கோட்டா சீனிவாச ராவ் உடலுக்கு திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி

நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார்.தமிழில் சாமி, திருப்பாச்சி, சகுனி உள்ளிட்ட படங்களில் கோட்டா சீனிவாசராவ் நடித்துள்ளார்.
கோட்டா சீனிவாச ராவ் உடலுக்கு திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி
Published on

நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிர் பிரிந்தது.

கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

தமிழில் சாமி, திருப்பாச்சி, சகுனி உள்ளிட்ட படங்களில் கோட்டா சீனிவாசராவ் நடித்துள்ளார்.

2015இல் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது உள்பட பல்வேறு விருதுகளை கோட்டா சீனிவாசராவ் வென்றுள்ளார்.

இவரது உடலுக்கு பல தெலுங்கு நடிகர்களும் அரசியல் தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆந்திரா துணை முதலமைச்சரான பவன் கல்யாண், நடிகர் பிரம்மானந்தம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் அப்ப்போது அவர்கள் மிகவும் கோட்டா ஸ்ரீனிவாசனைப் பற்றி உருக்கமாக பேசினார்கள்.

நடிகர் சத்யராஜ் அவரது ஆழ்ந்த இரங்கலை விடியோவாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

1999- 2004 வரை விஜயவாடா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக கோட்டா சீனிவாசராவ் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com