search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Memorial Day Program"

    • மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • திரளானோர் கலந்து கொண்டு உயிர் நீத்த ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்

    பல்லடம் :

    பல்லடம் அருகே அருள்புரத்தில் இலங்கை முள்ளிவாய்க்கால் போரில் உயிர் நீத்த ஈழ தமிழர்களின் 14ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட ம.தி.மு.க., பொருளாளரும், பல்லடம் ஒன்றிய கவுன்சிலருமான ஆர்.ஆர். ரவி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திரளானோர் கலந்து கொண்டு உயிர் நீத்த ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    • எம்.ஜி.ஆரின் 35-ம்ஆண்டு நினைவு நாள் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் அனுசரிக்கப்பட்டது.
    • புறநகர்மாவட்ட செயலாளர் டி.டி.காமராஜ் தலைமையில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    தாராபுரம் : 

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-ம்ஆண்டு நினைவு நாள் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் அனுசரிக்கப்பட்டது. திருப்பூர் புறநகர்மாவட்ட செயலாளர் டி.டி.காமராஜ் தலைமையில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தண்டபாணி,அவைத்தலைவர் வெங்கிடுபதி,ஜிம் பாலகிருஷ்ணன்,தனலட்சுமி தங்கவேல்,பொன்னி கார்த்திகேயன்,பூங்கொடி ஜெயராஜ்,தாஜ் ஜாபர் சாதிக், பொன் செல்லத்துரை,கே.எஸ்.கே.ஜவகர்,அம்மன் ஆர்.பாலகிருஷ்ணன், கோட்டை குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    உடுமலை : 

    மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். நினைவு நாளை ஒட்டி அ.தி.மு.க. திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உடுமலை கே .ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஆலோசனைப்படி உடுமலை நகர அ.தி.மு.க. சார்பில் கபூர் கான் வீதி உழவர் சந்தை அருகில் உள்ள அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஹக்கீம் தலைமை தாங்கினார் . திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட இணை செயலாளர் சாஸ்திரி சீனிவாசன், அண்ணா தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் துபாய் ஆறுமுகம் , நாகராஜ், வேலுச்சாமி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி தாமோதர சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆரின் அலங்கரிக்கப்பட்ட உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • எம்.ஜி.ஆரின் 35 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க.சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 35 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க.சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. பல்லடம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க நகரச்செயலாளர் கல்லம்பாளையம் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் எம்.ஜி.ஆரின் அலங்கரிக்கப்பட்ட உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர்கள் பானு பழனிசாமி,துரைக்கண்ணன், அ.தி.மு.க. நிர்வாகிகள் தமிழ்நாடு பழனிச்சாமி, தர்மராசன், தண்ணீர்பந்தல் நடராஜன், மிருதுளா நடராஜன், லட்சுமணன், ரமேஷ்,நாராயணன்,கந்தசாமி,வக்கீல் வெங்கடாஜலபதி, உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல பல்லடம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பணிக்கம்பட்டியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நினைவு நாள் நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சித்துராஜ், மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இதே போல பல்லடம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அருள்புரம் பகுதியில் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காங்கயம் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது .
    • எம் ஜி .ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் நகர அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காங்கயம் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது . நிகழ்ச்சியில் காங்கயம் அ.தி.மு.க நகர செயலாளர் வெங்கு.ஜி.மணிமாறன் தலைமையில் எம் ஜி .ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து எம்.ஜி.ஆரின் ஏழை மக்களுக்கான திட்டங்களையும், அவர் குறித்த நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் காங்கயம் அ.தி.மு.க மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு எம் ஜி .ஆரின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 பேர் பலியாகினர்.
    • இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் நினைவு தினமாக பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர் கடைபிடித்து வருகின்றனர்.

    பல்லடம் :

    தமிழகத்தில், வன்னிய சமுதாயத்தினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கக்கோரி வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 1987-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற மறியல் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 பேர் பலியாகினர். இவர்களின் நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 17-ந் தேதியை இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் நினைவு தினமாக பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர் கடைபிடித்து வருகின்றனர்.

    அந்த வகையில் பல்லடம் பச்சாபாளையத்தில் நடைபெற்ற இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் தினம் அனுசரிப்பு நிகழ்ச்சியில் தியாகிகள் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மற்றும் நிர்வாகிகள் காளியப்பன், மணிகண்ணன், எம்.ஏ. நகர் குமார், பிரகாஷ், முன்னவன், நந்தகோபால், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீர வணக்க நாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அமைச்சர் கலந்து கொண்டு ஒண்டிவீரனின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    தாராபுரம் :

    தாராபுரத்தில் சுதந்திர போராட்ட தியாகி ஒண்டி வீரனின் வீர வணக்க நாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு ஒண்டிவீரனின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் தாராபுரம் ஒன்றியத் தலைவர் செந்தில்குமார் மற்றும் தாராபுரம் நகர தி.மு.க. செயலாளர் முருகானந்தம், நகர அவைத்தலைவர் கதிரவன், நகர துணை செயலாளர்கமலக் கண்ணன் ,மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் பெரியசாமி , மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார் மற்றும் தமிழ்ப்புலிகள் அமைப்பின் மாவட்ட செயலாளர் காளிமுத்து மற்றும் தண்டபாணி , சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×