search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Kaali Venkat"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அநீதி’.
  • இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

  இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அநீதி'. இந்த படத்தில் துஷாரா விஜயன், வனிதா, பரணி, சுரேஷ் சக்ரவர்த்தி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


  இந்நிலையில், இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நடிகர் காளி வெங்கட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "திக்குமுக்காடுற அளவிற்கு அநீதி படத்தை கொண்டாடுகிறீர்கள் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பு கொடுத்த வசந்த பாலன் அவர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் ஷங்கருக்கும் என் நன்றி. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்திற்கு பேராதரவு கிடைத்திருக்கிறது என்று தெரிகிறது. உங்கள் அனைவருக்கும் திருப்பி என்ன கொடுப்பது என்று தெரியவில்லை" என்று பேசினார்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா - மஹிமா நம்பியார், இந்துஜா நடிப்பில் உருவாகி வந்த ‘மகாமுனி’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. #MagaMuni #Arya #MahimaNambiar #Indhuja
  `கஜினிகாந்த்' படத்திற்கு பிறகு ஆர்யா நடிப்பில் அடுத்ததாக படங்கள் வெளிவரவில்லை. கடந்த மார்ச் மாதம் சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால், சாயிஷாவுடன் இணைந்து `காப்பான்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

  இதுதவிர சாந்தகுமார் இயக்கத்தில் ‘மகாமுனி’ மற்றும் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் `டெடி' படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களையும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனமே தயாரிக்கிறது.

  இதில் ‘மகாமுனி’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


  மகாமுனி படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா நாயகிகளாக நடித்துள்ளனர். ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  மௌன குரு படத்திற்கு பிறகு சாந்தகுமார் இயக்கியிருக்கும் இந்த படம் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.

  அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார். #MagaMuni #Arya #MahimaNambiar #Indhuja 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த 96 படத்திற்கு தெலுங்கில் விருது கிடைத்துள்ளது. #96TheMovie #VijaySethupathi #Trisha
  விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த 96 திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பல விருதுகளையும் வென்று வணிக ரீதியான வெற்றியும் பெற்றது. 

  சமந்தா, சர்வானந்த் நடிக்க ‘96’ தெலுங்கு ரீமேக் வேலைகளும் நடந்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகரும், இயக்குநருமான மாருதி ராவ்வின் மகன் அமரர் கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவாகக் கொடுக்கப்படும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை 96 படத்திற்காக இயக்குநர் பிரேம் குமார் பெறவுள்ளார்.  1992-ல் தனது முதல் படமான ‘பிரமேபுஸ்தகம்‘ என்னும் படத்தை இயக்கும்போது ஸ்ரீனிவாசன் காலமானார். அதைத் தொடர்ந்து அப்படத்தை மாருதி ராவ் இயக்கி முடித்தார். ஸ்ரீநிவாஸ் நினைவாக நடத்தப்படும் ‘கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது’ விழா கடந்த 21 வருடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 2001-ம் ஆண்டுக்கு பிறகு இவ்விருதை வெல்லும் முதல் தமிழ் படம் 96 என்பது குறிப்பிடத்தக்கது. #96TheMovie #VijaySethupathi #Trisha #PremKumar

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் `கழுகு-2' படத்தில் யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். #Kazhugu2 #Krishna
  சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான `கழுகு' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாவது பாகம் `கழுகு-2' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.

  கிருஷ்ணா, பிந்து மாதவி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திலிருந்து சகலகலா வள்ளி என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாட்டில் நடிகை யாஷிகா ஆனந்த் குத்தாட்டம் போட்டுள்ளார்.

  ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார். பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. #Kazhugu2 #Krishna #BinduMadhavi #YashikaAannand

  சகலகலா வள்ளி பாடல் வீடியோ:

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் `கழுகு-2' படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #Kazhugu2 #Krishna
  சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான `கழுகு' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாவது பாகம் `கழுகு-2' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.

  கிருஷ்ணா, பிந்து மாதவி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். அண்டை மாநிலத்தின் முதல்வர் ஒருவரின் ஹெலிகாப்டர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து நொறுங்குகிறது. அதனை தேடிக் கண்டுபிடிக்க ராணுவத்துடன் அந்த ஊர் மக்களும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இதனை மையப்படுத்தி படம் உருவாகி இருக்கிறது. #Kazhugu2 #Krishna #BinduMadhavi

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘மௌன குரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ படத்தின் தொடக்க விழா பூஜையுடன் இன்று துவங்கியது. #MagaMuni #Arya #Indhuja #MahimaNambiar
  ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படம் ‘மகாமுனி’.

  ஆர்யா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார், இந்துஜா நடிக்கின்றனர். ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

  மௌன குரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இந்த படத்தை இயக்குகிறார். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், க்ரைம் திரில்லர் பாணியில் ‘மகாமுனி’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.


  அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சண்டை பயிற்சியை ஆக்சன் பிரகாஷ் மேற்கொள்கிறார்.

  இந்த படத்தின் தொடக்கவிழா இன்று காலை சென்னையில் எளிமையாக நடந்தது. விழாவில் படக்குழுவினருடன் நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குநர்கள் எம்.ராஜேஷ், சந்தோஷ் பி.ஜெயக்குமார், ஹரிகுமார் (தேள்), தயாரிப்பாளர்கள் 2டி என்டெர்டெயின்மென்ட் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், சக்திவேலன்.பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். #MagaMuni #Arya #Indhuja #MahimaNambiar

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராம்குமார் இயக்கத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் `ராட்சசன்' படத்தில் கிறிஸ்டோபர் என்கிற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளவரை படக்குழு நேற்று அறிமுகப்படுத்தியது. #Ratsasan #VishnuVishal
  முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு ராம்குமார் - விஷ்ணு விஷால் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் `ராட்சசன்' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

  ரசிகர்களை சீட்டின் நுனியிலேயே உட்கார வைக்கும் சைக்கோ த்ரில்லர் கதையான இந்த படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் வில்லனாக, சைக்கோ கொலைகாரனாக நடித்திருந்தவர் சரவணன் என்பவரை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

  சரவணன் என்பவர் தான் ராட்சசன் படத்தில் கிறிஸ்டோபர் என்ற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  அந்த சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க போராடும் போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். விஷ்ணு ஜோடியாக அமலாபாலும், முக்கிய கதாபாத்திரத்தில் சூசேன் ஜார்ஜ், சஞ்சய், காளி வெங்கட், ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

  ஆக்சஸ் பிலிம் ஃபாக்ட்ரி மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். #Ratsasan #VishnuVishal

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராம்குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ராட்சசன் படப்பிடிப்பு முடிந்த பிறகு இயக்குநரை பாராட்ட சென்றேன், ஆனால் அவரோ பதறி அங்கிருந்து சென்றுவிட்டதாக அமலாபால் கூறினார். #Ratsasan #AmalaPaul
  ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ராட்சசன் படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் நடிகை அமலாபால் பேசியதாவது,

  படம் ரிலீசாகும் போது கடுமையான போட்டி இருந்தது. படம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. ராட்சசன் படத்தில் எனக்கு ஒரு அழகான கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. ராம் ஒரு எளிஜிபில் பேச்சிலர். யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன். முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு கல்யாணம் பண்ணியிருந்தால் நடந்திருக்கும் என்று ராமிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன். இந்த படத்துக்கு அப்புறம் எல்லாரும் கொஞ்சம் டென்சன் ஆயிருவாங்க, இந்த படத்தின் படப்பிடிப்பில் அனைவருமே கஷ்டப்பட்டோம். படப்பிடிப்பு முடிந்த உடனே ராமுக்கு நன்றி தெரிவித்து அவரை அரவணைத்து பாராட்ட சென்றேன். ஆனால் அவரோ பதறியடித்து ஓடியேவிட்டார். ரொம்ப சிறந்த மனிதர்.  நிறைய நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த படத்தில் நான் நடிக்க முக்கிய காரணமான விஷ்ணுவுக்கு நன்றி. அவர் இல்லையென்றால் நான் இந்த படத்தில் நடித்திருக்க முடியாது.

  மீடூ பற்றி முதலில் ட்வீட் செய்தது நான் தான். எல்லாருக்கும் தெரியும், இந்த ஆண்டு பிப்ரவரியில் எனக்கு ஒரு பாலியல் தொல்லை வந்தபோதே நான் சொல்லியிருந்தேன். எனக்கு ஒரு தொல்லை வரும் போது அது பற்றி நான் பேசிவிட்டேன். இது மூடிவைக்கக்கூடிய விஷயம் அல்ல, இந்த மாதிரியான தொல்லைகள் நிறைய இருக்கிறது. சினிமாவில் மட்டும் இல்லை, மற்ற பல துறைகளிலும் இருக்கிறது. #Ratsasan #AmalaPaul

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை விஷ்ணு விஷால் கைப்பற்றியிருக்கிறார். #Ratsasan #VishnuVishal
  முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு ராம்குமார் - விஷ்ணு விஷால் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் ராட்சசன் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

  ரசிகர்களை சீட்டின் நுனியிலேயே உட்கார வைக்கும் சைக்கோ த்ரில்லர் கதையான இந்த படம் தொடர்ந்து இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், படத்திற்கான இந்தி ரீமேக் உரிமையை விஷ்ணு விஷால் வாங்கியிருப்பதாக தகவல் வெளியான நிலையில், விஷ்ணு தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

  இந்த படத்தில் சைக்கோ கொலைகாரன் ஒருவனை கண்டுபிடிக்க போராடும் போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். விஷ்ணு ஜோடியாக அமலாபாலும், முக்கிய கதாபாத்திரத்தில் சூசேன் ஜார்ஜ், சஞ்சய், காளி வெங்கட், ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

  ஆக்சஸ் பிலிம் ஃபாக்ட்ரி மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். #Ratsasan #VishnuVishal

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் 96 படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தை பார்த்த இயக்குநர் சேரன் ஆட்டோகிராப் படத்தை 96 படத்துடன் ஒப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார். #96TheMovie
  பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய 96 படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக 90-களில் பள்ளிப் படிப்பை முடித்த இளைஞர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். 

  அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் உள்ள பலரும் படத்தையும், படக்குழுவையும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும், நடிகருமான சேரனும் 96 படக்குழுவை பாராட்டி உள்ளார்.

  முன்னதாக 96 படத்தையும், சேரனின் ஆட்ரோகிராப் படத்தையும் ஒப்பிட்டு சிலர் பேசினர். அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இயக்குநர் சேரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

  `தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் 96, ஆட்டோகிராப்பையும், 96யும் சம்பந்தப்படுத்த வேண்டாம். அது கடந்து வந்த காதல்களின் நினைவுகள். இது காதலை தொலைத்த இருவரும் வாழ்க்கையை கடந்த நிலையில் சந்திக்கும்போது பரிமாறிக்கொள்ளும் உணர்வுகள்.

  விஜய் சேதுபதியும், திரிஷாவும் மெல்லிய உணர்வுகளை அழகாக பதிவுசெய்து இவ்வருடத்தின் முக்கிய விருதுகளுக்கு தகுதியுடையவர்களாகிறார்கள். இருவரை மட்டுமே வைத்து காட்சிகளை அழகாக கோர்த்த இயக்குனர் மிகச்சிறந்த இயக்குனராக மிளிர்வார். இதுபோல சினிமாக்களால் தமிழ்சினிமா தலை நிமிரும். #96TheMovie #Cheran