என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மரியாதை செலுத்திய காட்சி.
ஒண்டிவீரன் நினைவு நாள் நிகழ்ச்சி
- வீர வணக்க நாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
- அமைச்சர் கலந்து கொண்டு ஒண்டிவீரனின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தாராபுரம் :
தாராபுரத்தில் சுதந்திர போராட்ட தியாகி ஒண்டி வீரனின் வீர வணக்க நாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு ஒண்டிவீரனின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் தாராபுரம் ஒன்றியத் தலைவர் செந்தில்குமார் மற்றும் தாராபுரம் நகர தி.மு.க. செயலாளர் முருகானந்தம், நகர அவைத்தலைவர் கதிரவன், நகர துணை செயலாளர்கமலக் கண்ணன் ,மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் பெரியசாமி , மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார் மற்றும் தமிழ்ப்புலிகள் அமைப்பின் மாவட்ட செயலாளர் காளிமுத்து மற்றும் தண்டபாணி , சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






