நீங்க நினைச்சது நடந்துடுச்சி.. அஜித் படத்தில் நடிக்கிறேன்.. மகிழ்ச்சியில் பிரசன்னா

ஆதிக் ரவிசந்திரன்அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தை பற்றிய மற்றொரு சுவாரசிய தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
நீங்க நினைச்சது நடந்துடுச்சி.. அஜித் படத்தில் நடிக்கிறேன்.. மகிழ்ச்சியில் பிரசன்னா
Published on

கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'மார்க் ஆண்டணி' மிகப்பெரிய ஹிட் அடித்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இதை தொடர்ந்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித் மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சுனில் , நஸ்லேன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

படப்பிடிப்பு பணிகள் ஐதரபாத்தில் சில நாட்கள் நடைப்பெற்றது. அடுத்ததாக பணிகள் ஸ்பெயினில் நடைப்பெறவுள்ளது. படத்தை பற்றிய மற்றொரு சுவாரசிய தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது.

திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் பிரசன்னா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இது குறித்து நடிகர் பிரசன்னா மனம் திறந்து அதைப்பற்றி அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் ' அன்புள்ள நண்பர்களே , இவ்வளவு நாள் நீங்கள்  எதிர்பார்த்த ஒரு விஷயம் இப்பொழுது உண்மையாகியுள்ளது. ஆம் நான் தல அஜித் குமார் சார் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கிறேன். மங்காத்தா திரைப்படம் வெளிவந்த நாட்களில் இருந்தே அஜித் சார் நடிக்கும் திரைப்படத்தில் நான் நடிக்கப்போகிறேன் என்ற வதந்தி பரவி வந்த நிலையில். தற்பொழுது அது உண்மையாகியுள்ளது.

இதை சாத்தியமாக்கிய கடவுள், அஜித் சார், சுரேஷ் சந்திரா சார், மைத்திரி மூவீஸ், ஆதிக் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. திரைப்படம் தற்பொழுது ஸ்பெயினில் படமாக்கப்பட்டு வருகிறது." என்று கூறியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com