என் மலர்
நீங்கள் தேடியது "Aishwarya Dhanush"
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 3. 2012ம் ஆண்டில் தமிழில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படம் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் மொழி மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது.
தமிழை போலவே, 3 திரைப்படம் தெலுங்கு ரசிகர்களிடையும் நல்ல வரவேற்பை பெற்றது.
இது ஒரு காதல் உளவியல் த்ரில்லர் திரைப்படம், இதில் தனுஷ் இருமுனை கோளாறால் (bipolar disorder) பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளார். அனிருத் இசையில், பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்தது.
'3' திரைப்படம் ஏற்கனவே 2022 (தெலுங்கு மாநிலங்களில்) மற்றும் செப்டம்பர் 2024 (தமிழகத்தில்) ஆகிய ஆண்டுகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
பொதுவாக ஒரு படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு 1-2 ஆண்டுகளுக்குள் மீண்டும் பெரிய அளவில் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது அரிது. இந்நிலையில், 3 திரைப்படம் தெலுங்கு மொழியில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
அதன்படி, பிப்ரவரி 6ம் தேதி அன்று உலகம் முழுவதும் தெலுங்கு மொழியில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இன்னும் 50 நாட்களில் 3 திரைப்படம் ரீ ரிலீஸ் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.







