கபிலர்மலை அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

அரசு மேல்நிலைப் பள்ளியில் நேரு யுவகேந்திரா சார்பில் மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகம் வழங்கி, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.கபிலர் மலை வட்டார ஆத்மா தலைவருமான கே.கே. சண்முகம் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் புத்தகங்களை வழங்கினார்.
கபிலர்மலை அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நேரு யுவகேந்திரா சார்பில் மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகம் வழங்கி, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கபிலர்மலை ஒன்றிய குழு உறுப்பினரும், கபிலர் மலை வட்டார ஆத்மா தலைவருமான கே.கே. சண்முகம் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் புத்தகங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கலை சுந்தர்ராஜ், கபிலக்குறிச்சி ஊராட்சி உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர் பழனிசாமி , ஆசிரியர்கள், ஆசிரியைகள், பொதுமக்கள், நேரு யுவகேந்திரா பொறுப்பாளர்கள், மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com