`மெட்ராஸ் மேட்னி' படத்தை பார்த்து படக்குழுவை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவான திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.திரைப்பிரபலங்கள் படத்தையும் படக்குழுவையும் பாராட்டினர்.
`மெட்ராஸ் மேட்னி' படத்தை பார்த்து படக்குழுவை பாராட்டிய சிவகார்த்திகேயன்!
Published on

அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவான திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

நம் அனைவரின் கதையை பிரதிபலிக்கும் வகையில் ஒரு எதார்த்த கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது. படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படத்தையும் படக்குழுவையும் பாராட்டினர்.

அந்த வகையில் தற்பொழுது படத்தை பார்த்து நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவை அழைத்து பாராட்டினார். இதனை காளி வெங்கட் அவரது எக்ஸ் தளத்தில் "அன்பிற்கினிய சிவகார்த்திக்கேயன் அவர்கள் #MadrasMatinee திரைப்படத்தை படக்குழுவினருடன் கலந்துரையாடி பாராட்டியதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். அன்பும் நன்றியும்?❤️??" என பதிவிட்டுள்ளார்.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com