என் மலர்

  நீங்கள் தேடியது "Prasanna"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார்.
  • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

  நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பாலக் லால்வாணி நடித்திருக்கிறார். இந்த படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

   

  சினம்

  சினம்

  இந்நிலையில் சினம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் திரைத்துறையினர், படக்குழு என பலரும் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் பிரசன்னா கூறியதாவது, "பல புறக்கணிப்புகளுக்கு அப்புறம் அருண் விஜய் எழுந்து வந்து இருக்கிறார். அவருக்கு ஏற்ற வார்த்தை தான் படத்தின் தலைப்பாக அமைந்து இருக்கிறது. எங்களுக்கு அருண் விஜய் உதாரணமாக இருக்கிறார்.

  பிரசன்னா

  பிரசன்னா

   

  அவர் எனது குடும்ப நண்பர். இயக்குனர் குமார் உடைய திறமை எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தும் ஒன்று. காளி வெங்கட் சிறந்த குணசித்திர நடிகர். இசையமைப்பு படத்தின் கதையமைப்புடன் சேர்ந்து அமைந்து இருக்கிறது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள் என்றார்.

  அருண் விஜய் - ஜி.என்.ஆர்.குமாரவேலன் 

  அருண் விஜய் - ஜி.என்.ஆர்.குமாரவேலன் 

   

  இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் கூறியதாவது, "என்னுடைய படத்திற்கு பாராட்டுகளையும், நான் செய்த தவறுகளுக்கு விமர்சனங்களும் தொடர்ந்து கொடுத்து வரும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த படத்தின் கதையாசிரியர் உண்மையாகவே காவல் துறையில் பணிபுரிகிறார். இந்த படத்தின் கதையை கேட்டு, என்னுடைய முந்தைய படங்கள் பற்றி யோசிக்காமல் அருண் விஜய் ஓகே செய்தார். விஜய்குமார் சார் உடன் பணிபுரிவது எனக்கு முதலில் பயத்தை கொடுத்தது. அதன்பிறகு மகிழ்ச்சியாக இருந்தது.

  சினம்

  சினம்

   

  நடிகரே இந்த படத்தின் தயாரிப்பாளராக அமைந்தது பெரிய பலமாக அமைந்தது. கோவிட் காலத்தில் நம்பிக்கை இழக்க கூடிய தருணத்தில், எங்களுக்கு நம்பிக்கை அளித்தவர் விஜயகுமார் சார். இந்த படத்தை ஒடிடியில் வெளியிடாமல், தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று அருண் விஜய் உறுதியாக இருந்தார். இந்த படம் கண்டிப்பாக பேசப்பட கூடிய படமாக இருக்கும்" என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கண்ட நாள் முதல், சீனா தானா, மாபியா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரசன்னா.
  • தற்போது பாலிவுட் திரையுலகில் அவர் களம் இறங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

  தமிழில் 2002-ல் வெளியான 'பைவ் ஸ்டார்' படம் மூலம் அறிமுகமான பிரசன்னா அழகிய தீயே, கஸ்தூரிமான், கண்ட நாள் முதல், சீனா தானா, சாதுமிரண்டா, கண்ணும் கண்ணும், முரண், மாபியா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அவரது வில்லன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. திருட்டு பயலே 2 படத்திலும் வில்லன் வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

   

  பிரசன்னா

  பிரசன்னா

  தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது துப்பறிவாளன் 2-ம் பாகம் படம் இவரின் கைவசம் உள்ளது. இந்நிலையில் பிரசன்னாவுக்கு இந்தி வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்தியில் நடிக்கும் மகிழ்ச்சியை சமூக வலைத்தலத்தில் பிரசன்னா பகிர்ந்திருந்தார். இதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்து இந்தி வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரசன்னாவுக்கு ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நடிகர் தனுஷ் தனது நாற்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
  • இவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான தனுஷ் தனது நாற்பதாவது பிறந்த நாளை இன்று (28-07-2022) கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்த நாளுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


  தனுஷ்

  இந்நிலையில், நடிகர் பிரசன்னா தனது சமூக வலைதளப்பக்கத்தில் தனுஷிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து அவர் பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

  இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து, 'நானே வருவேன்', 'வாத்தி' போன்ற படங்களில் நடித்து வருகிறார். தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு 'வாத்தி' படக்குழு இன்று டீசர் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல நடிகையாக இருக்கும் சினேகா, தன்னிடம் தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்து இருக்கிறார்.
  நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து புகழ் பெற்றவர். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு பிரசன்னாவுடன் நடித்தபோது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இருவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளது. திருமணத்திற்கு பின்னரும் இருவரும் திரைப்படங்கள் மற்றும் விளம்பரப்படங்களிலும் நடித்து வருகின்றனர்.

  இந்நிலையில் நடிகை சினேகா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தனியார் நிறுவனம் தங்கள் நிறுவனத்துக்கு பெரும் தொகையை பங்காக கொடுத்தால் மாதம் குறிப்பிட்ட சதவீதம் லாபம் தருவதாக ஆசைக்காட்டியதன் பேரில் ஆன்லைன் மூலம் ரூ.25 லட்சமும், நேரில் ரூ.1 லட்சமும் கொடுத்ததாகவும் இதற்காக மாசம் ரூ.1.80 லட்சம் லாபம் தருவதாக அவர்கள் தெரிவித்ததாகவும், ஆனால் ஐந்து மாதம் ஆகியும் பங்கு தொகையும் தராமல், அசல் தொகையும் தராமல் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். 

  சினேகா

  மேலும் இதுகுறித்து கேட்டபோது பணம் தர முடியாது என அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிக்க உள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துருவங்கள் பதினாறு பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு மாஃபியா என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
  `தடம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் `அக்னிச் சிறகுகள்', `சாஹோ' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. `பாக்ஸர்' மற்றும் கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்க இருக்கிறார். `துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்திலும் நடிக்கிறார்.

  குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்திற்கு `மாஃபியா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். வில்லனாக நடிக்க பிரசன்னாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.  லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்த கார்த்திக் நரேன் திட்டமிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  `அஞ்சாதே' படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய நடிகர் பிரச்சனா, தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
  `துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக `நரகாசூரன்' என்ற படத்தை இயக்கினார். பைனான்ஸ் பிரச்சனையால் அந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக `நாடக மேடை' என்ற படத்தை இயக்குவதாக அறிவத்தார். அந்த படம் பாதியில் நிற்கிறது.

  இந்த நிலையில், அவரது அடுத்த படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கிறார். குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரசன்னாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் முன்னதாக அஞ்சாதே, முரண் உள்ளிட்ட படங்களில் வில்லத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திரவம் என்ற இணைய தொடரில் நடித்து வருகிறார்.  லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனுஷ் - சினேகா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடக்கும் நிலையில், ஐஸ்வர்யா தனுஷ், பிரசன்னா ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தரிசனம் செய்தனர். #Dhanush #Snekha
  துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் - சினேகா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்து வருகிறது. அதை பார்வையிட்ட பின்னர் நடிகர் ரஜினிகாந்த் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா மற்றும் நடிகை சினேகாவின் கணவர் நடிகர் பிரசன்னா ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். 

  அவர்களை கோவில் பட்டாச்சாரியார்கள் வரவேற்று ஆண்டாள் சன்னதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஐஸ்வர்யா, நடிகர் பிரசன்னா ஆகியோர் ஆண்டாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் கோவிலுக்கு வெளியே வந்து கோவில் யானைக்கு பழங்களை வழங்கிவிட்டு மணவாள மாமுனிகள் சன்னதிக்குச் சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்தனர்.  சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் இருவருக்கும் ஆசி வழங்கினார். தொடர்ந்து ஐஸ்வர்யாவும், பிரசன்னாவும் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர். #Dhanush #Snekha #AishwaryaDhanush #Prasanna

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடிகைகளாக இருக்கும் விஷால், வரலட்சுமி, பிரசன்னா ஆகியோர் கமல் வழியை பின்பற்றி வருகிறார்கள். #Kamal
  கமல்ஹாசன் சினிமாவில் பிசியாக இருக்கும்போதே டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக களம் இறங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 சீசன்களையும் அவரே தொகுத்து வழங்கினார்.

  அவர் வழியில் தற்போது விஷால் ஒரு தனியார் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறி இருக்கிறார். அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. அடுத்து கமல், விஷால் வரிசையில் வரலட்சுமியும் இணைந்துள்ளார். அவரும் ஒரு டிவியில் சமூக சேவை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார்.  நடிகர் பிரசன்னாவும் தொலைக்காட்சி தொகுப்பாளராக மாறி இருக்கிறார். சிவகார்த்திகேயன், மாகாபா.ஆனந்த், ரோபோ சங்கர் என டிவியில் இருந்து சினிமாவுக்கு ஆட்கள் வந்த நிலைமை மாறி சினிமாவில் இருந்து பிரபலங்கள் டிவி பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள்.
  ×