search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Aishwarya lakshmi"

  • சமீபத்தில் நடித்து வெளியான 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
  • பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான ’கண்ட 'கண்ட நாள் முதல்’ படத்தை இயக்கிய பிரியா இப்படத்தை இயக்கியுள்ளார்

  விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அசோக் செல்வன். அதற்கடுத்து 2014 ஆம் ஆண்டு வெளியான தெகிடி படத்தின் மூலம் கதாநாயகானார்.

  தொடர்ந்து நல்ல கதைகளையும் , நல்ல கதாப்பாத்திரத்தையும் தேடி தேடி நடித்து வருகிறார் அசோக் செல்வன். ஓ மை கடவுளே , சில நேரங்களில் சில மனிதர்கள், போர் தொழில், சபா நாயகன் மற்றும் ப்ளூ ஸ்டார் போன்ற பல ஹிட்டான படங்களில் நடித்தார்.

  அவர் சமீபத்தில் நடித்து வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக 'பொன் ஒன்று கண்டேன்' படத்தில் நடித்துள்ளார். அசோக் செல்வனுடன் ஐஷ்வர்யா லக்ஷ்மி மற்றும் வசந்த் ரவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

  2005 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான 'கண்ட நாள் முதல்' படத்தை இயக்கிய பிரியா இப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தை தயாரித்து இசையமைத்துள்ளார்.

  ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடாமல் நேராக ஜியோ சினிமாவில் வெளியிடுகிறார்கள் மக்கள் அனைவரும் இலவசமாக ஜியோ சினிமா செயலி மூலம் இப்படத்தை காணலாம்.

  தற்பொழுது படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, வசந்த் ரவி ஆகியோர் நடிப்பில் பொன் ஒன்று கண்டேன் என்ற திரைப்படம் உருவாகி வந்தது
  • இப்படத்தை கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட படங்களை இயக்கிய ப்ரியா இயக்கியுள்ளார்

  அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, வசந்த் ரவி ஆகியோர் நடிப்பில் பொன் ஒன்று கண்டேன் என்ற திரைப்படம் உருவாகி வந்தது. இப்படத்தை கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட படங்களை இயக்கிய ப்ரியா இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

  திரையரங்குகளில் இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படம் நேரடியாக கலர்ஸ் தமிழில் வெளியாக இருக்கிறது. வருகின்ற மார்ச் 24ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வசந்த் ரவி, இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  அதில், "அதிர்ச்சியளிக்கிறது. இது உண்மையா? குறிப்பாக புகழ்பெற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஜியோ ஸ்டூடியோஸிலிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ப்ரியா, யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் படக்குழுவினருடன் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளாமல் பொன் ஒன்று கண்டேன் பட ப்ரோமோவையும் சின்னத்திரையில் வெளியாகவுள்ள அறிவிப்பையும், பார்ப்பது மிகவும் வேதனையாகவும் வருத்தமாகவும் உள்ளது. இந்தப் படத்துக்காக நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் தெரிவிக்கப்படாமல் நடந்துள்ளது. படக்குழுவிற்கு இது பற்றி சுத்தமாக தெரியவில்லை" என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

  தரமணி, ராக்கி, அஸ்வின்ஸ் ஆகிய படங்களில் வசந்த் ரவி நாயகனாக நடித்துள்ளார். பின்னர் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கமல்ஹாசன் நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது.
  • இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

  பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைஃப்' (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.


  இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 18-ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தில் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்துள்ளதாக நேற்று படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்திருந்தது.


  தக் லைஃப் போஸ்டர்

  இந்நிலையில், இந்த படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'தக் லைஃப்' திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லஷ்மி இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருந்தது குறிப்பிடத்தகக்து.


  • நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ‘பொன்னியின் செல்வன் -1’ திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
  • இவர் தற்போது மீண்டு தயாரிப்பாளராகியுள்ளார்.

  மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். விஷால் நடிப்பில் வெளியான 'ஆக்‌ஷன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' என்ற படத்தில் ஈழத் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.


  ஐஸ்வர்யா லட்சுமி

  பின்னர், 'கார்கி' என்ற படத்தை தயாரித்திருந்தார். தற்போது 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் இவர் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்று இவருக்கான ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, "செப்டம்பர் 30-ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் -1' வெளியானது. அதில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். இதற்கு எதிர்பாராத இடங்களிலிருந்து கிடைத்து வரும் பாராட்டுகள் என்னை உற்சாகமடைய செய்திருக்கிறது.


  ஐஸ்வர்யா லட்சுமி

  தற்போது 'அம்மு' என்ற பெயரில் தயாராகி இருக்கும் தெலுங்கு திரைப்படம் ஒன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று வெளியாகிறது. இதிலும் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறேன். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 28-ஆம் தேதி 'குமாரி' என்ற மலையாள படமும் வெளியாகிறது.


  ஐஸ்வர்யா லட்சுமி

  'கார்கி' படத்தைத் தொடர்ந்து, 'குமாரி' படத்திலும் தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறேன். இந்தப் படத்திலும் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்திருக்கிறேன். முப்பது நாட்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், முத்தான மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.'' என்று கூறியுள்ளார்.


  ஐஸ்வர்யா லட்சுமி

  நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி வரும் 'கட்டா குஸ்தி' படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் ப்ரியா இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் வசந்த் ரவி ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் 'கிறிஸ்டோபர்' மற்றும் 'கிங் ஆஃப் கோதா' எனும் மலையாளப் படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

  • பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.
  • இவரின் அம்மு படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

  மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் நடித்த 'ஜகமே தந்திரம்', 'கேப்டன்', 'கார்கி' போன்ற படங்கள்  கலவையான விமர்சனங்களை பெற்றது.


  ஐஸ்வர்யா லட்சுமி

  சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் 'பூங்குழலி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் தோற்றமும் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

  தற்போது இவர் ட்ரிப்பிள்ஸ் வெப் தொடரின் இயக்குனர் சாருகேஷ் சேகர் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் அம்மு. ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நவீன் சந்திரா, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்திருக்கிறார்கள்.


  அம்மு போஸ்டர்

  'அம்மு' திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

  வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்கவிருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக தமன்னா ஒப்பந்தமாகி இருக்கிறார். #Vishal #Tamanaah
  அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் அயோக்யா படத்தில் நடித்து வரும் விஷால் அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஆக்‌‌ஷன், காமெடி, குடும்ப செண்டிமெண்டுடன் கூடிய கமர்சியல் படமாக உருவாக இருக்கும் இந்த படம் விஷால்-சுந்தர்.சி இணையும் 3 வது படம்.

  இதில் விஷாலுக்கு ஜோடிகளாக தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி இருவரும் நடிக்கிறார்கள். விஷாலுக்கு வில்லனாக ஜெகபதி பாபு நடிக்கிறார். கத்திச்சண்ட படத்துக்கு பிறகு விஷாலுடன் தமன்னா, ஜெகபதி பாபு இருவரும் இணைகிறார்கள்.  இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது. சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Vishal #Tamanaah #SundarC

  மலையாளத்தில் நிவின் பாலி, பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி தற்போது தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #AishwaryaLakshmi
  மலையாளம், தெலுங்கு, கன்னடம் திரையுலகில் ஏதேனும் ஒன்றில் அறிமுகமாகும் நாயகிகளின் அடுத்த இலக்கு தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைப்பதாகத்தான் இருக்கும்.

  நயன்தாரா முதல் லட்சுமி மேனன் வரை உதாரணங்கள் கூறலாம். மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் இதில் சேர்ந்து இருக்கிறார். நிவின்பாலி நடித்த ‘நிஜாண்டுகலுதே நாட்டில் ஓரிடவேளா’ படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா அதைத் தொடர்ந்து மாயநதி படத்தின் மூலம் மலையாள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

  பகத் பாசிலுக்கு ஜோடியாக அவர் நடித்துவரும் வரதன் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இரண்டு மலையாளப் படங்களில் கவனம் செலுத்திவரும் இவர், தற்போது தமிழ்த் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா ஜோடி சேர்ந்து பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க உள்ளார்கள்.  இந்தப் படத்தில் இரண்டாவது நாயகியாக ஐஸ்வர்யா லெட்சுமியும் இணைந்துள்ளார். குடும்ப பாங்கான அமைதியான கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழில் ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் இருக்கும் நிலையில் புதிதாக ஐஸ்வர்யா லட்சுமி இணைந்திருக்கிறார்.
  ×