காளி வெங்கட் நடித்த `மெட்ராஸ் மேட்னி' பட ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு அறிவித்துள்ளது
காளி வெங்கட் நடித்த `மெட்ராஸ் மேட்னி' பட ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு
Published on

அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

நம் அனைவரின் கதையை பிரதிபலிக்கும் வகையில் ஒரு எதார்த்த கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது. படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படத்தையும் படக்குழுவையும் பாராட்டினர்.

இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி அமேசான் பிரைம் மற்றும் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் ஜி.கே, இசை கே.சி பாலசரங்கன், படத்தொகுப்பு சதீஷ் குமார், கலை வடிவத்தை ஜாக்கி மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com