

பல்லடம் :
பல்லடத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 35 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க.சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. பல்லடம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க நகரச்செயலாளர் கல்லம்பாளையம் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் எம்.ஜி.ஆரின் அலங்கரிக்கப்பட்ட உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர்கள் பானு பழனிசாமி,துரைக்கண்ணன், அ.தி.மு.க. நிர்வாகிகள் தமிழ்நாடு பழனிச்சாமி, தர்மராசன், தண்ணீர்பந்தல் நடராஜன், மிருதுளா நடராஜன், லட்சுமணன், ரமேஷ்,நாராயணன்,கந்தசாமி,வக்கீல் வெங்கடாஜலபதி, உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல பல்லடம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பணிக்கம்பட்டியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நினைவு நாள் நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சித்துராஜ், மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இதே போல பல்லடம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அருள்புரம் பகுதியில் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.