என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அஜித் நடிக்கும் AK64 படத்தின் அறிவிப்பு விரைவில்...
    X

    அஜித் நடிக்கும் AK64 படத்தின் அறிவிப்பு விரைவில்...

    • Good Bad ugly படத்தில் பணியாற்றியவர்கள் இப்படத்திலும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
    • மோகன்லால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித் குமாரின் 64வது (AK64) படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.

    இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. Good Bad ugly படத்தில் பணியாற்றியவர்கள் இப்படத்திலும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த திரைப்படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, சுப்ரீம் சுந்தர் சண்டை இயக்குநராக பணிபுரிய உள்ளார். அஜித்திற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் மோகன்லால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் படத்தின் அறிவிப்பை விரைவில் அறிவிக்கப்போவதாக அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கின்றனர்.

    குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அஜித் மற்றும் ஆதிக் கூட்டணி மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

    Next Story
    ×