50 நாட்களை கடந்த குட் பேட் அக்லி.. ரசிகர்கள் போட்ட அன்புக் கட்டளை - அப்போ 'அது' உறுதி?

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.ஏகே 64 படத்திற்கும் ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
50 நாட்களை கடந்த குட் பேட் அக்லி.. ரசிகர்கள் போட்ட அன்புக் கட்டளை - அப்போ 'அது' உறுதி?
Published on

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். மேலும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் கேரளாவிலும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், 'குட் பேட் அக்லி' படம் வெளியாகி இன்றுடன் 50-வது நாள் ஆகிறது. இதனால் இணையத்தில் இப்படம் தொடர்பான காட்சிகள், வீடியோக்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, நிறைய தருணங்களுடன் மறக்க முடியாத ஒரு படத்தை உருவாக்கியதற்கு நன்றி படத்தின் இயக்குனர் ஆதிக் நிவிச்சந்திரனுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்

இந்தப்படம் மீண்டும் வெளியிடப்படும் ஒவ்வொரு முறையும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்யும் என்பது உறுதி. எனவே தயாரிப்பு நிறுவனம், 2026-ம் ஆண்டு மே 1-ந்தேதி அஜித்தின் 55வது பிறந்தநாளில் 'குட் பேட் அக்லி' படத்தை ரீரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. மேலும் ஏகே 64 படத்திற்கும் ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் அல்லது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com