என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதிக் ரவிச்சந்திரன்"

    பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் பங்கேற்றார்

    நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங் மீது காதல் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார்.

    ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.

    இந்நிலையில் அபுதாபி ரேஸிங் களத்தில் இசையமைப்பாளர் அனிருத் அஜித்தை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

    இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    கடைசியாக மலேசியாவில் நடந்த விஜய்யின் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அனிருத் தோன்றி இருந்த நிலையில் தற்போது அஜித்தை சந்தித்துள்ளார்.

    குட் பேட் அக்லி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் அஜித் புதிய படம் ஒன்றை நடிக்க உள்ளார். அஜித்தின் விடாமுயற்சி படத்தை போல இந்த படத்திற்கும் அனிருத் இசை அமைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  விடாமுயற்சி படத்தின் 'சவாதீக்கா' பாடல் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    அதே நேரம் குட் பேட் அக்லி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 

    • ஏ.எல்.விஜய் இயக்கத்தில், அஜித்தின் ரேஸிங் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
    • இந்த ஆவணப்படம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    நடிகர் அஜித்குமாரின் ரேசிங் மீதான ஆர்வம் மற்றும் பந்தயத்தில் அவர் செய்த சாதனைகளை குறித்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் தயாரித்து வருகிறார்.

    ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், சிறுத்தை சிவா, ஆதிக் ரவிச்சந்திரன், விஷ்ணுவர்தன் ஆகியோருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது
    • அஜித் சினிமாவை எந்தளவு நேசிக்கிறாரோ, அதே அளவு ரேஸிங்கையும் விரும்புகிறார்.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இப்படம் அஜித்குமார் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட்டாக அமைந்தது. அர்ஜுன் தாஸின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் நடிகர் பிரபு, பிரசன்னா, த்ரிஷா என பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் அஜித்தை வைத்து மீண்டும் ஒரு படம் எடுக்க உள்ளதாக இயக்குநர் ஆதிக் தெரிவித்துள்ளார். இப்படத்தின் சூட்டிங் அடுத்தாண்டு பிப்ரவரியில் தொடங்கும் எனவும் தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய அவர், 

    "முன்தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்டன. லொகேஷன்ஸ் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பிப்ரவரி இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கிவிடும். இந்தப் படம் ரொம்ப ஸ்பெஷலான படம். அஜித் சார் சினிமாவை எந்தளவு நேசிக்கிறாரோ, அதே அளவு ரேஸிங்கையும் விரும்புகிறார். இந்தியாவிற்கு மிகப்பெரிய பெருமையை தேடிக் கொடுத்திருக்கிறார். வரவிருக்கும் போட்டிகளிலும் அவர் சிறப்பாக வர நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்." என தெரிவித்தார்.  அஜித்தின் புதுப்பட அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

    • அஜித்குமார் திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
    • #33YearsOfAjithKumar என்ற ஹேஸ்டேக்கை அஜித் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

    நடிகர் அஜித்குமார் திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அதை கொண்டாடும் விதமாக #33YearsOfAjithKumar என்ற ஹேஸ்டேக்கை அஜித் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில், அஜித்குமாரின் 33 ஆண்டுகள் திரைத்துறையை பயணத்தை வாழ்த்தி குட் பேட் அக்லி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "33 வருட அற்புதமான பயணம். உங்கள் ஈடு இணையற்ற கடின உழைப்பு ஒரு அரிய ரத்தினம். உங்களை நேசிக்கிறேன் சார் #33YearsOfAJITHISM" என்று பதிவிட்டுள்ளார்.

    • நடிகர் அஜித் குமாரின் 64வது (AK64) படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்
    • Good Bad ugly படத்தில் பணியாற்றியவர்கள் இப்படத்திலும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

    குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித் குமாரின் 64வது (AK64) படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவலாக நெட்டிசங்களால் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் அதனை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உறுதி படுத்தியுள்ளார்.

    இப்படம் கேங்ஸ்டர் திரைப்படமாக அல்லாமல் வேறு விதமாக இருக்கும். கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கும் என ஆதிக் கூறியுள்ளார்.

    இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. Good Bad ugly படத்தில் பணியாற்றியவர்கள் இப்படத்திலும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த திரைப்படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, சுப்ரீம் சுந்தர் சண்டை இயக்குநராக பணிபுரிய உள்ளார். அஜித்திற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் மோகன்லால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அஜித் மற்றும் ஆதிக் கூட்டணி மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

    • Good Bad ugly படத்தில் பணியாற்றியவர்கள் இப்படத்திலும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
    • மோகன்லால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித் குமாரின் 64வது (AK64) படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.

    இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. Good Bad ugly படத்தில் பணியாற்றியவர்கள் இப்படத்திலும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த திரைப்படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, சுப்ரீம் சுந்தர் சண்டை இயக்குநராக பணிபுரிய உள்ளார். அஜித்திற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் மோகன்லால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் படத்தின் அறிவிப்பை விரைவில் அறிவிக்கப்போவதாக அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கின்றனர்.

    குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அஜித் மற்றும் ஆதிக் கூட்டணி மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. 

    • மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
    • ஏகே 64 படத்திற்கும் ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். மேலும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் கேரளாவிலும் வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில், 'குட் பேட் அக்லி' படம் வெளியாகி இன்றுடன் 50-வது நாள் ஆகிறது. இதனால் இணையத்தில் இப்படம் தொடர்பான காட்சிகள், வீடியோக்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து, நிறைய தருணங்களுடன் மறக்க முடியாத ஒரு படத்தை உருவாக்கியதற்கு நன்றி படத்தின் இயக்குனர் ஆதிக் நிவிச்சந்திரனுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்

    இந்தப்படம் மீண்டும் வெளியிடப்படும் ஒவ்வொரு முறையும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்யும் என்பது உறுதி. எனவே தயாரிப்பு நிறுவனம், 2026-ம் ஆண்டு மே 1-ந்தேதி அஜித்தின் 55வது பிறந்தநாளில் 'குட் பேட் அக்லி' படத்தை ரீரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. மேலும் ஏகே 64 படத்திற்கும் ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் அல்லது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.

    • இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
    • 'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் கடந்த 10-ந்தேதி வெளியானது.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் கடந்த 10-ந்தேதி வெளியானது. அஜித் ரசிர்களிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் வெளியாகி ஒரு வாரமே ஆன நிலையில் இந்தியாவில் ரூ.112 கோடி வரை வசூலித்துள்ளது.

    இந்த நிலையில், 'குட் பேட் அக்லி' படம் கேரளாவில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் 100 ஸ்கிரீன்களில் இருந்து 200 ஸ்கிரீன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
    • 'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம் அலைமோதியது. படம் வெளியாவதையொட்டி நேற்றுமுன்தினம் இரவு முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ள 'குட் பேட் அக்லி' படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, 'குட் பேட் அக்லி' முதல் நாளில் ரூ.30 கோடி ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • 'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.
    • இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்து திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியது. இந்நிலையில், 'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.

    குட் பேட் அக்லி' திரைப்படத்தை நடிகை ஷாலினி தனது மகளுடன் இணைந்து ரோகிணி திரையரங்கில் கண்டு ரசித்து வருகிறார்.

    • படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.
    • படத்தின் நேரளவு 2 மணி நேரம் 19 நிமிடங்களாக அமைந்துள்ளது.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்து திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியது. படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நேரளவு 2 மணி நேரம் 19 நிமிடங்களாக அமைந்துள்ளது.

    இதனை தொடர்ந்து, 'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம் அலைமோதியது. படம் வெளியாவதையொட்டி நேற்று இரவு முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தனர். திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    அதனை தொடர்ந்து, 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்த நடிகர்கள் ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை காண வந்தனர். 

    • அஜித் ரசிகர்கள் நேற்று இரவு முதலே திரையரங்குகளில் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • எனக்குப் பிடித்த நடிகருடன் சேர்ந்து நடித்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் நேற்று இரவு முதலே திரையரங்குகளில் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனிடையே, அஜித்துடன் நடித்தது குறித்து அவருடன் பணியாற்றிய நடிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அஜித்துடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாக நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து நடிகர் பிரசன்னா எக்ஸ் தள பக்கத்தில், எனக்குப் பிடித்த நடிகருடன் சேர்ந்து நடித்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. இந்த அல்டிமெட் ஜென்டில்மேன் உடன் செலவிட்ட தருணங்களை எப்போதும் நினைவில் கொள்வேன், லவ் யூ அஜித் சார். ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நன்றி... இதோ ராஜா வருகிறார் என பதிவிட்டுள்ளார். 

    ×