என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மீண்டும் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடிப்பது எப்போது - சூரி அளித்த சுவாரசிய பதில்
    X

    மீண்டும் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடிப்பது எப்போது - சூரி அளித்த சுவாரசிய பதில்

    • சூரி நடித்துள்ள 'மாமன்' படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

    காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியுள்ள சூரி நடித்துள்ள 'மாமன்' படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

    ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது.

    இந்நிலையில் படத்தின் முதல் நாளை விட இன்று அதிக டிக்கெட் புக்கிங்ஸ் நடைப்பெற்று வருகிறது. தமிழ் நாட்டில் உள்ள பல திரையரங்கிற்கு நேரில் சென்று மக்களுடன் படத்தை கொண்டாடி வருகிறார் சூரி. அப்போது செய்தியாளர்களை சந்தித்த சூரி " இப்படம் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி வருகின்றனர். குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் இப்படத்தை பார்த்து கண்கலங்குகின்றனர். அவர்களுடைய வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர். இவங்க எல்லாத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்."

    மேலும் மீண்டும் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு " அது மக்களே சொல்லட்டும், அதை அவர்களே தீர்மானிக்கட்டும், கதையின் நாயகனாக வெற்றி திரைப்படங்களை கொடுக்கவா இல்லை நகைச்சுவை வேடத்தில் நடிக்க வேண்டுமா என அவர்களே முடிவெடுக்கட்டும்" என கூறியுள்ளார்.

    Next Story
    ×