கணேசன்.

  கேரள வெள்ள நிவாரணத்திற்கு மக்களிடம் நிதி திரட்டி அனுப்பி வைத்தவர் இவர். வீட்டையும் இரக்கமில்லாமல் கஜா காவு வாங்கி விட அதையும் பொருட்படுத்தாமல் கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யப் போய்விட்டார்.

  எல்லா வசதிகளுடன் அவரை வாழ வைத்து பார்க்க வேண்டும். வீட்டுக்கு அவர் போனால் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பாத்திரங்கள் கட்டில் பீரோ மின் விசிறி ஏ.சி. என்று வாழ வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவரை என் அப்பா இடத்தில் பார்க்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார். #RaghavaLawrence #GajaCyclone #GajaCycloneRelief

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள 50 பேருக்கு வீடுகட்டி தருவதாக கூறியுள்ள லாரன்ஸ், வீடுகட்டிய பின் புயல் பாதித்த விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவேன் என்றார். #RaghavaLawrence #GajaCyclone
  கஜா புயலால் வீடு இழந்தவர்களுக்கு 50 வீடுகள் கட்டி தருவதாக அறிவித்த லாரன்ஸ் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். ஆலங்குடி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

  வளமாக வாழ்ந்தவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டு நிவாரணம் கிடைக்குமா என்று சாலையில் நிற்பது வேதனை அளிக்கிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு வீடு கட்டிக்கொடுக்க திட்டமிட்டுள்ளேன். அதன் ஒரு பகுதியாக சமூகசேவகர் கணேசன் இல்லத்துக்குச் சென்று அவரைப் பார்த்தேன். அவரிடம் பணத்தை கொடுக்கவில்லை.

  ஆனால், வீடு கட்ட திட்டம் வரையப்பட்டு வருகிறது. இதைப்பார்த்து பலரும் முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும். நான் வாழ்வது ரசிகர்கள் கொடுத்த பணத்தில்தான், தற்போது அவர்கள் துன்பமான நிலையில் இருக்கிறார்கள். என்னிடம் இருப்பதில் ஒரு பகுதியை அவர்களுக்குக் கொடுக்க நினைக்கிறேன்.  அரசியலுக்கு வரத் தனித் தகுதிகள் வேண்டும் என்று நினைக்கிறேன். நான் படிக்கவில்லை. மேலும், அரசியலுக்கு வர என்னிடம் தகுதி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால், நான் அரசியலுக்கு வரமாட்டேன். நான் ஆன்மீகவாதி. அதனால், தற்போது அரசியலில் இருப்பவர்களுக்கு அந்தத் தகுதி உள்ளதா என்பதைப் பற்றி கூற விருப்பம் இல்லை.

  திரைப்படத்துறையில் இருப்பவர்கள் ஏதேனும் ஒரு வகையில் உதவிகள் செய்து கொண்டுதான் உள்ளனர். அடுத்தகட்டமாக மரக்கன்றுகள் வழங்க ஆலோசனை செய்கின்றேன். இந்தப் புயல் பாதிப்பால் விவசாயிகள் மனமுடைந்து விடாமல், மீண்டும் மரங்களை வளர்க்க முன்வர வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார். #RaghavaLawrence #GajaCyclone #GajaCycloneRelief

  ×